சினிமா செய்திகள்
குடும்பத்துடன் கேரளாவுக்கு வந்து இறங்கியுள்ள சன்னி லியோன்… வைரல் வீடியோ!


குடும்பத்துடன் நடிகை சன்னி லியோ கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோ தற்போது பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடித்தும் கலந்து கொண்டும் வருகிறார். மலையாள டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை சன்னி லியோன் கேரள வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்தால் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஷூட்டிங் என ஒரு மாதம் காலம் ஆகிவிடுவதால் இதையே காரணமாகக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பி வந்துள்ளார் சன்னி லியோன். ஷூட்டிங்-ல் கலந்தும் கொள்ளலாம் என்றும் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடியது போலவும் இருக்கும் என்றும் வந்துள்ளாராம்.
சினிமா செய்திகள்
’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!


சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சூர்யா தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதால் ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் டி இமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ராண்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிந்ததே
சினிமா செய்திகள்
முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா போட்டியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து பூஜா ஹெக்டே தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
’கர்ணன்’ செகண்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் அறிவிப்பு!


தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலை 5.03 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிய இதுகுறித்த தகவலில் நாளை வெளியாகும் பாடலின் டைட்டில் ’பண்டாரத்தி புராணம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Get ready folks, #Karnan Paadal 2 #PandarathiPuranam from tomorrow 5:03 PM #YeaaluPandarathi @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie pic.twitter.com/OGHpOAszwu
— Kalaippuli S Thanu (@theVcreations) March 1, 2021