சினிமா செய்திகள்
சிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்!


இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம்.
வேகமாகப் படம் எடுப்பதற்குப் பேர் போனவர் சுசீந்திரன். அதற்கு சமீபத்திய உதாரணம் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தினை 30 நாட்களுக்குள் எடுத்து முடித்தது.
ஏற்கனவே சுசீந்திரன் இயக்கி ஷிவ ஷிவா, ஏஞ்சிலினா, ஈஸ்வரன் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறன. தொடர்ந்து இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் இயக்குகிறார் என்று கூறுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினும் அரசியல் படப்பிடிப்பு என்ற பிசியாக உள்ளார். 2021 மே மாதம் தேர்தல் சமயம் என்பதால் ஒரு பக்கம் பிரச்சாரம், போராட்டம் என்று இல்லாமல் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகள் 15 ரீமேக் என அடுத்தடுத்து படங்கள் இவர் வசம் உள்ளன.
ஆனாலும் சுசீந்திரன் வேகமாகப் படத்தை இயக்கக் கூடியவர், எனவே இவருடைய இயக்கத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
சினிமா செய்திகள்
’வலிமை’-யை முடித்துவிட்டு ‘தளபதி 66’-ல் இணையும் இயக்குநர்..?


நடிகர் அஜித்-ன் வலிமை படத்தை முடித்த உடன் தளபதி 66 படத்தில் அதே இயக்குநர் ஒப்பந்தம் ஆக உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் அஜித்-ன் வலிமை படம் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விநோத் இயக்கி வருகிறார். தமிழில் சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமான இயக்குநர் விநோத் அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே நாயகன் அஜித் அதே தயாரிப்பாளர் போனி கபூர் என இயக்குநர் விநோத் வலிமை படத்தை தற்போது இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் இயக்குநராக விநோத் உள்ளார். தற்போது நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உடன் தளபதி 65 படத்தின் ஷீட்டிங்கில் பிஸியாகி உள்ளார் விஜய்.
தளபதி 65 விரைவாகவே முடிக்கப்பட உள்ளதால் தற்போது தளபதி 66-க்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இதில் விநோத் இயக்குனர் ஆவார் என சினிமா துறையில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
சினிமா செய்திகள்
’பாகுபலி’ பிரபாஸ், ’கேஜிஎஃப்’ யஷ்… இருவருடனும் மோதும் விஜய் சேதுபதி..!


’பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் கே.ஜி.எஃப் புகழ் நடிகரும் யஷ் ஆகிய இருவரும் இணைந்து தேசிய அளவிலான வெளியீட்டுக்குத் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் நாயகன்களாக நடிக்கின்றனர்.
பெரும் பட்ஜெட்டில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களின் இரு பிரம்மாண்ட ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் தேசிய அளவிலான படம் என்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் இந்த இரு பெரிய நட்சத்திரங்கள் உடன் மோதும் வகையில் தமிழ் சினிமாவில் இருந்து மற்றொரு பிரம்மாண்ட வில்லன் நடிகரைத் தேர்வு செய்ய முடிவு செய்ததாம் சலார் படக்குழு.
அதில் எடுத்ததும் அனைவரது விருப்பமுமாக இருந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதன் அடிப்படையில் இந்த மாபெரும் பட்ஜெட் படத்தின் மூலமாக மீண்டும் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் திரைப்படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்ற படத்தில் வில்லன் ஆக கமிட் ஆனார். தற்போது சலார் மூலம் தமிழ், தெலுங்கும், கன்னடம், ஹிந்தி என தேசிய அளவில் வெளியாகும் ஒரு படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.
சினிமா செய்திகள்
குடும்பத்துடன் கேரளாவுக்கு வந்து இறங்கியுள்ள சன்னி லியோன்… வைரல் வீடியோ!


குடும்பத்துடன் நடிகை சன்னி லியோ கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோ தற்போது பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடித்தும் கலந்து கொண்டும் வருகிறார். மலையாள டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை சன்னி லியோன் கேரள வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்தால் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஷூட்டிங் என ஒரு மாதம் காலம் ஆகிவிடுவதால் இதையே காரணமாகக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பி வந்துள்ளார் சன்னி லியோன். ஷூட்டிங்-ல் கலந்தும் கொள்ளலாம் என்றும் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடியது போலவும் இருக்கும் என்றும் வந்துள்ளாராம்.
-
வேலைவாய்ப்பு1 day ago
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு1 day ago
தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?
-
வேலைவாய்ப்பு2 days ago
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு24 hours ago
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!