சினிமா செய்திகள்
2 தெலுங்கு ஹீரோயின்கள்… 2 பாலிவுட் வில்லன்கள்… ‘தளபதி 65’ அப்டேட்..!


தளபதி 65 படத்தில் 2 தெலுங்கு ஹீரோயின்கள், 2 பாலிவுட் வில்லன்கள் எனப் பெரும் படையே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 65 படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயின்களாக 2 தெலுங்கு உலகின் பிரபல நடிகைகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஒப்பந்தம் செய்துள்ளாராம். தெலுங்கு பட உலகின் முன்னணியில் இருக்கும் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் நாயகிகளாக தளபதி 65-ல் நடிக்கின்றனர்.
இதேபோல், தளபதி விஜய் உடன் வில்லன் ஆக பேட்ட படப் புகழ் நவாசுதின் சித்திக் மோதுவார் என சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. தற்போது மேலும் இன்னொரு பாலிவுட் வில்லனும் விஜய் உடன் மோதுவார் எனக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா உடன் அஞ்சான் படத்தில் நடித்த நடிகர் வித்யுத் ஜாம்வால் தளபதி 65-ல் நடிக்க உள்ளாராம்.
ஆக, பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தளபதி 65 இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.
சினிமா செய்திகள்
ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்!


மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இந்நிலையில் இந்தப் படம் எவ்வளவு வசூலை வாரிக் குவித்துள்ளது என்பது குறித்து தகவல் வந்துள்ளது.
மோகன் லால் நடிப்பில், ஜீத்து ஜோப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை நாள்தோறும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில் த்ரிஷ்யம் 2 படம் கோடிக் கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ரூ. 20 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 25 கோடிக்கு வாங்கி வெளியிட்டது எனத் தகவல்.
இந்த படத்தை வெளியிட ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 15 கோடி அளித்துள்ளது எனவும் உள்வட்டாரத் தகவல். இதேபோன்று தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கு ரூ. 10 கோடியை த்ரிஷ்யம் 2 தயாரிப்பு நிறுவனம் பெற்றிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை த்ரிஷ்யம் 2 தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 30 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருப்பதாக தெரிகிறது.


9) மோகன்லால்
சினிமா செய்திகள்
’அருண்விஜய் 33’ திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!


அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இணையதளங்களில் வைரலானது. ஹரி இயக்கவிருக்கும் இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகவும் மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
#AV33 & #Hari16 shoot begins with pooja.#DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @gvprakash @prakashraaj @realradikaa @Ammu_Abhirami @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/ZeYv5K4KoC
— Drumsticks Productions (@DrumsticksProd) March 3, 2021
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் அருண்விஜய், அவருடைய தந்தை விஜயகுமார், ஹரி, அவருடைய மனைவி பிரீதா, நாயகி பிரியா பவானி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இவ்வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்று நடந்த பூஜை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Drumsticks Productions (@DrumsticksProd) March 3, 2021
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!