Connect with us

சினிமா

தனுசின் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃப்கிர்’ படத்துக்கு சர்வதேச விருது!

Published

on

தனுஷ் நடிப்பில் உருவான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃப்கிர்’ என்ற படம் நார்வே திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

தமிழில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப் படங்கள் மூலம் இந்திக்கு போனார். இப்போது ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃப்கிர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளார். கென் ஸ்காட் இயக்கிய இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் உருவாகி உள்ளது.

தற்போது நார்வே திரைப்பட விழாவில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ படம் திரையிடப்பட்டு ‘த ரே ஆப் சன்சைன்’ என்ற சர்வதேச விருதை பெற்றுள்ளது.

இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் ரிவியேராவில் நடந்த கேன்ஸ் பட விழாவில் திரையிட்டபோது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

“நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃப்கிர்’ படம் திரையிடப்பட்டு சர்வதேச விருதை வென்றுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்படி இருந்தன என்றும், மனித மாண்புகள் குறித்து மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டு உள்ளது என்றும் தேர்வுக்குழுவினர் பாராட்டினார்கள்” என்று டைரக்டர் கென் ஸ்காட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

விருது கிடைத்ததை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த படம் தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியாகிறது.

Advertisement

சினிமா செய்திகள்

#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!

Published

on

By

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.

Continue Reading

சினிமா செய்திகள்

பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்த புதிய படம்!

Published

on

By

தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன்.

அவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் அடுத்ததாக, ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை எடுக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப் பார்த்திபன் முயன்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் இரவின் மடியில் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை ரகுமானும் பார்த்திபனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்ததே இல்லை. இதுவரை முதல் முறை ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘இரவின் நிழல்’ குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

த்ரிஷாவுக்குத் தடை விதிக்க நடவடிக்கை..!- வெளிவந்த பகீர் பின்னணி

Published

on

By

என்றும் இளமை துள்ளலுடன் தென்னிந்திய திரையுலகில் வலம் வரும் நடிகையாக இருப்பவர் த்ரிஷா. பல ஆண்டுகளாக கதாநாயகியாக த்ரிஷா நடித்து வந்தாலும், அவருக்கு வயதான தோற்றமே வரவில்லை. இதன் காரணமாக இன்றும் இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் கூட விஜய் சேதுபதியுடன் ’96’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தால் த்ரிஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சென்ற ஆண்டே வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைச் செய்து வந்துள்ளது.

ஆனால், இந்தப் படம் குறித்தான ப்ரொமோ நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கும் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இப்படியான சூழலில் பரமபதம் விளையாட்டு படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து படத்தைப் ப்ரொமோட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கும் த்ரிஷா, ஒத்துழைப்பு நல்காத காரணத்தால், அவரின் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

 

 

Continue Reading
இந்தியா6 mins ago

மாதம் ரூ.6000 கொரோனா நிதியுதவி: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

தமிழ்நாடு13 mins ago

ரூ.4 கோடி மதிப்புள்ள செல்லாத ரூ.1000 நோட்டு பறிமுதல்: சிவகெங்கையில் பரபரப்பு!

Kerala CM's Tamil tweet on Gaja relief is the best you can see today!
இந்தியா22 mins ago

50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்

கிரிக்கெட்1 hour ago

சஞ்சு சாம்சன் சதம் வீண்: பஞ்சாப் த்ரில் வெற்றி!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்3 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (13/04/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்5 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/04/2021)

வணிகம்8 hours ago

உஷார்.. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த நகரங்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை!

வணிகம்9 hours ago

டிசிஎஸ் நிகர லாபம் 14.8% அதிகரிப்பு.. வருவாய் 43,705 கோடியாக அதிகரிப்பு!

வேலைவாய்ப்பு9 hours ago

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு!

வணிகம்10 hours ago

முக்கிய அறிவிப்பு.. 14 மணி நேரத்துக்கு RTGS சேவை வேலை செய்யாது!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா2 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending