கிசு கிசு
ஈஸ்வரன் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாது.. திரை அரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!


சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த திரைப்படம் ஈஸ்வரன். சிம்பு நடிப்பில் குறைந்த காலத்தில் தயாரான ஈஸ்வரன் கண்டிப்பாகத் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் திரை அரங்குகளில் ஈஸ்வரன் படம் வெளியானாலும் கோரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
எனவே இந்தியாவில் திரை அரங்குகளிலும், வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் ஜனவரி 14-ம் தேதி ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஈஸ்வரன் படத்தைத் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால், அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இது நமது வாழ்வாதார பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் என்று தெரிவித்துள்ளார்.
சிம்பு படம் என்றாலே வெளியாவதில் சிக்கல்தான். முன்பு அது சிம்புவால் நடந்தது. இப்போது அது தயாரிப்பாளரால் நடந்துவிடும் போல. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விரைவில் ஈஸ்வரன் படக் குழுவினர் இது குறித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிசு கிசு
‘ஆதித்ய வர்மா’ பட நாயகிக்கு கொரோனா.. சிகிச்சைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம்!


ஆதித்யா வர்மா நாயகி பனிதா சந்து, கொரோனா பரிசோதனைக்கு வராமல் அடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ஆதித்ய வர்மா. இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்தவர் பனிதா சந்து. லண்டனில் வசித்து வரும் இவர், படப்பிடிப்பு நாட்களில் மட்டும் இந்தியா வந்து செல்வார். இப்போது கவிதா அண்ட் தெரசா என்ற இங்கிலீஷ் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக பனிதா கடந்த 20 ஆம் தேதி லண்டனில் இருந்து கொல்கத்தா வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பனிதாவிற்கு தொற்று இல்லை என அறியப்பட்டது. இதனால் அவர் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால், அவருடன் விமானத்தில் வந்த சக பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அன்றைய தேதியில் அந்த விமானத்தில் வந்த அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சுகாதாரத்துறையினர் பனிதாவை கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸில் கூட்டிச் சென்றனர். ஆனால், கொரோனா பரிசோதனை நடத்தப்படும் மையம் அசுத்தமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருப்பதாக கூறி பனிதா ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ கூறியும், ஒரு அடி கூட எடுத்து வைக்க மறுத்துவிட்டார்.
பின்பு, இங்கிலாந்து தூதரகத்தின் அறிவுறுத்தலின் பெயரில், தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
கிசு கிசு
மீண்டும் இணையும் யுவன், ராஜேஷ், ஜீவாவின் எஸ்எம்ஸ் கூட்டணி?


ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்த. இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக யுவனின் இசையில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்று வரை பாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளளிட்ட திரைப்படங்களும் சக்கை போடு போட்டன. இதனால் ராஜேஷ் இயக்கவிருக்கும் திரைப்படம் மீது ரசிகர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், எஸ்எம்எஸ் பட கூட்டணி தற்போது மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை மீண்டும் இணைந்தால், அந்த படத்தின் படப்பிடிப்பு 2021 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்எம்எஸ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அதே ஸ்டைலில், அதே பாணியில் மீண்டும் ஒரு படம் அமைந்தால் வெற்றிக்கு பஞ்சமில்லை.
கிசு கிசு
சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மூன்றெழுத்து நடிகரும் போட்டி?


வருகிற சட்டமன்றதேர்தலில் திரைத்துறையில் முக்கிய பதவியில் வகிப்பவரும், ஆறடி உயர மூன்றெழுத்து நடிகரும் போட்டியிடுகிறார்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் வருகிறது. எப்போதும் போல் அல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபெரும் ஜாம்பவான்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும். அதற்கு மாற்றாய் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த, கமல் என அனைவரும் களத்தில் குதித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் விஷாலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், அரசியல் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத விஷாலின் வேட்பு மனுவானது பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)