சினிமா செய்திகள்
விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!


விஜய் டிவி சீரியலில் நடிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை விஜய் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக, கனா காணும் காலங்கள், ஆபிஸ் சீரியல்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வாய்ப்பு.. பொதுமக்களுக்குக் கிடைக்க உள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, ஒரு ஆடிஷனை நடத்துகிறது விஜய் டிவி.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்களது டுவிட்டர் தளத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் முகம் காட்டினால் சூப்பர்ஸ்டார் ஆகிவிட முடியாது. நிச்சயம் உங்களுக்குள் தனித்திறமை மற்றும் விடாமுயற்சி இருந்தால், நீங்களும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறலாம்!
உங்களது புகைப்படம், விபரங்கள், முகவரி மற்றும் நீங்கள் நடித்த வீடியோ பதிவுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பங்கள். உங்கள் வாய்ப்பு உங்கள் இ-மெயில் தேடி வரும்!
சினிமா செய்திகள்
தனது அடுத்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த்… கதை இதுதான்…


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் 2011ம் ஆண்டு உருவாகவிருந்த வரலாற்று படம் ராணா. ஆனால், பூஜை போட்ட அன்னைக்கே ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அப்போது தான் ராணா கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் படத்தை உறுவாக்கினார் ஐஸ்வர்யா ரஜினி. இதை மோஷன் கேப்ஷரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கினர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் கனவுப் படமான ராணா மீண்டும் உருவாகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினியை சந்தித்து திரும்பி உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்ல சொல்லி ரஜினி கேட்டதாக கூறியுள்ளார். கதையை கேட்ட ரஜினி ராணா மிகவும் நல்ல ஸ்கிரிப்ட் என பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததும் அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக ராணா படத்தை இயக்கலாம் என ரஜினி உறுதி அளித்ததாகவும் கே.எஸ்.ரவிக்குமார் மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த செய்தி கே.எஸ்.ரவிக்குமாருக்கு மட்டும் இல்லை ரஜினியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்திதான்.
சினிமா செய்திகள்
‘சூர்யா-40’ படத்தில் ஹீரோயின் ஆன சிவகார்த்திகேயன் பட நாயகி..!


நடிகர் சூர்யாவின் பெயர் அறிவிக்கப்படாத 40-வது படத்தில் நாயகி ஆக ‘டாக்டர்’ திரைப்படத்தின் நாயகி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சூர்யா 40 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தின் நாயகியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் டாக்ட்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நாயகி ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தெலுங்குவில் ‘நானிஸ் கேங் லீடர்’ திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா மோகன். மேலும் இரண்டு அல்லது மூன்று தெலுங்கு படங்களில் நாயகி ஆக நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்துள்ளார். டாக்டர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
சூர்யா 40 திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் இமான் இசை அமைத்துள்ளார். முற்றிலும் கிராமத்துக் கதையாக சூர்யா 40 எனக் கூறப்படுகிறது.
.@priyankaamohan will play the female lead in #Suriya40BySunPictures@Suriya_offl @pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/KYyIrdhCrH
— Sun Pictures (@sunpictures) January 28, 2021
சினிமா செய்திகள்
ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்


நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.
நடிகர் அதர்வா கடைசியாக 100 என்னும் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து குருதி ஆட்டம், பத்ரி வெங்கடேஷ் ஒரு பெயர் அறிவிக்கப்படாத மற்றொரு படம் என படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் இளைய நடிகர்களுள் முன்னணியில் இருக்கும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும் தற்போது நாயகன் ஆக சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார்.
ஆகாஷ் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்நேகா ப்ரிட்டோவை திருமணம் செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தளபதி விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் அக்காள் மகன். இதன் மூலம் நடிகர் அதர்வா குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து அவர்களின் உறவினர் ஆகிவிட்டார் நடிகர் விஜய்.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் சேவியர் பிரிட்டோ தனது தயாரிப்பில் மருமகனை நாயகன் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.