Connect with us

சினிமா

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் மூன்று தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அபிராமியை முகின் சேரை தூக்கி அடிக்க பாயும் வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீடு நேற்று பிக் பாஸ் ஹோட்டலாக மாற்றப்பட்டது. இதில் சிறப்பு விருந்தாளியாக மீண்டும் அங்கு நுழைந்தார் வனிதா. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் அங்கு விருந்தினராக சென்றுள்ளது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அதிரடிகளுக்கு பெயர்போன வனிதா வந்த உடனே தனது அதிரடிகளை ஆரம்பித்துவிட்டார். நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை ஒவ்வொருவராக தனது கேள்விகளால் வனிதா கலங்கடித்தார்.

இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் அபிராமியை அழைத்து பேசும் வனிதா முகின் குறித்து பேசுகிறார். அப்போது சில அட்வைஸ் வழங்கும் வனிதா முகின் குறித்து சில விஷயங்களை அபிராமியிடம் கூறி பற்றவைக்கிறார். இதனையடுத்து ஹாலில் அனைவரும் இருக்கும் போது அபிராமிக்கும் முகினுக்கும் இடையே சண்டை ஆரம்பிக்கிறது.

இந்த சண்டையின் போது மிகவும் ஆவேசமாக பேசும் அபிராமி ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து முகினை வாடா போடா என மரியாதையில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். இதனால் உடனடியாக கோபப்படும் முகின் வழக்கம் போல சத்தம் போட்டுக்கொண்டு தான் இருந்த சேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்கிறார். இதனால் பதற்றமான மற்ற போட்டியாளர்கள் அவரை பிடித்து சமாதானம் செய்ய முயல்கின்றனர். இந்த புரோமோ வெளியாகி பிக் பாஸ் வீடு இன்று கலவரமாக உள்ளது என்பதை காட்டியுள்ளது.

சினிமா

ஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்பதைச் சொல்ல ஒரு படம்…

Published

on

கறிக்காக கொண்டுவரும் ஒரு எருமை வெட்டுவதற்குமுன் தப்பித்து ஓடுகிறது. தப்பித்து ஓடிய அந்த எருமையைப் பிடிக்க ஒரு கிராமமே கிளம்புகிறது. அந்த எருமையைப் பிடித்தார்களா? கறி ஆக்கினார்களா என்பது தான் இந்த ஜல்லிக்கட்டு.

கேட்கவும் பார்க்கவும் சின்ன கதையாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன கதையை அதன் வாழ்வியலோடு அழகாக சொல்வதுதான் லிஜோ ஜோசின் படமாக்கும் முறை. அப்படித்தான் இந்த ஜல்லிக்கட்டையும் படமாக்கியிருக்கிறார் லிஜோ. படத்தின் ஆரம்பம் முதல் பத்து நிமிடங்கள் வெறும் சத்தங்கள் மூலமே நகர்த்துகிறார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வயதானவரின் மூச்சு விடும் சத்தம். இரவில் கேட்டும் வாட்ச் சத்தம், பறவைகள், விலங்குகளின் சத்தம், காலையில் மாட்டுக்கறி வெட்டும் சத்தம் என முழுவதும் சத்தம் அதன் காட்சிகளாகவே நகர்த்துகிறார்.

அங்கமாலி டைரி, இ ம யூ படங்களில் நடித்த ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதிலும் நடித்துள்ளார்கள். அதே எதார்த்தமான நடிப்புடன்.

இவ்வளவு தான் கதை என்று தெரிந்தபின் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறோம் என்பதில்தான் மிகப்பெரிய சவாலே இருக்கிறது. அந்த சவாலில் லிஜோ இந்தப் படத்தில் கொஞ்சம் சருக்கியிருக்கிறார். ஒரு கதை அதன் களம் இவற்றை அழகாக காட்டும் லிஜோ அந்தக் கதை இயக்கப்பட்டது தெரியாமலே ரம்மியமாக காட்சி அமைப்புகளின் மூலம் சொல்லி செல்வார். ஆனால், இந்தப் படம் முழுவதும் எருமையை துறத்திக்கொண்டே இருக்க வைத்திருக்கிறார். அது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. ஒரு திருப்பமோ, ரசிகனை அடடா என ஆச்சர்யப்படுத்தும் விசயமோ இல்லை. சில நேரங்களில் எப்படா முடியும் என்று ஆகிவிடுகிறது. இத்தனைக்கும் படம் 1.30மணி நேரம் தான்.

இந்தச் சின்னக் கதைகள் மனிதனின் வக்கிரத்தை சொல்லியிருக்கிறார். உண்மையில் மிருகமாக யார் இருக்கிறார்கள். நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று சொன்னாலும் இன்னும் எவ்வளவு கொடூரங்களை தன் மனத்தில் மனிதன் அதுவும் ஆண் தூக்கிச் சுமக்கின்றான் என்பதையே இந்தப் படம் சொல்ல வருகிறது. அதற்கு எருமை சுற்றுவட்டார கிராம ஆண்களின் ஆண்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்த ஒற்றை மிருகம். இதையெல்லாம் சொல்வதற்குள் இந்தப் படம் கொஞ்சம் நம்மை சோதித்து விடுகிறது.

மற்றபடி மலையாள படத்தில் இருக்கும் ஊர் அழகு, மாட்டுக்கறி வாசம், சின்னதாக ஒரு காதல், கொண்டாட்டம் என அத்தனையும் இருக்கிறது. ஒரு கருத்து சொல்லும் படத்தை கொஞ்சம் சத்தத்தை பொறுத்துக்கொண்டு பார்க்கமுடியும் என்றால் இந்தப் படம் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். மொத்தமாக இல்லை என்றாலும் கொஞ்சமாக ரசிக்க வைக்கிறது இந்த ஜல்லிக்கட்டு… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்ற ஜி.நாகராஜனின் ஒற்றை வரிக்கான படமாகவும் உள்ளது இது…

Continue Reading

சினிமா

மெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…

Published

on

மெலேபிசென்ட். காட்டில் வாழும் ஒரு தேவதைக்கும் எதார்த்தமாக சந்திக்கும் ஒரு சிறுவனுக்கு நட்பு உண்டாகிறது. அப்போ காட்டில் வாழும் அந்த தேவதையால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அந்த தேவதையை கொல்ல முயல்கிறான் அந்த மன்னன். ஆனால், முடியவில்லை. அந்த தேவதையை கொலை செய்பவர்களுக்கு தன் மகளை திருமணம் செய்து வைப்பதுடன் நாட்டையும் தருவதாக அந்த மன்னன் அறிவிக்கிறான். இதற்கிடையில் அந்த சிறுவனுக்கும் தேவதைக்கும் இடையேயான நட்பு காதலாகிறது. நாட்டிற்காக ஆசைப்பட்டு தேவதையைக் கொல்லாமல் அவளது இறக்கைகளை மட்டும் வெட்டி விடுகிறான். மன்னன் மகளையும் திருமணம் செய்து, நாட்டின் ராஜாவும் ஆகிவிடுகிறான். சில நாட்களில் அவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துரோகத்தின் துயரத்தில் இருக்கும் தேவதை மெலேபிசென்ட் குழந்தைக்கு ஒரு சாபம் விடுகிறார். அந்த சாபத்தில் இருந்து அந்தப் பெண் எப்படி மீள்கிறார். மெலிபிசெண்ட் தன்னுடைய பழியை எப்படித் தீர்த்துக்கொள்கிறார் என்பதை அழகான பேன்சி கதையாக சொல்லும் படம் தான் 2014ல் வெளியான மெலிபிசெண்ட்.

 

மெலேபிசென்ட்டாக ஏஞ்சலினா ஜோலி. எப்போதும் தேவதைபோல காட்சி தரும் அவர் படம் முழுவதும் அழகு தேவதையாகவே வலம் வருகிறார். காதலில் உருகுவதாகட்டும், ஏமாற்றப்பட்டு வருந்துவதாகட்டும், மன்னனின் குழந்தைமீது பாசம் கொண்டு அதை காட்டியும் காட்டாமலும் இருப்பதாகட்டும் நடிப்பிலும் தான் ஒரு தேவதை என்பதை நிரூபித்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.

மன்னனின் மகளாக வரும் எல்லே பேன்னிங் குட்டி தேவதையாக ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறார். உண்மை தெரிந்து மெலேபிசெண்ட் மீது கோவம் கொள்ளும் போதும் அவருக்கு நடந்த துரோகம் தெரிந்து தன் அப்பாவை எதிர்க்கும்போது அழகாக தெரிகிறார்.

பேசும் மரங்கள், குட்டி குட்டியாக பறக்கும் தேவதைகள், காக்கையாகவும் இளைஞனாகவும் உரு மாறும் ஒருவன், அழகழகான பூக்கள் என படம் முழுவதும் பேன்சி கொட்டிக் கிடக்கிறது. ஹாலிவுட் மூவிக்களில் இருக்கும் தொழில்நுட்ப நேர்த்தி இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். மற்றபடி வழக்கமான ஒரு பேன்சி மூவி தான். என்றாலும் காட்சி அமைப்பு, ஏஞ்சலினா நடிப்பு என படம் அட்டகாச அனுபவத்தை தருகிறது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதைப் படித்துவிட்டு பார்த்துவிடுங்கள். இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிடுங்கள். 3டியில் நிச்சயமாக நல்ல அனுபவமாக இருக்கும்… ஏஞ்சலினாவை 3டியில் பார்ப்பதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

முக்கியமான ஒரு விஷயம். இந்தப் படம் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், விருதுதான் கிடைக்கவில்லை. பெரும் சோகம் தான்… பார்க்கலாம் இந்த முறை…

Continue Reading

சினிமா

சோம்பிலேண்ட்-1 விமர்சனம்… அமெரிக்காவின் சோம்பி உலகத்துக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம்…

Published

on

முழுவதும் சோம்பிகள் நிறைந்த அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருந்து தொலைந்து போன தன்னுடைய குடும்பத்தை தேடும் இளைஞன், தொலைந்த தன்னுடைய நாயைத் தேடித் அலையும் ஒரு நடுத்தர வயது மனிதன், நகரின் ஒரு பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல நினைக்கும் சகோதரிகள் இவர்களும் இணைந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சோம்பி லேண்டை கடந்து தாங்கள் நினைத்ததை முடித்தார்கள் என்பதை கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் கலந்து சொல்லும் படம் தான் 2009ம் ஆண்டில் வெளியான சோம்பி லேண்ட்.

கொலம்பசாக நவ் யூ சீ மி நாயகன் ஜெஸ்ஸி எய்சென்பர்க், டல்லாஹச்சேவாக ஹாலிவுட்டின் ஆக்சன் கிங் வுட்டி, விச்சிதாவாக அழகி எம்மா வாட்சன், அவரது சகோதரி லிட்டில் ராக்காக அபிகெய்ல் இவர்கள் நால்வர் மட்டும்தான் இந்தப் படம் முழுவதும். இந்தப் படத்தில் வரும் மற்ற அனைவரும் எப்போதும் யாருடைய குரல்வளையை கடித்து, நரம்பை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேருக்கும் தனித்தனி பிளாஸ் பேக், ஒருவருக்கொருவர் சின்ன சின்னதாக நம்பிக்கை துரோகம், அதில் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் எனப் படம் நகர்கிறது.

சோம்பிகளிடம் இருந்து தப்பிக்க இதயத்தில் சுடவேண்டும், ஒருமுறைக்கு இருமுறை சோம்பிகளை கொல்ல வேண்டும், பொது இடங்களில் அதுவும் டாய்லெட்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என வரும் சில விதிகள் 1, 2, 3, 4, 18, 17, 31 என ஏதோ வரிசையில் வருகிறது. எம்மா வாட்சன் பொய் சொல்லி ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள் என சில இடங்களில் நகைச்சுவை செட் ஆகியிருக்கிறது.

வழக்கமான சோம்பி படம் தான். பெரிய அளவில் எந்தவித ட்விஸ்டும், சுவாரஸ்யமும் இல்லாமல்தான் படம் நகர்கிறது. காட்சிகளிலும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அதிகம். எம்மா வாட்சனுக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையே இறுதியில் காதல் என அதே பழக்கப்பட்ட காட்சிகள்.

பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அட்வென்சர் மற்றும் ஆக்சன் பட ரசிகர்களை ஓரளவு இந்தப்படம் கவரும். அப்போ எதுக்கு இப்போ இந்த படத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பார்க்கிறீர்களா… இந்த வாரம் சோம்பி லேண்ட் டபுள் டேப் என்ற இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (21/10/2019) தினபலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)

தமிழ்நாடு9 hours ago

இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? தெரியுமா?

வணிகம்10 hours ago

நீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்18 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (20/10/2019) தினபலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்18 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/10/2019)

சினிமா1 day ago

ஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்பதைச் சொல்ல ஒரு படம்…

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய (19/10/2019) தினபலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/10/2019)

சினிமா2 days ago

மெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…

சினிமா3 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா3 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு2 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்2 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்4 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

சினிமா2 months ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

Uncategorized1 week ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ2 weeks ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ1 month ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ2 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ2 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ3 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ4 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ4 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ4 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending