Connect with us

சினிமா

கைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… தீபாவளிக்கு வெளியாகிறது…

Published

on

கைதி படத்திற்கு தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதி திரைப்படம் வெளியாவதும் உறுதியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் இந்த கைதி.

இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாழுகின்றனர்.

இப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாகுவதற்கு முன்பே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

சினிமா

சார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…

Published

on

கலிஸ்டோ… ஒரு கட்டடத்தில் உள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அதை உருவாக்கியவர்களில் ஒரு பெண் கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை வைத்து மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அதை ஹேக் செய்து எளிதில் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதை என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதை அவரது டீம் லீடரிடம் சொல்ல அவர் அதை பயங்கரவாதிகளுக்கு விற்க முயல்கிறார். டீம் லீடர் அதை விற்றாரா? அதை வாங்க நினைப்பவர்கள் யார்? அதை எப்படி சார்லசின் ஏஞ்சல்கள் தடுத்தார்கள் என்பதுதான் சார்லஸ் ஏஞ்சல்ஸ் படம் நமக்கு சொல்லவருகிறது…
டிவி தொடராக வந்து 40 ஆண்டுகள் சினிமாவாக வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது ஏஞ்சல்ஸ் இன் அப்டேட்டட் வடிவம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது நிறைய போஸ்லிகள் அதாவது ஏஞ்சல்சுக்கு ட்ரெயினிங் கொடுத்து அவர்களை கெட்டு நடக்காமல் தடுக்க பயன்படுத்தும் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களிடம் ட்ரெயினிங் பெற்ற ஏஞ்சல்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் ஏஞ்சல்ஸ் விரிவடைந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் அப்டேட் செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை.
ஏஞ்செல்ஸ் படத்தில் இருக்கும் 3பெண்களின் அழகைவிட அவர்களது வேகம்தான் படத்தை சுவாரஸ்யமாக்கும். இந்த அப்டேட்டில் அது இல்லை. மூன்று தேவதைகளும் மிகவும் மெதுவாக சண்டையிடுகிறார்கள். நாட்டுக்கு நாடு ஓடுகிறார்களே தவிர படத்தில் பெரிய அளவில் வேறு எதுவும் இல்லை. அவர்களும் செய்யவில்லை. சின்ன சின்னதாக நகைச்சுவை, ட்விலைக்ட் சாஹாவின் நாயகி கிரிஸ்டின் ஸ்டீவர்ட், அலாவுதீன் (2019ல் வில் ஸ்மித் நடித்து வெளியான படம்) படத்தில் இளவரசியாக நடித்த நயோமி ஸ்காட், எல்லா பலின்ஸ்கா (சார்லஸ் ஏஞ்சல்சில் நடித்தவர் என அடுத்த படத்தில் சொல்லலாம். இப்போதுதான் வளர்ந்து வருகிறார்) ஆகிய மூன்று அழகு தேவதைகள் மட்டுமே படத்தின் பலம். அதாவது அவர்களது அழகு மட்டுமே பலம். மற்றபடி அவர்கள் நடிப்பு, ஆக்‌ஷன், கதை என எல்லாம் ரொம்ப சுமார் தான். இசை ஓரளவு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கிவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். தடுத்துவிடுவார்கள் தானே. முன்னர் சொன்னதுபோல அந்த அழகிகள் மட்டும் இல்லை என்றால் படத்தில் நிச்சயம் பாதியில் விட்டு வந்திருப்பேன். அவ்வளவு மெதுவாக சென்றது. அப்டேட் செய்திருக்கலாம். இல்லை என்றால் வேறு எதாவது புதிதாக முயற்சி செய்திருக்கலாம். சரி அவர்கள் பணம்… அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நமக்கு ஏன் வம்பு என்றால் அதை பார்க்க நாம் தானே பணம் கொடுக்கின்றோம்.
தேவதைகளை சும்மா ரசித்துவிட்டு வரலாம் என்று யோசனை இருந்தால் நிச்சயம் இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் போய்விட்டு வரலாம். மற்றபடி கொஞ்சம் பொருத்திருந்தால் ஸ்டார் மூவிசில் சீக்கிரமே வந்துவிடும்…

Continue Reading

விமர்சனம்

முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…

Published

on

தேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலையும் விஜய் சேதுபதி ஒரு கும்பலை அடித்து நொறுக்கி எடுக்கிறார். தேனியில் காப்பர் பேக்டரிக்கு முழுமையாக தடை கிடைத்ததா… சினிமா வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்ததா… சென்னையில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு தேனிக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் படம் தான் சங்கத்தமிழன்…

பல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தி… பல முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு… பல்வேறு வழக்குகளை சந்தித்து வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அப்படியும் இல்லாமல் ஒருவழியாக சனிக்கிழமை வெளியாகியது சங்கத்தமிழன்.
முருகன், சங்கத்தமிழன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இரண்டு விஜய் சேதுபதியா என கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ்… சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் முருகனாக சூரியுடன் சில காமெடிகள், சில சண்டைகள்… சில பாடல்கள்… பல பல வசனங்கள்… அதுவும் நீண்ட நீண்ட வசனங்கள் பேசி நடித்துள்ளார்.

தேனியில் பாசக்கார மகனாக அநியாயத்தை தட்டிக் கேட்கும் நல்லவனாக ஊர் மக்களின் பாசக்காரன் சங்கத்தமிழனாக சண்டை செய்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இல்லை.

வழக்கமான தமிழ் சினிமா பாணி தான். மரு வைத்தால் ஒருவன். மரு இல்லை என்றால் மற்றொருவன் என்பதுபோல… மீசை வைத்தால் முருகன்… மீசை இல்லை என்றால் சங்கத்தமிழன் என்பது மட்டுமே இரண்டு பேருக்குமான வித்தியாசம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார் என்று விஜய் சேதுபதிக்கு சொன்னாலும் சொன்னார்கள் மனிதன் நடிக்கவே மாட்டேன் என்கிறார். காதலியாக இருந்தாலும் சரி… வில்லானாகவும் இருந்தாலும் சரி. எம்ஜிஆர் பாணியில் எல்லோரையும் பேசியே சரி செய்கிறார். இவரது பேச்சை சகிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ராஷி கண்ணா சரக்கு அடிக்கும் அளவுக்கு போய்விடுகிறார் என்றால் பாருங்கள். ஒரே ஆறுதல் விஜய் சேதுபதியை திரையில் பார்ப்பதற்கு உருத்தாமல் இருக்கிறார் என்பது மட்டுமே. அந்த ஒரே காரணம்தான் இவரது அவ்வளவு பேச்சையும் சகிக்க வைக்கிறது.

சூரி காமெடி நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு ஓரளவு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதுக்கும் அவர் காரணம் இல்லை… விஜய் சேதுபதியின் டைமிங் வசனங்கள்தான். சூரியுடனான விஜய் சேதுபதி வசனங்கள் மட்டும் சுருக்கமாக நகைச்சுவையாக இருந்தது.

நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகிய இரண்டு கதா நாயகிகள்… இரண்டு விஜய் சேதுபதி என்றால் இரண்டு நாயகிகள் சரிதான் என்றுதானே பார்க்கிறீர்கள். அதான் அதை நான் சொல்ல மாட்டேன் சஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேனே. ஒரு கமர்சியல் படத்தில் ஒருநாயகியின் வேலையை கனகட்சிதமாக செய்துள்ளனர் இருவரும். கொஞ்சம் கவர்ச்சியாகவும் வருகிறார். அழகா இருக்கிறார். பெரிய இடத்துப் பெண் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் நாயகனை காதலும் செய்கிறார் ராஷி கண்ணா. மாமனை காதலித்து அது கை கூடாமல் இறந்து போகிறார் நிவேதா.

கர கர குரலில் அரசியல்வாதியாக ஒருவர்… பெரிய தொழிலதிபராக மற்றொருவர் என வில்லனாக இரண்டுபேர்… இரண்டு விஜய் சேதுபதிக்கு ரெண்டு வில்லன் என்று தானே காட்டுகிறீர்கள்… இல்லை. அந்த இரண்டில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது… விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கும் பெரிய அளவில் இதில் வேலையே இல்லை. தொழிலதிபர், அரசியல்வாதி என்ன செய்வார்கள். ஊருக்கு கெடுதல் செய்து நாயகனின் குடும்பத்தில் ஒருசிலரை கொலை செய்துவிட்டு அடிவாங்குவார்கள்… அதை அப்படியே செய்திருக்கிறார்கள்…

வாலு, ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களுக்கு அடுத்து மூன்றாவதாக சங்கத்தமிழனை இயக்கி உள்ளார் விஜய் சந்தர். உலக சினிமா காட்சிகளைத்தான் எல்லோரும் பார்த்து காப்பி அடிப்பார்கள் என்றால் இவர் தமிழ் சினிமா படங்களையே காப்பி அடித்து வைத்திருக்கிறார். காதல், சண்டை, குடும்பம், நகைச்சுவை என எல்லாவற்றையும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ் போன்றோரின் படங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார். அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ், இசையமைப்பாளர் விவேக் மெர்வின் கமர்சியல் படங்களுக்கு தேவையான தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்துள்ளனர். வேறு என்ன சொல்ல சுமார் என்றா?

என்னதான் சொல்ல வார. இந்தப் படத்தைப்பாக்கலாமா வேண்டாமா எனக் கேட்பது கேட்கிறது. முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… விஜய் சேதுபதி பேசும் 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் இரண்டாம் பாதியில் சில கணிக்கக் கூடிய ட்விஸ்டுகளோடு உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இல்லை விஜய் சேதுபதி திரையில் வந்தாலே போதும் 2 மணி நேரம் பார்க்கத் தயார் என்றால் நிச்சயம் இது ஒரு நல்ல படமாக உங்களுக்கு இருக்கும்… சுமாரான சுவாரஸ்யமில்லாத முன்கூட்டியே கணிக்க காட்சிகளுடன் கூடிய படம் தான் சங்கத்தமிழன்…

Continue Reading

விமர்சனம்

போர்டு வி பெர்ராரி (Ford v Ferraari)… இந்த வார ரேஸில் வெற்றி பெற்றது போர்டு வி பெர்ராரி தான்…

Published

on

1960களில் போர்டு கம்பெனி கார்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. அப்போது போர்டு கம்பெனியின் தலைவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். மூன்று நாட்கள் கால அவகாசம். அதற்கு புதிய ஐடியாவோடு வருபவர்களுக்கே போர்டு கம்பெனியில் வேலை. அப்படி ஐடியா இல்லாதவர்களுக்கு வேலை இல்லை.

வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என. மூன்றாவது நாளில் அதன் மார்கெட்டிங் மேனாஜர் போர்டு கம்பெனி தன்னை காலத்திற்கு ஏற்ற மாதிரி புதுப்பித்துக்கொள்ளவில்லை. அப்போது விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் பெர்ராரி கம்பெனியின் வெற்றிக்குக் காரணம் அவர்களின் ஸ்போர்ட் கார்கள் தான். எனவே போர்டு கம்பெனியை பெர்ராரியுடன் இணைத்துவிடலாம் என்ற ஐடியா தருகிறார். அதற்கான முயற்சியில் போர்டு கம்பெனியை பெர்ராரி கம்பெனி நிராகரித்துவிடுகிறது. அவமானப்படுத்துகிறது. அப்புறம் என்ன நம்ம தலைவர் ரஜினி பாணிதான். அசோக் இந்த நாளை உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள் என்று போர்டு கம்பெனி ரேஸ் கார் தயாரிக்க முடிவு எடுக்கின்றது. அதுமட்டுமல்ல அந்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் 24 மணி நேர லே மேன்ஸ் என்ற ரேசில் வெற்றி பெற வேண்டும் என்றும் முடிவு எடுக்கிறது. போர்டு ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்தார்களா? லே மேன்சில் வெற்றி பெற்றார்களா? மேட் டேமன், கிரிஸ்டின் பேலின் பங்கு என்ன என்பது தான் போர்டு வி பெர்ராரி கதை…

This image released by 20th Century fox shows Christian Bale in a scene from “Ford v. Ferrari,” in theaters on Nov. 15. (Merrick Morton/20th Century Fox via AP)

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் படம். 1960களில் நடக்கும் படம்… ஆரம்பம் முதலே ஒரு பரபரப்பு படத்தில் இருந்து ஆடியன்சுக்கு தொற்றிக் கொள்கிறது. அது இறுதிவரை நீடிக்கிறது. ரேஸ்… அதில் நடக்கும் அரசியல் என படம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது…

லே மேன்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஒரே அமெரிக்கனாகக் காரல் ஷெல்பியாக நடித்திருக்கிறார் மேட் டேமன். ரேசில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அதனால் நடக்கும் விபத்தில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ரேஸ் ஓட்டமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். ரேசில் இருந்து வெளியேறி ரேஸ் கார் விற்பனை செய்யும் தொழிலை நடத்துகிறார். இயல்பான நடிப்பு. இதுபோல பல படங்களில் நடித்தவருக்கு இது அவ்வளவு பெரிய சவாலான பாத்திரம் இல்லைதான்.

கென் மைல்ஸ் ஆக கிரிஸ்டின் பேல்… இதெல்லாம் ஒரு பாத்திரமான அவருக்கு என்றாலும் மனிதன் தன்னுடைய முழு திறனை அதில் காட்டியுள்ளார். ராணுவத்திலிருந்து வந்து கார் மெக்கானிக்காக இருக்கும் கிரிஸ்டின் பேல் லோக்கல் ரேஸ்களில் தன்னுடைய மகனுடன் சென்று பங்கு பெற்று வருகிறார். தன் மகன் மீது பாசம் காட்டும்போது, மனைவி மீது காதலால் உருவாகுவது, போர்டுக்காக தான் தயாரித்த காரை நீண்ட பயிற்சி எடுத்ததை தான் ஓட்ட முடியாது என வரும்போது ஏமாற்றாத்தை என மனிதனுக்கு நடிக்க பல வாய்ப்புகள். அத்தனையிலும் 7000 மைல் வேகத்தில் செல்கிறார். அவ்வளவு அட்டகாச அலாட்டான நடிப்பு.
மேட் டேமன்… கிரிஸ்டின் பேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் கார் தான் போர்டு கம்பெனிக்கு லே மேன்ஸ் ரேசில் வெற்றியை பெற்றுத்தருகிறது. ஆனால், இதற்கு இடையில் வழக்கமான சில துரோகங்களும் நடக்கின்றன.

படத்தில் மூன்று ரேஸ் காட்சிகள் இருக்கின்றன. மூன்றும் அட்டகாசம். அவ்வளவு விருவிருப்பு… படத்திற்கு ஏற்ற இசை… இதன் மற்றொரு பலம்… ஒட்டுமொத்த படத்தையும் மேட் டேமனுடன் சேர்ந்து கிரிஸ்டின் பேல் தாங்கி நிலை நிறுத்துகிறார்.

இயக்கம் லோகன், வூல்வரின் படங்களை இயக்கிய ஜேம்ஸ் மேன்கோல்டு… இதைவிட இயக்கம் பற்றி வேறு என்ன சொல்ல முடியும். அந்த இரண்டு படங்களைப் போலவே ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அசத்தியிருக்கிறார்.

படத்தில் குறை என்று எதுவும் எனக்கு தெரியவில்லை. நல்ல ஆக்‌ஷன் பட ரசிகர் என்றால் இந்தப் படம் நிச்சயம் உங்களை கவரும். தமிழ்நாட்டில் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளியாகவில்லை. அதனால் இதன் டார்கெட் ஆடியன்ஸை இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் திருப்திபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue Reading
சினிமா3 hours ago

சார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்24 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்24 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/11/2019)

விமர்சனம்1 day ago

முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…

விமர்சனம்1 day ago

போர்டு வி பெர்ராரி (Ford v Ferraari)… இந்த வார ரேஸில் வெற்றி பெற்றது போர்டு வி பெர்ராரி தான்…

Doctor Sleep Movie Review In Tamil
விமர்சனம்1 day ago

டாக்டர் ஸ்லீப் விமர்சனம்… (Doctor Sleep) பெயரை பார்த்து கொஞ்சம் உஷாராகியிருக்கவேண்டும்…

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் நவம்பர் 17 முதல் 23 வரை )

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (17/11/2019)

பர்சனல் ஃபினாஸ்2 days ago

வாகனம் தொலைந்துவிட்டதா? உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

வேலை வாய்ப்பு6 days ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா4 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா4 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு3 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்4 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Uncategorized1 month ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 month ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 months ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ2 months ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ3 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ3 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ4 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ5 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ5 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ5 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending