சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் பாலிவுட்!


இசை அமைப்பில் ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் உள்ள அனைவரும் எனக்கு எதிராக செயல்படுவதாகக் கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தில் பேசாரா படம் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டாரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தில் பேசரா படத்தில் இசை அமைக்க ஏ.ஆர்.ரகுமானை, அந்த படத்தின் இயக்குநர் முகேஷ் சாப்ரா முயன்ற போது, பாலிவுட்டில் பலரும் அவருக்கு வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனக்குக் குறைவான இந்தி படங்கள் இசை அமைக்க வாய்ப்பு வருவதும், நல்ல படங்கள் ஏதும் வராததற்கு இது தான் காரணம் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்த் சிங் மரணத்திற்கும் இது போல அவருக்கு எதிராகப் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் செய்ததே காரணம் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
அஜித் வீட்டிலேயே ‘வலிமை’ டப்பிங் பணிகளா?


அஜித் கட்டியிருக்கும் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அவரது வீட்டிலுள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது,
ஆனால் அந்த செய்தி தவறானது என்று அஜித் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஜித் வழக்கம் போல் வெளியில் உள்ள பின் ஸ்டூடியோவில் தான் டப்பிங் செய்வார் என்றும் அவரது வீட்டிலுள்ள டப்பிங் ஸ்டுடியோ இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது,
மேலும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும் அஜித்தின் அனுமதி பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளிவரலாம் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது,
சினிமா செய்திகள்
’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!


சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சூர்யா தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதால் ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் டி இமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ராண்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிந்ததே
சினிமா செய்திகள்
முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா போட்டியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து பூஜா ஹெக்டே தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.