சினிமா செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடங்கிய டி.ராஜேந்தர்!


டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை தனது தலைமையில் தொடங்கியுள்ளார்.
அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட டி.ராஜேந்தர் 200-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இதை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மோசடி நடந்தது என்று எல்லாம் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெற்றி பெற்ற தேணாண்டால் பிலிம்ஸ் முரளி பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
அதே நேரத்தில் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று ஒன்று உருவாகியுள்ளது. ஏற்கனவே நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என்று ஒன்று பிரிந்துள்ள நிலையில், புதிதாக ஒரு சங்கம் உருவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த இரண்டு முக்கிய நிகழ்வில் கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதவியேற்பு விழா பேனரில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று பெயரிடப்பட்டு இருந்ததுதான்.
சங்கத்தின் பெயரே தெரியாமல் இப்படி பேனர் வைத்த இவர்கள், எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைச் சரியாக நிர்வகிப்பார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
சிம்பு இந்த சங்கத்திற்காகத்தான் புதியதாக ஒரு படத்தை இலவசமாக நடித்துக்கொடுப்பார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
சினிமா செய்திகள்
’கர்ணன்’ செகண்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் அறிவிப்பு!


தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலை 5.03 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிய இதுகுறித்த தகவலில் நாளை வெளியாகும் பாடலின் டைட்டில் ’பண்டாரத்தி புராணம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Get ready folks, #Karnan Paadal 2 #PandarathiPuranam from tomorrow 5:03 PM #YeaaluPandarathi @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie pic.twitter.com/OGHpOAszwu
— Kalaippuli S Thanu (@theVcreations) March 1, 2021
சினிமா செய்திகள்
வெளியானது அலறவிடும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக்!


எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸுக்குத் தயாரான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு சிலப் பிரச்சனைகள் எழுந்த காரணத்தினால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்படியான சூழலில் வரும் 5 ஆம் தேதி முதல் படத்தை சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளது படக்குழு. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் ராக்ஃபோர்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, இசையமைத்து உள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர ரெஜினா கசாண்டிரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்குப் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் முதல் ஸ்னீக் பீக் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
5 days to go for #NenjamMarappathillai
Ramsey @ Ramasamy and Mariam will meet you on big screens from March5 @Rockfortent @siddhu_viva @Karthikravivarm @KarpagamTheatre @srisakthicinema @Sarvam_Cinemas @iam_SJSuryah @thisisysr @ReginaCassandra pic.twitter.com/NOAjZoqwKX— Kanthaswamy Arts Centre (@KanthaswamyC) February 28, 2021
சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!


பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் வை ராஜா வை, இவன் தந்திரன், இந்திரஜித், இருட்டுஅறையில்முரட்டுகுத்து, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் சிம்புவுடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ஆனந்தம் விளையாடும் வீடு’
இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் கயிறு இழுக்கும் போட்டி போன்ற ஸ்டைலில் ஒரு பக்கம் ஆண்களும் ஒருபக்கம் பெண்களும் இழுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Happy to reveal 1st look & title of @Gautham_Karthik 'Anandham Vilayadum Veedu' produced by Sri Vari Films P. Ranga Nathan directed by @NandaPeriyasamy sir. @srivaarifilm @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM @soundar4uall @DoneChannel1 @digitallynow pic.twitter.com/4ws8isgwnK
— RJ Balaji (@RJ_Balaji) March 1, 2021