சினிமா செய்திகள்
சூர்யா, ஜோதிகாவுக்கு ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு ஆதரவு அளித்த விஜய் சேதுபதி!


நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகாவும் ஆதரவாக ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் நன்றாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
கோவில்களுக்கு செலவு செய்வதைக் குறைத்து, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்தச் செலவு செய்ய வேண்டும் என்று ஜோதிகா பேசியிருந்தார். அது அப்போது சர்ச்சையாகாமல், கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது.
ஜோதிகாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும், ஆதரவையும் அளித்துள்ளது. எஸ்வி. சேகர், ஜீயர் உள்ளிட்டவர்கள் ஜோதிகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில், ஜோதிகாவின் கணவர் நாங்கள் தங்களது கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, சூர்யாவின் அறிக்கையைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘சிறப்பு’ என்று மட்டும் குறிப்பிட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
Sirappu 👍 pic.twitter.com/f63971LDCt
— VijaySethupathi (@VijaySethuOffl) April 28, 2020
ஜோதிகா பேசியது அயோக்கியத்தனமா? அப்படி என்ன சொல்லிட்டாங்க ஜோதிகா?
ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்.. சூர்யா அறிக்கை!
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!


தளபதி விஜய் நடிக்க இருந்த ‘தளபதி 6’5 திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏஆர் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அதன்பிறகு நெல்சன் உள்ளே இணைந்தார் என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படத்தை மிஸ் செய்த ஏஆர் முருகதாஸ் அதே கதையை சிவகார்த்திகேயனுக்கு கூறியுள்ளதாகவும் அவர் கதையை ஓகே செய்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவரான பொன்குமரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
சூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து அதிரடி அப்டேட்!


வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் ஆனால் அதன்பின் அந்த படம் குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படம் ட்ராப் செய்யப்பட்டதாக கூட வதந்தி கிளம்பியது.
ஆனால் ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கண்டிப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார்.
The music work for #VaadiVaasal starts today …. 🔥 @Suriya_offl @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) April 13, 2021
வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் ‘வாடிவாசல்’ படத்திற்காக இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?