சினிமா செய்திகள்
’அடாவடி அப்பா’ மொமென்ட்… நெகிழ்ச்சி உடன் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி!- வீடியோ


நடிகர் விஜய் சேதுபதி தனது தந்தையின் தைரிய குணம் குறித்த ஒரு நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சமுத்திரகணி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஏலே’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘அடாவடி அப்பா’ என்ற தலைப்பில் சில நிமிடங்கள் தனது அப்பாவின் அடாவடி மொமென்ட் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “சின்ன வயசுல ஒரு முற நாங்க குடும்பத்தோட குற்றாளம் போயிட்டு ரயில்ல சென்னை வந்திட்டு இருந்தோம். அப்போ ரிசர்வ் பண்ணாத பெட்டியில வரும் போது ஒரு ஆளு ரொம்ப சத்தம் போட்டு எல்லாருக்கும் இடைஞ்சல் பண்ணிட்டு இருந்தாரு. சுத்தி இருந்தவுங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில அடக்க முயற்சி செய்தும் அந்த ஆளு அமைதியாவே உட்காரல.
அப்போ பெர்த்-ல படுத்திட்டு இருந்த எங்க அப்பா வேகமா எழுந்து கால் வச்சு அந்த சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவரை எட்டி உதச்சிட்டு பேசாம படுத்துட்டாரு. அவமானம் தாங்காம அந்த நபர் பயங்கரமா கத்தி, மிரட்டல் எல்லாம் கொடுத்திட்டு அமைதியா போயிட்டாரு. சென்னை வந்ததும் எதுவும் செய்யாம அமைதியாவே போயிட்டார்’ என்றார்.
மேலும் விஜய் சேதுபதி கூறுகையில், “சென்னை வந்ததும் அந்த நபர் மிரட்டிய மாதிரி அப்பாவ எதும் செஞ்சிடுவாரோன்னு பயந்து எங்க அப்பாட்டையே கேட்டேன். அதுக்கு அவரு ‘இல்லப்பா, அவரோட கவுரவம் அந்த எடத்துல அடி வாங்கிருச்சுன்னு அந்த ஆளு கத்திட்டு இருந்தான். ஆனா அவன் ஒரு கோளைன்னு அவனுக்கே தெரியும்’ன்னு சொன்னார்” என்றார்.
அப்பாவிடம் இருந்து தான் இன்றைய வாழ்க்கையில் தான் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
#Aelay #ஏலே is a delightful tale about an ‘adaavadi’ appa & his son! Watch @VijaySethuOffl tell us about his #AdaavadiAppa @thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar@RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/UqO1vmsPU4
— Y Not Studios (@StudiosYNot) January 25, 2021
சினிமா செய்திகள்
ஓடிடி தளங்களுக்கும் 3 வகையான தணிக்கை சான்றிதழ்: மத்திய அரசு உத்தரவு


திரைப்படங்களுக்கு ’யூ’, ‘யூஏ’, மற்றும் ‘ஏ’ ஆகிய வகைகளில் தணிக்கைச் சான்றிதழ் இருப்பதுபோல் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கும் மூன்று வகையான தணிக்கை சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்படங்கள் போல் இல்லாமல் ஓடிடியில் வெளியாகும் வெப்தொடர்கள் மற்றும் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் வன்முறை காட்சிகளும் அதிகபட்சமாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை அடுத்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
13 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோர், மற்றும் ’ஏ’ சான்றிதழ் என மூன்று வகையான தணிக்கை சான்றிதழை ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் குறிப்பிட வேண்டும் என்றும் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சினிமா செய்திகள்
பைக் ரைடு, ரைபிள் பயிற்சி முடித்துவிட்டு சைக்கிள் ரைடு கிளம்பிவிட்டார் ‘தல’ அஜித்..!


தல அஜித் தனது அடுத்த சாகசப் பயணமாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மிக நீண்ட சைக்கிள் பயணத்துக்குச் சென்றுள்ளார்.
தல அஜித் தற்போது வலிமை பட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு வெளியீட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து 10 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு வாரணாசி வரையில் மிக நீண்ட பைக் ரைடு செய்து வைரல் ஆனார். அதன் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பின்னர் 2021-ம் ஆண்டுக்கான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.
இதற்காக சென்னை ரைபிள் க்ளப் வளாகத்தில் அஜித் பயிற்சி மேற்கொண்டார். அதை முடித்துவிட்டு தற்போது அடுத்த சாகசப் பயணமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு ரைடு சென்றுள்ளார் அஜித். ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதிகளில் அதிகாலை சைக்கிள் பயணத்தின் போது தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
வலிமை படத்தைப் பொறுத்தவரையில் முடிந்தளவு மே மாதம் தல பிறந்தநாளின் போது படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
‘சூரரைப் போற்று’ சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் – உண்மைதானா?


தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், சென்ற ஆண்டு நேரடியாக ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் அமேசான் பிரைம் வரலாற்றில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து மெகா ஹிட் ஆனது.
என்ன தான் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சூர்யா ரசிகர்கள், சூரரைப் போற்று சினிமா திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்னும் ஏமாற்றத்தில் இருந்தனர். அவர்களின் இந்த எண்ணத்தைப் போக்க, சூரரைப் போற்று படம் தியேட்டங்களில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இந்தத் தகவலை சூரரைப் போற்று படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.
மேலும் சில தமிழ் சினிமா வல்லுநர்கள், ‘தியேட்டர்களில் சூரரைப் போற்று மீண்டும் ரிலீஸாகும் என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை. காரணம் ஐநாக்ஸ், பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், ஓடிடியில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலே அதை தங்கள் திரையரங்குகளில் இருந்து எடுத்து விடும். இது அவர்களின் கொள்கையாகவே இருந்து வருகிறது. தமிழக தியேட்டர்களும் ஒஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படத்தைக் கட்டாயம் வெளியிட மாட்டார்கள்’ என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!