சினிமா
மீண்டும் என் இடத்தை பிடிப்பேன்: இலியானா அதிரடி!


தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா கோலிவுட், பாலிவுட் என நகர தொடங்கினார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக முடியாத நிலையில், மீண்டும் டோலிவுட்டிற்கு வந்துள்ளார்.
ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தில் நாயகியாக இலியானா நடித்துள்ளார். இப்படத்தின் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இலியானா, டோலிவுட்டில் மீண்டும் என் முதலிடத்தை பிடிப்பேன் அதற்கு இந்த படம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
ரவிதேஜா இலியானா நடிப்பில் வெளியான கிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜெயம் ரவி தமன்னா நடித்த தில்லாலங்கடி என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
அப்துல்கலாம் நியமனம் செய்த காமெடி நடிகருக்கு மத்திய அரசின் விருது!


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட காமெடி நடிகர் ஒருவருக்கு மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக நியமனம் செய்யப்பட்டவர் நடிகர் தாமு. இவர் பாலசந்தர் இயக்கிய ’வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த தாமு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கும் மாரி செல்வராஜ்: உறுதி செய்யப்பட்ட தகவல்!


தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் ’கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பணிகளில் மாரிசெல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது மற்றொரு படத்தையும் மாரிசெல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டது என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on,
Shoot will commence next year.— Dhanush (@dhanushkraja) April 23, 2021
’கர்ணன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் தனுஷ்-மாரி செல்வராஜ் இணையவிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
கொரோனாவுக்கு பலியான பிரபல இசையமைப்பாளர்: திரையுலகினர் இரங்கல்


பிரபல இசையமைப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பாலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்கள் ஆக இருந்தவர்கள் நதீம்-ஷர்வன் ஆகிய இரட்டையர்கள். இந்த இரட்டையர்களின் இசையமைப்பில் உருவான பல திரைப் படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Our Music community and your fans will miss you immensely #ShravanRathod ji Rest in peace 🌺Respect and Prayers🌹🇮🇳
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) April 22, 2021
இசையமைப்பாளர் ஷர்வன் அவர்களின் மறைவு குறித்து கேள்விப்பட்ட திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான், அக்ஷய் குமார், ஸ்ரேயா கோஷல் உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஷர்வன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மிகப் பெரிய இசை மேதையான ஷர்வன் அவர்களின் மறைவு பாலிவுட் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என்று அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
சினிமா செய்திகள்2 days ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்