Connect with us

சினிமா செய்திகள்

மே 1ல் ’வலிமை’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இல்லை: அஜித் ரசிகர்கள் சோகம்

Published

on

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மே ஒன்றாம் தேதி ’வலிமை’ அப்டேட் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டுள்ளது

போனிகபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.

 

Advertisement

சினிமா செய்திகள்

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று: சிம்புவின் இரங்கல் அறிக்கை

Published

on

By

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும் வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை நேற்று அன்னையர் தினத்தில் காலமானார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர்களின் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதுகுறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

அன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உள்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடமாக இதற்குமுன் நட்பாக இணைந்திருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகான எளிமையாக எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் என பார்த்திருக்கிறேன்.

ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு, இதை கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் உங்கள் அனைவருடனும் இழப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

ஓடிடி-யில் ‘கர்ணன்’- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

By

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸானது ‘கர்ணன்’ திரைப்படம். தமிழகத்தில் மற்றும் ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனைப் புரிந்தது கர்ணன்.

1995 ஆம் ஆண்டு நடந்த ‘கொடியன்குளம்’ சாதிக் கலவரத்தை மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் எடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களின் வலியையும் வேட்கையையும் தத்ரூபமாக காட்சிப் படுத்திய காரணத்தினால் பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது கர்ணன்.

அதே நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன. இதன் காரணமாக நன்றாக ஓடி வந்தாலும் திரையரங்குகளில் கர்ணன் படத்தைத் திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து படக்குழு, ஓடிடி தளத்தில் கர்ணன் படத்தைக் கொண்டு வரும் திட்டத்தில் இருந்தது. இந்நிலையில் வரும் மே 14 ஆம் தேதி முதல் கர்ணன் திரைப்படம் ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசனே இயக்க போகிறாரா? அதிர்ச்சி தகவல்

Published

on

By

’இந்தியன் 2’திரைப்படத்தை கமல்ஹாசனே இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் தங்கள் திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டுதான் ஷங்கர் மற்ற திரைப்படங்களை இயக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் ஷங்கர் மற்றும் லைகா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் ஷங்கர் தெலுங்கு திரைப்படத்தை முடித்துவிட்டு திரும்பி ’இந்தியன் 2’ படத்திற்கு திரும்பி வர ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதால் கமலஹாசனே ’இந்தியன் 2’ படத்தை இயக்க முடிவு செய்து இருப்பதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை கமல்ஹாசன் தரப்பினரும் லைகா தரப்பினரும் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்டதாகவும் மீதி உள்ள படப்பிடிப்பை கமலஹாசனால் இயக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறப்பட்டு வருவதால் அவர் இந்த படத்தை அவர் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்26 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (11/05/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்4 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (11/05/2021)

தமிழ்நாடு8 hours ago

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை வெளியிட்டது!

தமிழ்நாடு9 hours ago

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம்; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு9 hours ago

ஊரடங்கு நேரத்தில் உதவி வேண்டுமா? சென்னை போலீஸின் ஹெல்ப்டெஸ்ட்க் எண்கள்!

Uncategorized9 hours ago

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 28,978: சென்னையில் எவ்வளவு?

தமிழ்நாடு9 hours ago

அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் – முதல்வர் எச்சரித்ததாக தகவல்

இந்தியா10 hours ago

கொரோனா உறுதியானதால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த தாசில்தார்: அதிர்ச்சி தகவல்

இந்தியா11 hours ago

இதை செய்தால் உலகை விட்டே கொரோனா சென்றுவிடும்: நியூமராலஜி நிபுணர்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending