சினிமா செய்திகள்
’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?


தளபதி விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தை நெல்சன் இயக்கவிருக்கும் நிலையில் அவருடைய 66வது படத்தை அட்லி இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்பதால் மீண்டும் இந்த கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
‘மெர்சல்’ படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், அந்த படத்தின் பட்ஜெட் தாறுமாறாக இருந்ததால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும், இதற்கு முழு காரணம் அட்லி தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அட்லியை வைத்து படமெடுக்க ஸ்ரீதேனாண்டாள் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது என்றும் விஜய் வற்புறுத்தினாலும் அதை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. எனவே தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பது என்பது நடக்கவே நடக்காது என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன
அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படமும் நல்ல வசூலை தந்தாலும் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக அந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தரவில்லை என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே அட்லியை வைத்து இனிமேல் படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவது கடினமே என்று கூறப்பட்டு வருகிறது
சினிமா செய்திகள்
ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதா சூர்யாவின் சூரரை போற்று?


சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினர்.
ஜிஆர் கோபிநாத் என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படமான இந்த படம், ஒரு சாதாரண இளைஞர் எப்படி விமானம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகிறார் என்பதை மிகவும் சிறப்பாக தனது திரைக்கதையின் மூலம் இயக்குனர் சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.
இதுவரை ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் ஒன்று என்பதும் சூர்யா சிறந்த நடிகராகவும் அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான பட்டியலிலும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 15-ம் தேதி அடுத்த கட்ட பட்டியல் வெளியாகும் என்றும் அந்த பட்டியலிலும் சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த படம் ஆஸ்கர் விருதை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.
சினிமா செய்திகள்
ரஜினி-லதா 40வது திருமண நாள்: ரசிகர்கள் வாழ்த்து!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திருமணம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து ரஜினி லதா திருமணம் நடந்து இன்றுடன் 40 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து ரசிகர்கள் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ரஜினி தனது மனைவி லதா மற்றும் இரண்டு மகள்களுடன் இன்று தனது திருமண நாளை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சினிமா செய்திகள்
சிம்பு-கெளதம்மேனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!


சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கவிஞர் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவலும் மிக விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
It’s all making sense now.
Happy to announce the title …@arrahman @SilambarasanTR_ @IshariKGanesh @VelsFilmIntl #SilambarasanTR47 pic.twitter.com/iLaKfe4XZI— Gauthamvasudevmenon (@menongautham) February 25, 2021
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!