சினிமா செய்திகள்
சிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு!


கொரோனா ஊரடங்கு எல்லாம் முடிந்து திரைப்பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. சிம்பு அடுத்ததாக மாநாடு திரைப்படத்தில் நடிப்பார் என்று பார்த்தால் சுசீந்திரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க மதுரை சென்றுவிட்டார்.
சிம்பு மதுரை சென்றது மட்டுமல்லாமல், படத்தின் ஷூட்டிங் செல்லும் முன்பு மீனாட்சி அம்மன் கோவில் சென்று பூஜையும் செய்துவிட்டு வந்துள்ளார்.
சுசீந்திரன் எந்த திரைப்படத்தை எடுத்தால் வேகமாக எடுத்து முடிக்கக் கூடியவர். எனவே 30 நாட்களில் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிம்புவும் ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வரமாட்டார் என்று கூறப்பட்டு இருந்தாலும், தற்போது மன நிலையில் நல்ல மாற்றம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் எடையை பெருமளவில் ஊரடங்கு காலத்தில் குறைத்துள்ள சிம்பு, மன்மதன் சிம்பு போல இருப்பார் என்று கூறப்படுகிறது.
சிம்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்தாலும், அது சிம்பு தானா என்று தெரியாத அளவிற்கு மாஸ்க் எல்லாம் அணிந்து சென்றுள்ளார். உடல் எடை குறைந்த பிறகு சிம்புவின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. எனவே அடுத்து சிம்புவின் புகைப்படம் வெளிவருகிறது என்றால் படத்தின் ஃப்ரஸ்ட் லுக்காகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படி எல்லாம் பாசிடிவாக ஒரு பக்கம் போக, படத்தை நேரடியாக வெளியிட ஹாட் ஸ்டார் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நீண்ட காலம் பிறகு சிம்புவின் படம் இப்படி வேகமாக உருவாகி வரும் நிலையில், படம் திரைக்கு வரும் என்று பார்த்தால் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிக பணம் அளித்து வாங்க ஹாட் ஸ்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் படத்திற்கான அட்வான்ஸ் பணத்தை 30 நாளில் ஷூட்டிங் முடிந்தால் மட்டுமே வழங்க முடியும் என்று ஹாட் ஸ்டார் தெரிவித்துள்ளது.
30 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்தால், பொங்கலுக்கு படம் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே ஹாட் ஸ்டாரா? திரை அரங்கா? என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால் ஓடிடியில் வெளியானால் சிக்கல் ஏதுமில்லாமல், அதிக லாபம் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. மறுபக்கம் கொரோனா ஊரடங்கு முடிந்தாலும் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆக தயாராக உள்ள மாஸ்டர் திரைப்படம், சில நாட்களே படப்பிடிப்பு உள்ள அஜித்தின் வலிமை திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ? சிம்புவின் படம் வேகமாக உருவாகி, விரைவில் வெளியாகும் என்பது மட்டும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக இருக்கும்.
சினிமா செய்திகள்
அஜித் வீட்டிலேயே ‘வலிமை’ டப்பிங் பணிகளா?


அஜித் கட்டியிருக்கும் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அவரது வீட்டிலுள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது,
ஆனால் அந்த செய்தி தவறானது என்று அஜித் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஜித் வழக்கம் போல் வெளியில் உள்ள பின் ஸ்டூடியோவில் தான் டப்பிங் செய்வார் என்றும் அவரது வீட்டிலுள்ள டப்பிங் ஸ்டுடியோ இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது,
மேலும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும் அஜித்தின் அனுமதி பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளிவரலாம் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது,
சினிமா செய்திகள்
’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!


சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சூர்யா தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதால் ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் டி இமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ராண்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிந்ததே
சினிமா செய்திகள்
முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா போட்டியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து பூஜா ஹெக்டே தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.