Connect with us

சினிமா செய்திகள்

‘பொறுப்பு பொங்கல்… வெறுப்பு பொங்கல்…’- டி.ஆரின் ‘சிரிப்பு பொங்கல்’ டயலாக்

Published

on

இயக்குநர் டி.ராஜேந்திர், எதுகை மோனையில் பேசியுள்ள ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

டி.ஆரின் மகனான சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் இன்று வெளியாகி, ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு இணையாக ஈஸ்வரன் படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெகு நாட்களுக்குப் பின்னர் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஈஸ்வரன் படம் வெளியாவதற்கு முன்னர், அதற்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. குறிப்பாக, ’50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள அனுமதி இருப்பதால், மாஸ்டர் படத்தை மட்டுமே பொங்கலுக்கு வெளியிட முடியும்’ என்று கூறி, சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.

பின்னர் ஈஸ்வரன் படக்குழு, ‘இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஓடிடி தளம் மூலம் ஈஸ்வரன் ரிலீஸ் செய்யப்படும்’ என்று கூறியது. இதற்கும் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஈஸ்வரன் படம், திட்டமிட்டபடி பொங்கல் அன்று வெளியிடப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து, தற்போது படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டி.ஆர், ஈஸ்வரன் படப் பிரச்சனை குறித்துப் பேச செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது பாணியில் ‘பொங்கல்’ என்கிற ஒற்றை வார்த்தை வைத்து விளையாடினார். இந்த சம்பவம் குறித்தான வீடியோ வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ பதிவு இதோ:

Advertisement

சினிமா செய்திகள்

நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Published

on

By

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் செந்திலின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் செந்தில் அவரது மனைவி. மகன். மற்றும் மருமகள் ஆகிய நால்வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் நால்வரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!

Published

on

By

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.

Continue Reading

சினிமா செய்திகள்

பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்த புதிய படம்!

Published

on

By

தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன்.

அவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் அடுத்ததாக, ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை எடுக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப் பார்த்திபன் முயன்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் இரவின் மடியில் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை ரகுமானும் பார்த்திபனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்ததே இல்லை. இதுவரை முதல் முறை ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘இரவின் நிழல்’ குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Continue Reading
வேலைவாய்ப்பு8 mins ago

விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு50 mins ago

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா56 mins ago

மேற்குவங்க பாஜக பிரமுகர் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்

இந்தியா1 hour ago

வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ விதிகளை மீறி வசூல் செய்த ரூ.300 கோடி: அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு2 hours ago

சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டதா?

சினிமா செய்திகள்3 hours ago

நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு4 hours ago

இன்றும் நாளையும் மெரீனாவில் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு4 hours ago

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

இன்றும் நாளையும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சூப்பர் சலுகை!

தமிழ்நாடு5 hours ago

+2 பொதுத்தேர்வை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா2 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending