Connect with us

சினிமா

ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட் – ஜெயப்பிரதாவாக நடிக்கிறார்!

Published

on

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அண்மை காலமாக மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

இந்நிலையில், என்.டி.ஆர் பயோபிக்கில் தமன்னா நடிக்கவிருந்த ஜெயப்பிரதா கதாபாத்திரத்திற்கு தற்போது ஹன்சிகா தேர்வாகியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளமே என்.டி.ஆர் பயோபிக் படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் ஹன்சிகாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

தமிழில் தற்போது, விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, லீடு ரோலில் மகா போன்ற படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.

 

சினிமா

திரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…

Published

on

பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் ட்ரெயிலர்கள் வெளியாகும்போதுதான் எந்த திரைப்படம் ட்ரெண்டிங்கில் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களின் ட்ரெயிலர்கள் முதல் மூன்று ட்ரெண்டிங்கில் இருந்து போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன… அவற்றை பார்க்கலாம்…

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று மாலை யுட்யூபில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பார்வையை பெற்றுள்ள காப்பான் திரைப்படம் யுட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்குமுன் சூர்யாவுக்கு எப்போ படம் ஹிட் ஆனது என்று யோசிக்கும் அளவுக்கு சூர்யாவின் நிலைமை உள்ளது. மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவாது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. செப்.20 தெரிந்துவிடும்… காப்பான் சூர்யாவை காப்பாற்றினாரா இல்லையா என்பதை…

முதல் ட்ரெயிலர் சாயிஷாவுக்கும் சூர்யாவுக்குமான காதலை காட்டியது என்றால் இந்த ட்ரெயிலர் சூர்யாவின் அதிரடி காட்சிகளுடன் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுட்யூபில் இரண்டாவது இடத்தில் இருப்பது விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கியுள்ள ஆக்‌ஷன் படம். சுந்தர் சி. தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து வெளியில் வந்து படத்தின் பெயரைப்போல ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. சில காட்சிகள் சமீபத்தில் வெளியான சாஹோ படத்தின் காட்சிகளை நினைவூட்டுகின்றன என்றாலும் சுந்தர் சி. நிச்சயம் நம் காசுக்கு மரியாதை சேர்ப்பார் என்று நம்பலாம். இப்போதுதான் டீசர் வெளியாகி இரண்டு நாள்களில் 3.7மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இரும்புத்திரைக்குப் பிறகு பெரிய வெற்றி இல்லாத விஷாலுக்கு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என அவரை போல நாமும் நம்பலாம். படப்பிடிப்பு விரைவில் முடிந்து திரைக்கு வர உள்ளது ஆக்‌ஷன் நிறைந்த ஆக்‌ஷன் படம்…

ட்ரெண்டிங்கில் 3வது இடத்தில் இருக்கும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை. ரஜினி முருகனுக்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்கிற எஸ் கே. கடைகுட்டி சிங்கத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு குடும்ப கதையை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். பாண்டிராஜுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல நம்ம வீட்டு பிள்ளையும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 2.5மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் எஸ்கேவுக்கு இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்பலாம்

இது ட்ரெயிலர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. ட்ரெயிலர்களை பற்றிய அறிமுகம் தான்…

Continue Reading

சினிமா செய்திகள்

செப்டம்பர் 19-ம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா!

Published

on

நடிகர் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும், ஏ.ஆர்.ரகுமான் படத்தின் பாடல்களை ரசிகர்களுக்காகப் பாட உள்ளார்.

ஏற்கனவே பிகில் திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

காப்பான் கதை திருட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Published

on

சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் காப்பான்.

காப்பான் திரைப்படத்தின் கதையும், தன்னுடைய சரவெடி திரைப்பட கதையும் ஒன்று என ஜான் சார்லஸ் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த காப்பான் திரைப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது, முகம் தெரியாத நபர்களிடம் நான் கதை கேட்பதில்லை, கதையும் திருடப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது கதை திருடப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்வது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




பர்சனல் ஃபினாஸ்6 hours ago

இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்7 hours ago

இன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

சினிமா16 hours ago

திரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…

தமிழ்நாடு23 hours ago

பால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி!

weekly prediction, வாரபலன்
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)

செய்திகள்2 days ago

நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை!

சினிமா2 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 weeks ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா2 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 month ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 weeks ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா1 month ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

வீடியோ2 weeks ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ1 month ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ3 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ3 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ3 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ3 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

வீடியோ3 months ago

வழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்!

Trending