சினிமா செய்திகள்
கேரளாவிலிருந்து சன்னி லியோன் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள்; இணையத்தில் தீயாக பரவுகிறது!


பாலிவுட், கோலிவுட் என எல்லா சினிமா துறைகளிலும் கலக்கி வரும் சன்னி லியோன், கேரளாவில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வேற லெவல் வைரலாகி வருகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் பாலிவுட் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக சன்னி லியோன் சென்றுள்ளார். இந்நிலையில் தனக்கு கிடைத்த நேரத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ள சன்னி, அந்தப் படங்களை பகிர்ந்து கிரங்கடித்துள்ளார்.
பாரம்பரிய உடையில் ஒரு போட்டோ ஷுட் என்றால், நவீன உடையிலும் போட்டோ மற்றும் வீடியோக்களும் எடுத்துள்ளார் சன்னி.
சன்னி லியோன் ‘ஜிசம் 2’ பாலிவுட் படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் தன் நடிப்புத் திறமையாலும், கவர்ச்சியாலும் ‘ஹேட் ஸ்டோரி 2’, ‘குச் குச் லோசா ஹே’, ‘எக் பஹலி லீலா’ போன்ற படங்களில் கமிட்டானார். சன்னிக்கு அடுத்தடுத்துப் பல பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
கேரளாவின் சன்னி லியோன் பங்கேற்ற போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ:
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!


பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் வை ராஜா வை, இவன் தந்திரன், இந்திரஜித், இருட்டுஅறையில்முரட்டுகுத்து, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் சிம்புவுடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ஆனந்தம் விளையாடும் வீடு’
இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் கயிறு இழுக்கும் போட்டி போன்ற ஸ்டைலில் ஒரு பக்கம் ஆண்களும் ஒருபக்கம் பெண்களும் இழுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Happy to reveal 1st look & title of @Gautham_Karthik 'Anandham Vilayadum Veedu' produced by Sri Vari Films P. Ranga Nathan directed by @NandaPeriyasamy sir. @srivaarifilm @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM @soundar4uall @DoneChannel1 @digitallynow pic.twitter.com/4ws8isgwnK
— RJ Balaji (@RJ_Balaji) March 1, 2021
சினிமா செய்திகள்
ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம்: கே.பாக்யராஜிடம் ஆலோசனை!


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் நடித்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் இடம் ஆலோசனை பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’பாதாய் ஹோ என்ற காமெடி திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அவரே நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் உள்ள கர்ப்பிணி கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 2018ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ’பாதாய் ஹோ, ரூபாய் 250 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
புற்றுநோயால் உயிரிழந்த பிரபல நடிகருக்கு கோல்டன் குளோப்ஸ் விருது!


ஆஸ்கார் விருதுக்கு இணையாக கூறப்படும் கோல்டன் குளோப் விருது சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்ட்மேன் என்பவர்க்கு கிடைத்துள்ளது
78 ஆவது கோல்டன் குளோப் விருது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று தொடங்கியது. கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக தொடங்கிய இந்த விழாவில் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மறைந்த நடிகர் சாட்விக் போஸ்ட்மேன் என்பவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததால் அந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
நோமேட்லேண்ட்
சிறந்த திரைப்படம் – மியூஸிக்கல் / காமெடி
போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்
சிறந்த நடிகை – டிராமா
ஆண்ட்ரா டே (தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே)
சிறந்த நடிகர் – டிராமா
சாட்விக் போஸ்மேன் (மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்)
சிறந்த நடிகர் – மியூஸிக்கல் / காமெடி
ஸச்சா பேரன் ஜோஹன் (போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்)
சிறந்த நடிகை
ஜோடி ஃபாஸ்டர் (தி மாரிஷேனியன்)
சிறந்த நடிகை – மியூஸிக்கல் / காமெடி
ரோஸமுண்ட் பைக் (ஐ கேர் எ லாட்)
சிறந்த உறுதுணை நடிகர்
டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸையா)
சிறந்த இயக்குநர்
க்ளோ ஸாவோ (நோமேட்லேண்ட்)
சிறந்த இசைக் கோர்ப்பு
ட்ரெண்ட் ரெஸ்னர், ஆட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்ட் – ஸோல்
சிறந்த பாடல்
தி லைஃப் அஹெட் திரைப்படத்திலிருந்து ‘லோ ஸீ’
சிறந்த திரைக்கதை
ஆரன் சார்கின் (தி ட்ரயல் ஆஃப் தி சிகாகோ 7)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
ஸோல்
சிறந்த அயல் மொழித் திரைப்படம்
மினாரி
தொலைக்காட்சி விருதுகள்
சிறந்த தொலைக்காட்சித் தொடர் – டிராமா
தி க்ரவுன்
தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட சிறந்த குறுந்தொடர் / திரைப்படம்
தி குயின்ஸ் கேம்பிட்
சிறந்த நடிகை – தொலைக்காட்சிக் குறுந்தொடர் / திரைப்படம்
ஆன்யா டெய்லர் ஜாய் (தி குயின்ஸ் கேம்பிட்)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் – மியூஸிக்கல் / காமெடி
ஷிட்ஸ் க்ரீக்
சிறந்த நடிகர் – தொலைக்காட்சித் தொடர், டிராமா
ஜாஷ் ஓ கானர் (தி க்ரவுன்)
சிறந்த நடிகர் – தொலைக்காட்சித் தொடர், மியூஸிக்கல் / காமெடி
ஜேஸன் சூடெகிஸ் (டெட் லாஸோ)
சிறந்த நடிகை – தொலைக்காட்சித் தொடர், டிராமா
எம்மா காரின் (தி கிரவுன்)
சிறந்த நடிகர் – தொலைக்காட்சிக் குறுந்தொடர்/ திரைப்படம்
மார்க் ரஃபல்லோ (ஐ நோ திஸ் மச் இஸ் ட்ரூ)
சிறந்த நடிகை – தொலைக்காட்சித் தொடர், மியூஸிக்கல் / காமெடி
கேத்தரின் ஓ ஹாரா (ஷிட்ஸ் க்ரீக்)
சிறந்த உறுதுணை நடிகை – தொலைக்காட்சித் தொடர் / குறுந்தொடர் / திரைப்படம்
கில்லியன் ஆண்டர்சன் (தி க்ரவுன்)
சிறந்த உறுதுணை நடிகர் – தொலைக்காட்சித் தொடர் / குறுந்தொடர் / திரைப்படம்
ஜான் போயேகா (ஸ்மால் ஆக்ஸ்)