சினிமா செய்திகள்
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு டிரைலர் ரிலீஸ்!
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. முற்றிலும் மாறுபட்ட திரைக்களத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.
அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காமல் பல இடங்களில் ஒதுங்கியுள்ள ஒரு குண்டு நம் ஊரிலும் ஒதுங்குவது போலவும், அது வெடிக்காமல் இருக்க ஒரு காய்லங்கடைக்காரன் போராடும் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டிரைலர் அழகாக உணர்த்துகிறது.
அட்டகத்தி தினேஷுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக அட்டகத்தி தினேஷுக்கு விசாரணைக்கு பிறகு நல்ல வரவேற்பை எந்த படமும் பெறவில்லை என்ற நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் டிரைலரே பல விமர்சகர்கள் மத்தியில் இது ஒரு சிறந்த படமாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சினிமா செய்திகள்
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.
என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.
பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.
மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
எதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.
சினிமா செய்திகள்
திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன?

தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் திரையரங்கு வெளியான ஒரு மாதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் படங்கள் வெளியானால், மக்கள் எப்படி திரையரங்குகளுக்கு வருவார்கள். சில வாரங்களில் ஆன்லைனைல் வந்துவிடும் என்று திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.
மறுபக்கம் திரையரங்குகளில் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் படங்கள் வெளியாகி து தயாரிப்பாளரைப் பெறும் அளவில் பாதிக்கிறது. 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இல்லை. எனவே இப்படி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் படத்தை 30 நாட்களில் ஒளிபரப்ப அனுமதியளிக்கிறோம். சில படங்கள் திரையரங்குகளில் 1 முதல் 2 வாரங்கள் மட்டுமே ஓடுகின்றன. எனவே இந்த முடிவை நாங்கள் எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று பட தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சில வாரங்களில் படங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கப்படும் என்றால் வரும் காலங்களில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 சதவீத டிக்கெட் கட்டணத்தை, 50 சதவீதமாக நாங்கள் குறைப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி எடுத்துள்ளனர்.
எனவே அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள் ஆன்லைன் தளங்களில் எத்தனை நாட்களில் வெளியாகும் என்று தெரிந்த பின்பே திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இதே போன்று தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் அமேசான் பிரைமில் 30 நாட்களில் வெளியானது குறிப்பிடத்தகக்து.
சினிமா செய்திகள்
மீனா வீட்டை ரூ.6 கோடி கொடுத்து வாங்கினேனா? நடிகர் சூரி விளக்கம்!

வெண்ணிலா கபடி குழு படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் மிகவும் பிரபலமானவர் சூரி. அந்த படத்திற்கு முன்பு பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவருக்கு, முழுமையான கதாபாத்திரமாகவும், திருப்புமுனையாகவும் அமைந்தது.
அதை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முக்கிய நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து உச்சத்திற்குச் சென்றுள்ளார்.
அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. படங்களில் நடிக்க சூரி நாள் ஒன்று 5 லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். அது மட்டுமல்லாமல் மதுரையில் உயர்தர சைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள நடிகை மீனாவின் விட்டை சூரி 6.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சூரி, அண்மையில் நான் சென்னையில் எந்த ஒரு சொத்தையும் வாங்கவில்லை. மீனாவின் விட்டை நான் வாங்கியதாக வெளியாகியுள்ள செய்திகளில் உன்மையில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
வீடியோ செய்திகள்4 days ago
” மஹாலட்சுமி புருஷனும் Jayashree- யும் சேர்ந்து Plan பண்றாங்க “- Isvar பரபரப்பு பேட்டி
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (06/12/2019)
-
தமிழ் பஞ்சாங்கம்18 hours ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)