சினிமா செய்திகள்
ப்ளூ சட்டை மாறன் படத்துக்கு தனிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு.. காரணம் என்ன?


தமிழ் திரைப்படங்களை விமர்சனங்கள் மூலமாகக் கிழித்துத் தொங்க விடுபவர் ப்ளு சட்டை மாறன். அதனால் இவரைப் பல தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காது.
ப்ளூ சட்டை மாறன் பட விமர்சனங்களை எதிர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், உன்னால் முடிந்தால் ஒரு படத்தை இயக்கு அதை வெற்றி பெற செய்து காட்டு என்றெல்லாம் சவால் விட்டனர்.
அதை ஏற்றுக்கொண்ட ப்ளூ சட்டை மாறன், ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் Anti Indian என்ற படத்தை இயக்கியும் முடித்துவிட்டார். இந்நிலையில் அந்த படத்தைத் தனிக்கை செய்த தனிக்கை குழுவினர், அதற்கு தனிக்கை சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.
எனவே படக்குழு Anti Indian மறு தனிக்கைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அதிலும் படத்துக்குத் தனிக்கை வழங்க மறுத்தால் Tribunal என்ற அமைப்பிடம் தனிக்கை செய்ய அனுப்புவார்கள். அப்போதும் இல்லை என்றால் நீதிமன்றம் சென்று தனிக்கை சான்றிதழ் பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கூறுகின்றனர்.
Anti Indian படத்துக்குத் தடை விதிக்க, தமிழ் தயாரிப்பாளர்கள் கூட்டுச் சதிதான் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே இந்த படத்தைப் பார்த்துள்ள வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்டவர்கள், படத்தின் கதை கடவுள், மதத்தை வியாபாரமாக செய்பவர்களை விமர்சிக்கும் விதித்தாக உள்ளது. அதுதான் தனிக்கை குழு மறுப்பு தெரிவித்ததற்கான காரணமாக இருக்கும். நாட்டிற்குத் தேவையான கருத்துடன் தான் படம் உருவாகியுள்ளது. மண்டேலா படம் போன்று பல நல்ல கருத்துக்களைப் படம் சென்று சேர்க்கும். பல விருதுகளைக் குவிக்கும் என்று கூறியுள்ளனர்.
தயாரிப்பு தரப்பில் விசாரித்த போது, மறு தனிக்கைக்கு படத்தை அனுப்ப உள்ளதாகவும், படம் ஏற்கனவே ஒரு சர்வதேச பட விழாவில் விருது பெற்றுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த காரணத்துக்காக படத்துக்கு தனிக்கை சான்றிதழ் அளிக்க முடியாது என்று சென்சார் குழு கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதே போன்று ஜீவா நடிப்பில் வெளியான ஜிப்ஸி படத்துக்கும் சிக்கல்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
செய்தியாளர் சந்திப்பில் அனைவருக்கும் நன்றி கூறிய விவேக் மனைவி!


நடிகர் விவேக் அவர்களுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருடைய உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
மேலும் காவல்துறை சகோதரர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பாதுகாப்பு அளித்தார்கள் என்றும் அவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்த அவர், நேற்றைய எனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சினிமா செய்திகள்
நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா; வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!


தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரையுலகை ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் அதர்வா முரளி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான் வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன், விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக அதர்வா நடிக்க வேண்டிய திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சினிமா செய்திகள்
ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தாரா விவேக்: இதுவரை வெளிவராத தகவல்!


மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார் என்ற புதிய தகவல் வெளிவந்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நாம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர் நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பலமுறை ஆலோசனைகளிலும் ஈடுபட்டு, படத்திற்கான முன்னேற்பாடுகளையும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் தருவாயில், அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மற்றொரு பரிணாமத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை மட்டுமின்றி ஒரு சிறந்த இயக்குனரையும் நாம் இழந்து விட்டோம் என்பது தெரியவருகிறது.
Rest in peace Vivek sir. pic.twitter.com/87SWdTMS6G
— TG Thyagarajan (@TGThyagarajan) April 17, 2021
-
கிரிக்கெட்2 days ago
இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!