Connect with us

சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2005-ம் ஆண்டு வெளியான மஜா, 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் உள்ளிட்ட இரண்டு படங்களில் தான் விக்ரம் கிராமத்து கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தார்.

இப்போது 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதை ஒன்றைத் தேர்வு செய்துள்ளார். அந்த படத்தை ஹரி இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக விக்ரம்மை வைத்து சாமி 2 படத்தைத்தான் ஹரி இயக்கி இருந்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அது சில காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது.

பின்னர் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் அதே கதையை அருண் விஜய்க்கு சொன்னதாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட், அருண் விஜய்க்கு உள்ள மார்க்கெட் போன்றவை ஒத்துப்போகவில்லை.

இந்நிலையில் அருவா படம் ஒரு மாஸ் சப்ஜெட் படம், அதில் ஒரு பெரிய ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும். எனவே இந்த கதையை ஹரி விக்ரமிடம் கூறியதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதை என்பதால் விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே அருண் விஜய்க்கு வேறு கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் இப்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்

சர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..!

Published

on

By

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சர்வதேச தளத்தில் புதிதாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் உடனான திரை அரங்கங்களில் வெளியாகியும் தமிழகத்தில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது மாஸ்டர். தமிழகத்தில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புதிய சாதனையை மாஸ்டர் திரைப்படம் புரிந்துள்ளது.

Thalapathy Vijay's Master Trailer Ready For Release

இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் மாஸ்டர் படம் வெளியானது. இதில் சவுதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் திரை அரங்கங்களுக்கு வந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாஸ்டர் படத்தை பார்த்துச் சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் எந்தவொரு இந்திய திரைப்படத்துக்கும் இந்த மாதிரி கூட்டம் அலைமோதுவது இல்லையாம்.

அதனால், சவுதி அரேபியாவிலேயே அதிக மக்களால் குறைந்த நாட்களில் பார்க்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம்.

Continue Reading

சினிமா செய்திகள்

வெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி

Published

on

By

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த நாளே புது படம் ஒன்றுக்கான பூஜையை முடித்து படப்பிடிப்புகளில் இறங்கிவிட்டார் பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்.

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்துவிட்டார் ஆரி. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே 3 படங்களுக்கான போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிள் வெளியீடு என கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது உற்சாகமாக வெளியில் வந்ததும் அடுத்த படத்துக்கான பூஜையை போட்டு படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய அபின் என்பவர் ஆரி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளார். இந்தப் படத்துக்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீரியல்களில் இருந்து சினிமாவுக்குப் பயணித்த வித்யா பிரதீப் இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடி ஆகியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆரி.

படத்துக்கு இசை ஸ்டெர்லின் நித்யா மற்றும் தயாரிப்பு ஷெளரியா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். ஆரிக்கு அடுத்தடுத்து எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான், அலேகா ஆகிய மூன்று படங்கள் வெளியீட்டுக்கு வரிசையாகக் காத்திருக்கின்றன.

Continue Reading

சினிமா செய்திகள்

‘என்னை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைச்சுட்டீங்க ரகுல்…’- அயலான் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

Published

on

By

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவரும் தங்களது அயலான் படப்பிடிப்பு அனுபவங்களை மாறி மாறி ட்விட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் தனது பகுதியை முடித்துவிட்டாராம். இதற்காக படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அயலான் படப்பிடிப்பை நிறைவு செய்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே எனக்கான ஷூட்டிங் உள்ளது. மிகவும் லட்சியமுடைய இயக்குநராக இயக்குநர் ரவிக்குமார் உள்ளார். மிகவும் ஸ்வீட்டான சக நடிகர் சிவகார்த்திகேயன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்-க்கு ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா, “ரகுல் ப்ரீத் உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை எப்போதும் இங்கிலீஷிலேயே (ஐ திங்க் ஐ ஸ்பீக் ப்ரிட்டிஷ் இங்கிலிஸ்)” என தன்னைத் தானே கேலி செய்யும் வகையில் நன்றி தெரிவித்துள்ளார்.

Continue Reading
சினிமா செய்திகள்60 mins ago

சர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..!

தமிழ்நாடு60 mins ago

சசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே!!!

டிவி1 hour ago

பிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா?- புகைப்படம்

சினிமா செய்திகள்1 hour ago

வெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி

வேலைவாய்ப்பு3 hours ago

இந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்3 hours ago

“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்

வேலைவாய்ப்பு3 hours ago

இந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்3 hours ago

INDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..! #Video

வேலைவாய்ப்பு3 hours ago

தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ5 days ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ6 days ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ6 days ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ1 week ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 week ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

வீடியோ1 month ago

விஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்!

Trending