சினிமா செய்திகள்
விஜய் படத்தின் பூஜையை மிஸ் செய்த பூஜா: டுவிட்டரில் தகவல்


’தளபதி 65’ திரைப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அந்த படத்தின் பூஜையை மிஸ் செய்ததை வருத்தத்துடன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
’தளபதி 65’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. தெலுங்கின் முன்னணி நடிகையாக இருந்து வரும் பூஜா ஹெக்டே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ’தளபதி 65’ படத்திற்கு பின்னர் மிகப் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Missing out on the muharat puja today of #Thalapathy65 since I’m shooting elsewhere. But my heart and spirit is with the team. Good luck ❤️ can’t wait to join you’ll soon 💃🏻💃🏻💃🏻
— Pooja Hegde (@hegdepooja) March 31, 2021
பூஜாவின் இந்த ட்விட்டை அடுத்து இன்று ’தளபதி 65’ பட பூஜை நடந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய் ரசிகர்கள் பலர் டுவிட்டரில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்ததை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
’இந்தியன் 2’ வழக்கு: லைகா நிறுவனத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அனுமதி!


’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து லைக்கா நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பின்னர்தான் அவர் ’இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவார் என்று கூறப்பட்டதால் ’இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஒரே படத்தில் நடிக்க்கும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ்: இயக்குனர் இவர்தான்!


‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்று செய்திகள் அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, தர்ஷா, பவித்ரா உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின் திரைப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட முக்கிய விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ‘குக் வித் கோமாளி’ மூலம் பல இளம் பெண்களின் மனதை கவர்ந்த அஸ்வின் ஹீரோவாகி இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா செய்திகள்
90-களின் இறுதியில்’ என திருத்துவதா? ‘கர்ணன்’ படக்குழுவினர்களுக்கு உதயநிதி அதிருப்தி!


தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு பிழை இருப்பதாக உதயநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த படத்தில் நடந்த சம்பவங்கள் 1995ல் அதிமுக ஆட்சியில் நடந்தது என்றும் ஆனால் 1997ல் திமுக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதை திருத்திக் கொள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அதன்படி நேற்று முதல் ‘கர்ணன்’ படத்தில் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால் 1997 என்று குறிப்பிடாமல் 90களின் இறுதியில் என திருத்தப்பட்டது. இந்த திருத்தத்திற்கு உதயநிதி தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் ’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
— Udhay (@Udhaystalin) April 15, 2021
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Udhay (@Udhaystalin) April 15, 2021
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
’நாளை சிம்புவின் புதிய பட அறிவிப்பா? ரசிகர்கள் குஷி!