Connect with us

சினிமா

ஜோக்கர் விமர்சனம்… மீண்டும் ஒருமுறை ஆஸ்காருக்கு தயாராகிவிட்டார் இந்த ஜோக்கர்…

Published

on

ஜோக்கர் படத்துக்கான விமர்சனம் அல்ல… இது ஒரு அறிமுகம் என்று சொல்லலாம்… சில படங்களை நாம் தவறவே விடக்கூடாது என்று சொல்வோம். அப்படியான ஒரு படம்தான் இந்த ஜோக்கர். பீனிக்ஸின் அட்டகாசமான நடிப்பு… டோட் பிளிப்பின்சின் இயக்கம் இவற்றுக்காகவே இதைக் கொண்டாட வேண்டும்…

Joker Movie Review in Tamil

உலகியே ரசிகர்களுக்கு ஒரு வில்லனை பிடிக்கும் என்றால் அது ஜோக்கர் கதாபாத்திரத்தை வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இதுவரை ஜோக்கர் கதாபாத்திரத்தை 1989ல் வெளியான பேட் மேன் படத்தில் ஜாக் நிக்கோலஸ், 2008ல் வெளியான டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ச்சர், 2016ல் வெளியான சூசைடு ஸ்குவாடு படத்தில் ஜாரெட் லெடோ ஆகியோர் செய்துள்ளனர். இது தவிர சில அனிமேசன் படங்களிலும் ஜோக்கர் கதாபாத்திரம் வந்துள்ளது. ஜோக்கர் கதாபாத்திரம் எந்த வடிவில் வந்தாலும் அந்தக் கதாபாத்திரம் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம்.

ஜோக்கர் என்றால் பொதுவெளியில் அது ஒரு வெகுளி, தன்னுடைய வெகுளித்தனத்தால் எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். ஆனால், இந்த ஜோக்கர் எதன் மீதும் பற்று இல்லாமல், யார் மீதும் பாசம் இல்லாமல் முரட்டுத்தனமாக, கிறுக்குத்தனத்தோடு எப்போதும் குரூரத்தோடு வாழ்க்கையிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பதும்தான் ஜோக்கர்.

Joker Poster

Joker Movie Review in Tamil

டிசி வடிவமைச்ச சூப்பர் ஹீரோக்களை எல்லாம் விட அதன் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது ஜோக்கர் கதாபாத்திரம் தான். இதற்கு காராணம் டார்க் நைட் படத்தில் ஜோக்கராக நடித்திருந்த ஹீத் லெட்சர் தான். அந்த ஒள்ளியான உருவத்தை வைத்து மிரட்டியிருப்பார் மனுசன். அந்த சிரிப்பு, அவரது குரல் எல்லாம் எப்போது பார்த்தாலும் ஒரு பயத்தை ரசிகனிடம் ஏற்படுத்திவிடும். முதல் ஜோக்கர் கதாபாத்திரத்தை நான் பார்த்ததில்லை. அதற்கு அடுத்து அந்த சூசைடு ஸ்குவாடிலும் ஜோக்கர் கதாபாத்திரம் அதன் தன்மையில் மாராமல் ஓரளவு சிறப்பாகவே செய்திருப்பார் ஜாரெட்.

இப்போது வெளியாகி இருக்கும் ‘ஜோக்கர்’ படம் ஆர்தர் பெளிக்ஸ் என்ற கல்யாணம் ஆகாத நடுத்துர வயதானவர் உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவிற்காகவே திருமணம் ஆகாத பாசக்காரர். யாராவது தன்மீது அக்கறை காட்டிவிட மாட்டார்களா என ஏங்கும் ஒருவர் சாமானியர். எல்லோராலும் அவமானத்துக்கும் தவிர்ப்புக்கும் உள்ளாகும் ஒரு மனிதன். ஏமாற்றம், துன்பம் என எல்லாத்தையும் அனுபவிக்கும் ஒருவன். “என் வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட சந்தோசத்தை அனுபவித்ததில்லை” என்று கூறும் ஒருவன். எப்படி ஜோக்கராக மாறினார் என்பதை சொல்கிறது. எப்படி அவ்வளவு குரூரமாக தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டது என்பதைச் சொல்கிறது.

இதில் ஜோக்கர் கதாபாத்திரத்தில் ஜாக்கின் பீனிக்ஸ் நடித்திருக்கிறார். கிளாடியேட்டர் படத்தில் நடித்த அதே பீனிக்ஸ் தான்… இது ஒரு கிளிசேவான வசனம் தான் என்றாலும் மனிதன் ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தனி மனிதனாக இந்தப் படத்தை அந்தச் சின்ன உடலில், தோளில் தூக்கி வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஜோக்கர் மீண்டும் ஒருமுறை ஆஸ்கார் வாங்கிவிடுவார். படத்தின் அடுத்த முக்கிய பலம் இசை. ஜோக்கரின் உணர்வுகளை காட்சிகளுக்கு நிகராக இசையும் பார்வையாளனிடம் கடத்திச்செல்கிறது. வசனம், இயக்கம் என எல்லா வகையிலும் இந்த ஜோக்கர் ஒரு அட்டகாசமான படமாக வந்திருக்கிறது.

 

Joker Poster

Joker Movie Review in Tamil

டிசி.யின் கதாபாத்திரம் தான் ஜோக்கர், தாமஸ் வெயின், ப்ரூஸ் வெயின் (பேட் மேன் காதாபத்திரம், சிறு வயது) கௌதம் சிட்டி என பேட் மேன் படங்களில் வரும் எல்லாமும் வருகின்றன. இது ஜோக்கர் கதாபாத்திரம் உருவான விதமும் தான் என்றாலும் முந்தைய படங்களைப் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. இதை தனியாகப் பார்த்தாலும் இது நமக்குப் புரியும்.

ஜோக்கர் கதாபாத்திரத்தின் மனச்சிக்கலை, அதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் நிச்சயம் புரிந்துகொள்வோம்.


ஒருவருடைய குணத்தை சொல்ல வேண்டும் என்றால் அவர் எல்லாத்துக்கும் கோபப்படுபவர், பயப்படுபவர், வாழத்தெரியாதவர், பணத்தின் பின்னாடி செல்பவர் என ஒன்றை அடையாளமாகச் சொல்லுவோம். அப்படி ஒருவருடைய அடையாளமாக ஒன்று மாறுவதற்குக் காரணம் அவர் காரணமல்ல. அவரைச் சுற்றி இருக்கும் சமூகம் தான் முழுமுதற்காரணம். ஜோக்கர் இப்படி மாறுவதற்கு காரணமும் அந்த சமூகம் தான். இதை அழுத்தம் திருத்தமாக அட்டகாசமாக சொல்லியிருக்கும் படம் தான் ஜோக்கர்…

டிசி ஃபேன் மட்டும் அல்ல… மார்வெல் ஃபேனுக்கும் இந்த ஜோக்கரும் பிடிக்கும். ஹீத் லெச்சரை இந்த பீனிக்ஸ் மறக்கடிப்பார்.

Joker

Joker Movie Review in Tamil

பி.கு. தியேட்டரில் 2டியில் முழு திரையில் தெரியவில்லை. அதனால் ஐ மேக்ஸில் சென்று பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்…

சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

Published

on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலஒ வழக்கில் புதிய திருப்பமாக, சுஷாந்த் சிங்கின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுஷாந்தின் வங்கி கணக்கைத் தோழி மற்றும் குடும்பத்தினர் கையாண்டது அம்பலம் ஆகியுள்ளது.

சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா மத்திய பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணைக்காக பாட்னா காவல்துறையினர் மும்பை சென்றனர். இந்த வழக்கில் இதுவரைக்கும் 40 பேரின் வாக்குமூலங்களை மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Continue Reading

கட்டுரைகள்

EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன?

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவை மறந்து அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக EIA 2020 (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020) உள்ளது. எனவே EIA 2020 என்றால் என்ன? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும்.

அதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு அந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்து, வர இருக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்றால் அனுமதியும், ஆபத்து எனில் அனுமதியை மறுக்கவும் செய்யும்.

உதாரணத்திற்கு, நீங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ரசாயன தொழிற்சாலை தொடங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சம்மந்தப்பட்ட நிறுவனம் அங்கு தொழிற்சாலையைத் தொடங்கும் முன்பு தொழிற்சாலை அமைக்கப்படும் வடிவம், பரப்பளவு, அதிலிருந்து வெளியாகும் கழிவுகள், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளைப் பாதிப்பு ஏற்படாதபடி வெளியேற்றுவதற்கான வழிமுறை குறித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

அதனை ஆய்வு செய்யும் அரசு, பசுமை தீர்ப்பாயம் மற்றும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்கும். பின்னர் அதில் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போது அனுமதியளிக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ எதிர்க்க என்ன காரணம்?

மேலே உள்ளதைப் படிக்கும் போது, இது நல்லது தானே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி எழும். ஆனால் சுற்றுச்சூழல் தாக்கச் சட்டம் 2006 உள்ள போதே பல நிறுவனங்கள் அதற்கு எதிராக தங்களது தொழிற்சாலையாகச் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதற்குத் தமிழகத்தில் ஸ்டெர்லைட், ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் சாட்சி.

இந்நிலையில் 2020 மார்ச் 12-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், அதில் ஏராளமான குறைகள் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் தலையிட்ட நீதிமன்றம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையை 22 மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை மதிக்காத அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்துக் கேட்கவும் உத்தரவிட்டுள்ளது. அதற்கு 20 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கச் சட்டங்கள் ஓர் அளவுக்குக் கடுமையாக உள்ள போதே நிறுவனங்கள் அதை மதிக்காமல் செயல்படுகின்றன என்று கூறப்படும் நிலையில், நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பல திருத்தங்களைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல் செய்துள்ளது என்பதே அதை எதிர்ப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

EIA-2020 வரைவு அறிக்கை நகல்:

Continue Reading

சினிமா செய்திகள்

நடிகர் ஷாம் திடீர் கைது.. பின்னணி என்ன?

Published

on

சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாகச் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றிரவு காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாகச் சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே காவல்துறைக்கு இந்த சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தும், காவல்துறை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Continue Reading
வேலை வாய்ப்பு9 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா12 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு12 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ2 weeks ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்5 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்5 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்5 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்5 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்5 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்5 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்5 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

Trending

%d bloggers like this: