சினிமா செய்திகள்
புகைப்படம், பெயர் எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை… அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தளபதி!


நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தனது பெயர், புகைப்படம் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனத் தடை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய்-ன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியையும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் உருவாக்கினார். ஆனால், உடனடியாக நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி-க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், “தந்தை எஸ்.ஏ.சி ஆரம்பித்துள்ள கட்சியிலோ அல்லது அமைப்பிலோ எந்த ரசிகர்களும் மக்களும் சேரத் தேவையில்லை. கட்சி, அமைப்பு என எதனுடனும் எனக்குத் தொடர்பு இல்லை. ரசிகர்கள் அமைப்பு, கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம். எனது தந்தை ஆரம்பித்தார் என்பதற்காக ரசிகர்கள் அவருக்குப் பணியாற்றத் தேவையில்லை” எனத் தனக்கும் தனது தந்தை ஆரம்பித்துள்ள அமைப்பு, கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இதன் பின்னர் கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் விஜய் தனது அப்பாவுக்கு ஒரு நோட்டீஸை அனுப்பி உள்ளார். அதில், ‘எஸ்.ஏ.சந்திரசேகரின் எவ்வித நடவடிக்கைகளுக்கும் விஜய் அனுமதியோ ஒப்புதலோ அளிக்கவில்லை. கட்சியிலும் அமைப்பிலும் விஜய் பெயரோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே ஒப்புதல் இன்றி பயன்படுத்திய காரணங்களுக்குத் தற்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில், ‘நான் 1993-ம் ஆண்டு நடிகர் விஜய்-க்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். ஆனால் அன்று அவரிடம் நான் எந்தவொரு அனுமதியையும் கேட்கவில்லை. அதேபோல் தான் இன்றும். எனக்கு அந்த நடிகரைப் பிடித்திருக்கிறது. நான் அமைப்பு, கட்சி என ஆரம்பித்துள்ளேன்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வைத்து செய்த இளைஞர்; வைரல் வீடியோ!


செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. படத்திற்கு இதுவரை கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு தரப்புப் படத்தைப் புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், இன்னொரு தரப்பு தங்களுடைய ஆதங்கத்தை பீறிட்டு வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், படத்தை முதல் நாள் ஸ்பெஷல் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவரிடம், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று கருத்து கேட்டுள்ளது. அந்த பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு கொடுத்த ரிவ்யூ வேற லெவல் வைரலாகி வருகிறது.
அடேய் யார்ரா நீ எனக்கே உன்ன பார்க்கணும் போல இருக்கே 😂😂😂 #NenjamMarappathillai pic.twitter.com/F0WAMQUFpR
— DINESH UDHAY (@Me_dineshudhay) March 5, 2021
எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர இந்தப் படத்தில் ரெஜினா காசண்டிரா, நந்திதா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தனர். ஆனால், பொருளாதாரச் சிக்கல், தயாரிப்பு நிறுவனத்தில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னரும் ரிலீஸ் செய்யப்படவில்லை. தற்போது அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து படம் வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சம் மறப்பதில்லை ஸ்னீக் பீக் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
டீசர் வெளியானதே எனக்கு தெரியாது: ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ இயக்குனர் அதிர்ச்சி!


நான் இயக்கிய திரைப்படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது எனக்கு தெரியாது என்று அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் அவர்கள் தனது பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று முன்தினம் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ் நடித்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதுகுறித்து இந்த படத்தை இயக்கினார் வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் அவர்கள் கூறியிருப்பதாவது
திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/roghanth/posts/2878916829048413
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் அப்பாவுக்கு கிடைத்த புதிய பதவி!


தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ செல்வராகவனின் ’சாணி காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் களமிறங்க உள்ளார் என்பதும் அவர் நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா ஒரு நடிகை என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார், கேரள பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
சினிமா செய்திகள்2 days ago
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
கிரிக்கெட்2 days ago
4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!