Connect with us

கட்டுரைகள்

மூலிகை குடிநீர் -NATURAL RO

Published

on

தெற்றான்கொட்டை

                                              மூலிகை குடிநீர் -NATURAL RO

இன்றைய காலகட்டத்தில் சுத்தமான குடிநீர் என்பது அனைவர்க்கும் கிடைப்பதில்லை .அனைவராலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கி குடிக்க முடியாது.ஒரு 20 லிட்டர் குடிநீர் கேன் 30-40 ரூபாய்க்கு விற்பனையாகிறது . RO  குடிநீரிலும் எவ்வித சத்துக்களும் கிடையாது.சுத்திகரிப்பு என்ற பேரில் அனைத்து சத்துக்களையும் வெளியேற்றிவிடுகிறது .இதனால் எலும்புகளுக்குக் கிடைக்க வேண்டிய கால்சியம் சத்து கிடைக்காமல் பொய் விடுகிறது .

இதற்கு ஒரு தீர்வு  தான் இந்த குடிநீர் முடிச்சு .ஒரு சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் பின் வருகின்ற மூலிகைகளைக் கட்டி ஒரு குடிநீர் முடிச்சு தயார் செய்து கொள்ள வேண்டும்.இந்த முடிச்சை நாம் குடிக்கும் நீரில் ஒரு  4-5 மணி நேரம் போட்டு எடுத்து  விட்டால் நீர் சுத்திகரிக்கப் பட்ட நீர் போல் சுத்தமாகவும் சுவையாகவும்  இருக்கும் . ஒரு முடிச்சு 2 அல்லது 3 முறை பயன் படுத்தலாம்

குடிநீர் முடிச்சு செய்யத் தேவையான பொருட்கள் :

*ஒரு சிறிய வெள்ளை  பருத்தி துணி

*4 கரு மிளகு

*4 வெண் மிளகு

*ஒரு சிட்டிகை சீரகம்

*வெட்டிவேர் சிறிது

*நன்னாரி சிறிது

*தெற்றான்கொட்டை 1

இது அனைத்தும் நமக்கு  எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைதான் .இதன் அருமை நமக்குத் தெரியாமல் பொய் விட்டது.வெட்டிவேர் இயற்கையிலேயே குளுமையானது .ரத்தத்தைச் சுத்திகரிக்க கூடியது.மிளகு,சீரகம் செரிமானத்துக்கு மிகவும் ஏற்றது .தெற்றான்கொட்டை ஒரு இயற்கை சுத்திகரிக்கபான் .

கட்டுரைகள்

#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி?

Published

on

எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரை ‘மக்கள் திலகம்’ ஆக்கியதும், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்தை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கியதும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் மேஜிக்! அந்தவரிசையில், இன்றைக்கு ரசிகர்களின் மனம் நிறைந்த ‘மாஸ் ஹீரோ’வாக உயர்ந்து நிற்கிறார் ‘தல’ அஜித்! எந்தப் பின்புலமும் இல்லாமல்; தனது சொந்த முயற்சியால் மட்டுமே மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கும் தன்னம்பிக்கை நாயகனின் சினிமா பயணமே இந்த தொகுப்பு…

அஜித்

சினிமாவுக்கு துளியும் சம்பந்தமில்லாத, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அஜித்தின் சினிமா பயணம் அவ்வளவு எளிதில் சாத்தியப்படவில்லை. அஜித்தின் தந்தை, ஒரு மருந்துக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்பா, பாலக்காட்டுகாரர். அம்மா, கல்கத்தாவை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள். திருமணத்துக்கு பிறகு சென்னையில் செட்டிலான போது தான் அஜித் பிறந்தார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்த அஜித்துக்கு பிறகு, படிப்பில் நாட்டம் இல்லாமல் போனது! ஆனால் அஜித்தின் அண்ணன் அனுப்குமார்; தம்பி அனில்குமார் இருவருமே நல்ல படிப்பாளிகள்! படிப்பு முடிந்ததும் அமெரிக்காவுக்கு போய் பிசினஸ் செய்தனர். ஆகவே, அப்பா – அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தார் அஜித். அப்பா, வேலை செய்த கம்பெனியின் ‘பாஸ்’; ஒரு ‘பைக் ரேஸ்’ பிரியர். சோழவரம் ரேஸ்களில் கலந்துகொள்வார். அவரைப் பார்த்து தான் அஜித்துக்கு ‘பைக் ரேஸ்’ ஆர்வம் வந்தது. அதே வேலையில் சினிமாவின் மீதும் அஜித்துக்கு ஒரு விதமான ஈர்ப்பு உண்டானது. தொடர்ந்து பைக் ரேஸ்க்கும், சினிமாக் கம்பெனிகளுக்கும் போய் வந்த மகனை, வலுக்கட்டாயமாக என்பீல்டு கம்பெனியில் ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் பயிற்சி பெற அனுப்பிவைத்தார் தந்தை. ஆனால்; அதில் அவர் ரொம்ப நாள் நீடிக்கவில்லை! பிறகு, எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். ‘சினிமா சான்ஸ்’ தேடுவதற்கு வசதியாக ‘நைட் ஷிப்ட்’ கேட்டுவாங்கிக் கொண்ட அஜித், இரவில் எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் வேலை, பகலில் ‘வாய்ப்பு வேட்டை’ என ஓடினார். சின்ன கம்பெனி முதல், பெரிய படக் கம்பெனி வரை சான்ஸ் தேடி அலைந்து அலுத்துப் போனாலும், நம்பிக்கை மட்டும் வற்றிப் போகவில்லை! இந்த பீனிக்ஸ் பரவைக்கு…

‘சினிமா’ எட்டாக் கனியாக இருந்ததாலும், மாடலிங் சான்ஸ் கிடைத்தது. கோ-ஆப் டெக்ஸ், பிரிமியர் வேட்டிகள், ஹவாய் செப்பல் உள்பட பல விளம்பரங்களில் நடித்தார் அஜித். அங்கு தான் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அறிமுகம் கிடைத்தது.
இயக்குனர் மணிரத்னத்திடம் அஜித்துக்கு சிபாரிசு செய்தார் பி.சி.ஸ்ரீராம். மணிரத்னத்தின் ஆலயம் பட நிறுவனத்திலிருந்து அஜித்துக்கு அழைப்பு வந்தது! தனது, அபிமான இயக்குனர் மணிரத்னம் மூலமாக தன் ‘ஹீரோ கனவு’ நிறைவேறப் போவதை நினைத்து சிறகில்லாமல் பறந்தார் அஜித். ஆனால், அந்த சந்தோஷம் நீடிக்க வில்லை! ‘மணிரத்னம் தயாரிக்க இருந்த அந்தப் படம் கை விடப்பட்டது!’ என்கிற தகவல் வந்தபோது நொறுங்கிப் போனார். முதல் அடியே சறுக்கினாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை அஜித்! தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே சினிமாவுக்கும் முயற்சி செய்தார்! அப்போது தான் தெலுங்கு படமொன்றில் ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் வந்தது, அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். 1993ஆம் ஆண்டு கொல்லப்புடி சீனிவாச ராவ் இயக்கத்தில் ‘பிரேம புஸ்தகம்’ என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அஜித். இந்த படம் தான் அஜித்துக்கு தமிழ் சினிமாவிற்கான கதவில் சிறிய துளையிட்டது. பிரேம புஸ்தகம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, அதன் மூலமாக சோழா கிரியேஷன்ஸின் ‘அமராவதி’ பட வாய்ப்பு தானாக கிடைத்தது. டைரக்டர் செல்வாவின் துணிச்சலான முயற்சியினால் தான் அந்த வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது ஏனென்றால் அந்த படத்தில் நடிப்பதற்கு வேற ஒரு நடிகரை தேர்வு செய்து படப்பிடிப்பையும் துவங்கி நடத்தி வந்த நேரத்தில், அஜித்தின் புகைப்படங்களை பார்த்த செல்வா ஷூட்டிங்கை நிறுத்தி அமராவதி படத்தில் அஜித்தை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். இதற்காக செல்வா வைத்த விலை அவரின் இந்த பட வாய்ப்பு. ஷூட்டிங்கில் ஏதாவது சொதப்பல் நடக்காதா? என ‘மூன்றாவது கண்’ கொண்டு காத்திருந்தார் தயாரிப்பாளர்! ஒட்டுமொத்தப் படக்குழுனரின் பார்வையும் அஜித் மீதே இருந்தது. ஆனால், அந்த அக்னிப் பரிட்சையில் வெற்றி பெற்றார் அஜித். 1993 ஆம் ஆண்டில் அஜித்தின் முதல் தமிழ் படமான ‘அமராவதி’ வெளிவந்தது. ‘படம் ‘சூப்பர் ஹிட்’, புதுப்பட வாய்ப்புகள் மளமளவென குவிந்தது, அஜித்தின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர் போன்ற சீனெல்லாம் இங்கு இல்லவே இல்லை! படம் முதலுக்கு மோசம் செய்யவில்லை, தயாரிப்பாளரின் கையைக் கடிக்கவில்லை அவ்வளவு தான்!

 

‘அமராவதி’ ஆவரேஜ் படம் என்பதால், அஜித்துக்கு புதுப்பட வாய்ப்பு எதுவும் வரவில்லை! மறுபடியும் ‘சான்ஸ்’ தேட ஆரம்பித்தார். விளம்பர பட வாய்ப்புகளும் சுத்தமாக இல்லாமல் போனது. அதனால், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டார் அஜித். அவரின் நண்பரகளில் சிலர், சின்னத்திரையில் நடிக்க அழைத்தனர். ஆனால், அதை அஜித் ஏற்கவில்லை! ‘சினிமாவில் ஜெயிக்க முடியும்!’ என்கிற வைராக்கியத்தோடு காத்திருந்தார் அஜித். நடிகை ரேவதியின் கணவரும், இயக்குநருமான சுரேஷ் மேனன், ‘பாசமலர்கள்’ படம் ஆரம்பித்த போது அவரைப் போய் பார்த்தார் அஜித். சுரேஷ் மேனன் எடுத்த விளம்பரப் படங்களில் நடித்த போது ஏற்பட்ட அறிமுகம் இருந்ததால், ‘பாசமலர்கள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்குக் கிடைத்தது. அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக நடித்தார் அஜித். சினிமாவுக்கு அடுத்து அஜித் நேசிப்பது ‘பைக் ரேஸ்’! அவரின் பலமும் அது தான், பலவீனமும் அதுதான்! அப்போது நடந்த ஒரு பைக் ரேசில் பங்கேற்று, விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகி, ‘பெட் ரெஸ்ட்’டில் இருந்தார் அஜித். அந்த சமயத்தில்; ‘பவித்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது. ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டத்தை சொல்லும் ‘பவித்ரா’ படத்தின் கதை, ஒரு மருத்துவமனையின் பின்னணியில் நடப்பதாக இருந்தது. ஆபரேசன் முடிந்து ‘பெட் ரெஸ்ட்’டில் இருக்கும் ஒரு இளைஞனாக படுத்துக் கொண்டே நடித்தார் அஜித். இதற்கு பின் அவர் நடித்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இன்றுவரை அது ஒரு வரலாற்று திரைப்படமாகவே இருந்து வருகிறது அது தான் ‘ராஜாவின் பார்வையிலே’. தற்போது கோலிவுட்டின் இருவேறு துருவங்களாக இருந்துவரும் அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த ஒரே ஒரு படம் இது தான். ‘அமராவதி’, ‘பாசமலர்கள்’, ‘பவித்ரா’, ‘ராஜாவின் பார்வையிலே’ என நான்கு படங்களில் நடித்தும் அஜித்துக்கு, எந்த முனேற்றமும் இல்லை! சினிமாவில் நிலைத்து நிற்க அஜித்துக்கு, உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது. அந்த வெற்றியை அடுத்து வெளியான ‘ஆசை’ படம் தேடிக்கொடுத்தது. இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் அழகான இளைஞனாக வந்து ரசிகர்களை கவர்ந்தார் அஜித். 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஆசை’ படம் ரசிகர்களின் அமோக ஆதரவோடு பல சென்டர்களில் 200 நாட்கள் ஒடி வசூலை அள்ளியது. அஜித்தின் திரைப் பயணத்தில் அவர் சந்தித்த முதல் வெள்ளி விழாப் படம் இது தான். அதுவரை ஒரு போராட்டமாகவே இருந்த அஜித்தின் சினிமா வாழ்க்கை,‘ஆசை’ படத்துக்கு பிறகு பிரகாசமாக அமைந்தது. தமிழ் சினிமாவிற்கான கதவிலிருந்த துளை நீங்கி கதவே திருந்தது இந்த முறை…

அந்த வெற்றிக்கு பிறகு வெளியான வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை போன்ற படங்கள் அஜித்தின் திரைப்பயணத்தை மேலும் மேலும் உயர்த்தியது. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சுயம்புவாக வளர்ந்திருக்கும் அஜித்துக்கும், நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கும் நட்பு மலர்ந்து, ‘அஜித்தின் பினாமி’ என சினிமா வட்டாரமே பொறாமைப்படுமளவுக்கு இருவரும் நெருக்கமான நண்பர்களானார்கள். ஆடியோ கம்பெனி நடத்திய நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியை ‘ராசி’ படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக்கினார் அஜித். அந்தப் படத்திலிருந்து தான் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்தினார். அஜித், தொடர்ந்து புதிய இயகுநர்களை களத்தில் இறக்கி விட, சொல்லி வைத்த மாதிரி அத்தனை படமும் ஃபிளாப். அந்த சமயத்தில் தான்; நடிகர் விவேக், டைரக்டர் சரணை கொண்டுவந்து அஜித் முன் நிறுத்தினார். அந்த கூடணியில் அடுத்து வெளியான படம் தான் ‘காதல் மன்னன்’. அடுதடுத்த தோல்விகளினால் மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர், தனது கொள்கையிலிருந்து பின் வாங்காமல் ‘காதல் மன்னன்’ படத்தை புதியவர் சரண் வசம் தந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை! ‘காதல் மன்னன்’ படம் ‘ஹிட்’ ஆனது. அஜித் அறிமுகப் படுத்திய இயக்குநர்களில் சிலர் சொத்தப்பினாலும்; ‘காதல் மன்னன்’ சரண், ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘முகவரி’ துரை, ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவணா சுப்பையா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், ‘பில்லா’ விஷ்ணுவர்தன் போன்றவர்கள் தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வருகிறார்கள். இதில் ‘வாலி’ படம் இயக்கிய எஸ்.ஜே.சூர்யா அந்த படாத்தை எடுத்து முடிப்பதற்குள் ஒரு போரையே சந்திக்க வேண்டி இருந்தது. பல சோதனைகளை தாண்டி வெளிவந்த ‘வாலி’ படம் வெற்றி வாகை சூடியது. ‘வாலி’ ஹிட் ஆனதும் விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கி முடித்த எஸ்.ஜே.சூர்யா, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, தனக்கு சினிமாவில் வாழ்க்கை தந்த அஜித் தலைமையில் நடக்கவேண்டுமென ஆசைப்பட்டார். ஒருவிதத்தில் இது பேராசை தான்! ஆனாலும், அஜித்திடம் தனது கோரிக்கையை வைத்தார்! தன் பட விழாவுக்கேப் போகாத அஜித், வளரும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யாவுக்காக, தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டு; சினிமாவில் தனக்கு சம போட்டியாளராக இருக்கும் விஜய்யின் ‘குஷி’ படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.

————————————————-

பொதுவாக காதல் என்பது விழியில் விழுந்து இதயம் நுழைவது என்று தான் சொல்வார்காள் ஆனால் அஜித் – ஷாலினியின் காதலோ செவியில் விழுந்து இதயம் நுழைந்தது. ஆம், அஜித்தின் அமர்களம் படத்தில் முதல் முறையாக அஜித்துக்கு ஜோடியான ஷாலினி அவரின் சொந்த குரலில் பாடியா ‘சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை’ என்கிற பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்து போகவே அதை ரிப்பீட் மோடில் போட்டு கேட்டுக்கொண்டே ஷாலினியின் மீது காதலில் விழுந்தாராம். முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஷாலினிக்கு கையில் கத்திப் பட்டு ரத்தம் கொட்டியதை பார்த்து பதறிப்போனார் அஜித். அந்தத் தவிப்பும் பதற்றமும் தான் காதலுக்கான முன்னோட்டமாக அமைந்தது. இயக்குநர் சரண், விடாப்பிடியாக இருந்து ‘அமர்க்களம்’ படத்துக்காக அந்த தேவதையை, அஜித்துக்காகவே அழைத்து வந்த மாதிரி இருந்தது. பிறகு, இரண்டு குடும்பங்களும் கலந்து பேசி. ஒரு நல்ல நாளை முடிவு செய்து, காதலர்களை சேர்த்து வைத்தனர். 24.04.2000 அன்று அஜித்-ஷாலினி திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு அனோஸ்கா, ஆத்விக்னு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இடையில சில காலங்கள் அஜித்தின் சினிமா க்ராப் அவ்வளவு சரியாக இல்லை, ஹீரோக்கள் நாளுக்கு நாள் சினிமா ரேசீல் முன்னேறி செல்ல அஜித்தின் கவனமோ கார் ரேஸின் பக்கம் இருந்தது. கார் ரேஸ், பைக் ரேஸ், ஏரோமாடலிங், துப்பாக்கி சுடுவது….என சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத துறைகளில் ஆர்வத்தை செலுத்தினார். ஒரு கட்டத்தில், ரேஸ் கார் ஓட்டுவதிலேயே தனது மொத்த நேரத்தையும்-பணத்தையும் செலவு செய்தார். கார் ரேஸ் எங்கு நடந்தாலும் வெறித்தனமாக கிளம்பிவிடுவார்! இந்தியாவைத் தாண்டி ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளிலும் கார் பந்தயங்களில் அவர் பங்கேற்றார். கார் ரேஸ் பந்தயங்களுக்காக கோடி கோடியாக பணத்தைக் கொட்டியும்; ஸ்பான்ஸ் சர்ஸ் கிடைக்காமல் ரொம்பவே சிரமப்பட்டார். இதனால், ஐந்து கோடிக்கு மேல் கடனாளியானார். நண்பர்களின் பேச்சை நம்பி பட விநியோகம், எக்ஸ்போர்ட் பிஸினஸ் என ஏகப்பட்ட தொழில்களில் கால் பதித்து; பல கோடிகளை இழந்தார். இதனால், நண்பர்களிடமும் மனக்கசப்பு! நட்பு வட்டாரத்திலும் பகை, சினிமாவிலும் தொடர் தோல்வி, கடன் நெருக்கடி… என சூறாவளி சுழன்றடிக்க கிடு கிடுத்துப் போனார் அஜித்.

“அஜித், அவ்ளோதான்! உடம்பு ஊதிப்போச்சு, ஹிட் குடுத்து வெகு நாளாச்சு! சினிமா லைஃப்புக்கு ‘என்டு கார்டு’ போட்டாச்சு!” என ஒரு பக்கம் அவரை தாக்கி பலர் பேசினார்கள். இன்னொரு பக்கம், “கார் ரேஸ், பைக் ரேஸ், விமானம் ஓட்டறதுனு, இப்படிப் பொறுப்பில்லாம நடந்துக்கணுமா!” என கொந்தளித்தது கோலிவுட். “ஆபத்தான விஷயம் தான் ஒத்துக்கறேன். ஆனா, அந்த த்ரில் பிடிச்சிருக்கே. ஷூட்டிங்…ஷூட்டிங்னு ஓடிக்கிட்டே இருந்தா கிறுக்கு தான் பிடிக்கும். என்னோட பர்ஷனல் சந்தோஷங்களை சினிமாவுக்காக காவு கொடுக்கணுமா?” என அஜித் ஆவேசமாய் பதிலடி தர, அது பரபரப்பானது. அதை தொடர்ந்து , 2011-ஆம் ஆண்டு மே 1 தனது பிறந்த நாளில் தனது ரசிகர் மன்றத்தை அதிரடியாகக் கலைத்தார். அது அஜித்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது. “தனிப்பட்டவொரு மனுஷனுக்கு எதுக்கு மன்றம்? அதுக்காக நேரத்த வீணாக்காம குடும்பத்தக் கவனிங்க! எனக்கு ‘கட் அவுட்’டும் வேணாம், அதுக்கு பாலாபிஷேகமும், பீர் அபிஷேகமும் வேணாம். கொடி – தோரணமெல்லாம் கட்றதுக்குப் பதிலா; அவங்கவுங்க ஏரியால சுகாதாரத்தை பாதுகாக்க உதவுங்க” என விளக்கம் தந்தார் அஜித். இப்படி, அஜித் வாழ்க்கையில் இருட்டு சூழ்ந்த போது; ஒரே வெளிச்சமாக இருந்தது மனைவி ஷாலினி தான். சினிமாவில் ஏற்பட்ட சர்ச்சைகள்,சரிவுகள், நண்பர்களிடம் பகை, கடன் தொல்லைகள்… இதிலிருந்து விலகி ஆறுதல் தேடி அலைந்த அஜித்துக்கு வரமாகவும், உரமாகவும் இருந்தார் ஷாலினி. நம்பிக்கை கொடுத்து அஜித்தின் சூழலை மாற்றி, தியானம்-யோகா வாயிலாக மனதை சாந்தப்படுத்தி, அஜித்தை மெல்ல மெல்ல மீட்டெடுத்தார் ஷாலினி. அஜித், கதை தேர்வு செய்யும்போதும், புதுப்பட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் எடுக்கும்போதும் ஓடிவந்தார். அஜித்திடம் நிறைய மாற்றங்கள் வந்தது! பேச்சைக் குறைத்து; வேகத்தைக் கூட்டினார். அந்த சமயத்தில், அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்தார் ஷாலினி…!

அஜித்தின் கவனத்தை சினிமாவின் பக்கம் திருப்பிவிட்டு ரெஸ் என்பது வெரும் பொழுதுப்போக்கு சினிமாவுல நடிக்குறது தான் தன்னோட தொழில்னு அஜித்துக்கு புறியவச்சி அவரின் ரசிகர்களுக்கு தலையை மீட்டுக்கொடுத்தார் ஷாலினி. அஜித்தின் முழு ஃபோகஸ் சினிமா மீது மட்டுமே இருந்தது. உடனடியாக ஒரு ஹிட் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அஜித். அந்த சமயத்தில் ஆரம்பித்த படம் தான் ‘காட் ஃபாதர்’. ‘காட்ஃபாதர்’ என்கிற பெயரில் துவங்கப்பட்டு, ரொம்ப நாள் இழுபறியாவே போய்ட்டுருந்த படம் தான் பிறகு ‘வரலாறு’ என பெயர் மாற்றி வெளியானது. அது அஜித்தின் தலையெழுத்தை திருத்தி எழுதியது. பல தடைகளைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தீபாவளி தினத்தில் வந்த ‘வரலாறு’ திரைப்படம், ‘நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் எதுவும் ஜெயித்ததில்லை!’ என்கிற பழைய வரலாற்றை அடித்து நொறுக்கி; புதிய வரலாறு படைத்தது.

அங்கிருந்து அதிரடியாய் ஆரம்பித்தது அஜித்தின் அடுத்த இன்னிங்ஸ்! தானொரு ஃபீனிக்ஸ் பறவை என்பதை நிரூபித்துக்காட்ட கிளம்பினார் அஜித். காவல் துறைக்கு நீண்ட நெடுங்காலமாக சிம்ம சொப்பனமாக இருந்த பிரபல கடத்தல்காரன் பில்லாவின் கதையை அதே பெயரில் நடிகர் பாலாஜி, ரஜினியை வைத்து திரைப்படமாக எடுத்தார். 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ; ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘பில்லா’வை, அஜித்தை ஹீரோவாக வைத்து, நவீன டெக்னாலஜியில் படு ஸ்டைலிஷாக ரீமேக் செய்து வெளியிட்ட போது புதிய‘பில்லா’வும் ஹிட் அடித்தது. அஜித்தின் ‘பில்லா’ வசூலில் வெளுத்து வாங்கி, சுமார் 40 கோடி வரை லாபம் பார்த்தது. தமிழ் சினிமா வரலாற்றில் நாயகர்கள் நல்லவர்களா இருந்தாகவேண்டிய மிக முக்கியமான கட்டாயத்தையே தகர்த்தெறிந்தது அஜித்தின் ‘மங்காத்தா’. எழுதப்படாத இந்த விதியை உடைத்து இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு வாசலைத் திறந்து வைத்த ‘மங்காத்தா’ அஜித்தின் 50வது படமாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.

‘மங்காத்தா’ வின் மெகா ஹிட்டுக்குப் பிறகு வந்த ‘பில்லா 2’ படம் படுதோல்வி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம், ஆனா அத உடனே சரிகட்ட நினைச்ச அஜித், தன்னோடு கருத்து மோதலால் பிரிந்துபோன இயக்குநர் கௌதம் மேனனோட மீண்டும் கூட்டணி அமைச்ச படம் தான் ‘என்னை அறிந்தால்’. போலீஸ் கதைக்கும், கௌதம் மேனனுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இப்போ வரைக்கும் இருந்துட்டு வருது. அஜித் போலிஸா நடிச்சிருந்த இந்த படம் வழக்கமான பாணியில் இல்லாமல் பல கெட்டப்பில், எமோஷனலில் ஸ்டைலிஷான அஜித்தைக் காட்டிருந்தது. அஜித் – அனுஷ்கா காம்போ, த்ரிஷாவின் அழகான ஃபர்பாமென்ஸ், கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜின் ரீ-யூனியன், அருண் விஜய்யின் வில்லத்தனம், அழகான காதல் … என கலர்ஃபுல் காம்போவாக 2015- ம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் அஜித்தின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தது.

அதன்பின் தொடர்ச்சியாக அவரின் வீரம் படத்தை இயக்கிய சிவாவுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த கூட்டணியில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வரிசையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் படங்கள் வெளியானது ஒரு பக்கம் அஜித்தின் ரசிகர்களும் குடும்ப ரசிகர்களும் இந்த கூட்டணியை கொண்டாடினாலும் எதிர்மறையான விமர்சனங்களும் இவர்களின் மீது இருக்கத்தான் செய்தது. பிறரின் சொற்களை காதில் வாங்காத அஜித் தன் மனம் சொன்ன போக்கில் பயணித்து எடுத்த ஒவ்வொரு முடிவும் அவருக்கு வெற்றியையே தேடிக் கொடுத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மீது மரியாதையுள்ள அஜித், ஸ்ரீதேவியின் வேண்டுகோளுக்கிணங்க ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அவரின் மறைவுக்கு பிறகு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஃபர்ஸ்ட் காபியை பார்த்த போனி கபூர், ‘அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்’ என கூறியிருக்கிறார். அஜித்தின்‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி படம் திரைக்கு வருகிறது. அந்த நாளுக்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் ‘தல’யின் ரசிகர்கள்…! இன்று மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் நாம் அனைவருக்கும் தெறிந்ததே ஆனால் இது உழைப்பாள் உயர்ந்த ஒரு மனிதனின் பிறந்த தினமும் கூட, பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார்…

 

கட்டுரை-அசோக்

Continue Reading

கட்டுரைகள்

பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்!

Published

on

By

பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்

சென்னை: பிக் பாஸ் போட்டியில் சீசன் இரண்டில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த போட்டியில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கடந்த வாரம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். சர்வாதிகாரியாக நடிக்க சொன்னதற்கு அப்படியே சர்வாதிகாரியாகவே மாறி இருந்தார்.

பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்

பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ரகுவரன் என்ற நபர் ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். தன்னுடைய பெயருக்கு பின், ஐஸ்வர்யா ரசிகர்மன்ற தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிக்பாஸ் போட்டியில் வாக்களித்து அவரை வெல்ல வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/03/2020)!

தமிழ்நாடு13 hours ago

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/03/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்19 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/03/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/03/2020)

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (29/03/2020 முதல் 04/04/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)

தமிழ்நாடு2 days ago

கொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..!

இந்தியா2 days ago

கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

பல்சுவை3 days ago

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா9 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு8 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்2 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending