சினிமா செய்திகள்
ரூ.30 கோடி சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் லைகா!


சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் வெளியாகும் போது 15 கோடி ரூபாய் நிதி பிரச்சனையில் சிக்கியது.
அப்போது சீமராஜா படத்தை ரிலீஸ் செய்ய, திரைப்பட ஃபினான்ஷியர் மதுரை அன்பு 15 கோடி ரூபாய் கொடுத்து உதவினார். அதற்காக மாதம் 45 லட்சம் வட்டி கட்ட வேண்டும் என்ற நிலைக்கு சிவகார்த்திகேயன் தள்ளப்பட்டார்.
பின்னர், 3 மாதங்கள் வரை சிவகார்த்திகேயன் வட்டி தொகையைச் செலுத்தியபோது, ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள சிவாவிடம் எப்படி இந்த பணத்தைப் பெறுவது என்று திட்டம் தீட்டிய மதுரை அன்பு, லைகாவுக்கு ஒரு படத்தைச் சிவா நடித்து கொடுப்பது என்று ஒப்பந்தம் போட்டுக்கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் படி லைகா நிறுவனம் 15 கோடி ரூபாயை மதுரை அன்புக்கு வழங்கி விட்டது.
ஆனால் சிவா நீண்ட காலமாக லைகாவுக்கு படம் ஏதும் செய்து தராமல் இருந்த வந்தார். அண்மையில் அட்லீ உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதையை லைகாவுக்கு சிவா செய்து கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
விரைவில் ஷூட்டிங் செல்லலாம் என்று லைகா திட்டமிட்டு வரும் போது, தனக்கு 70 கோடி ரூபாய் மார்க்கெட் உள்ளது, எனவே எனக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் திரைப்படங்களின் மார்க்கெட் முழுவதும் சரிந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த சம்பள உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
மே 1ல் ’வலிமை’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இல்லை: அஜித் ரசிகர்கள் சோகம்


அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மே ஒன்றாம் தேதி ’வலிமை’ அப்டேட் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்
போனிகபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.
#Valimai #AjithKumar @ZeeStudios_ @BayViewProjOffl #Vinoth #Niravshah @SureshChandraa @thisisysr @dhilipaction @DoneChannel1 pic.twitter.com/5Is8C3gFHO
— Boney Kapoor (@BoneyKapoor) April 23, 2021
சினிமா செய்திகள்
‘அகில உலக சூப்பர்ஸ்டார்’-ன் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்- ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியீடு!


‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ என தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் நடிகர் சிவா. அவரின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
‘தமிழ் படம்’ மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சிவா. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும் சிவா, அவ்வப்போது நிகழ்ச்சிகளையும் ஹோஸ்ட் செய்து வருகிறார். வானொலி தொகுப்பாளராக தன் திரைப் பயணத்தை ஆரம்பித்த சிவா, இன்று முன்னணி காமெடி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளி வந்த ‘தமிழ் படம் 2’-ம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் தான் ‘இடியட்’.
A horrific fest #IDIOT – trailer will be releasing on this April 25th.@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/wRtnUoZ6Vr
— Screen Scene (@Screensceneoffl) April 23, 2021
‘லொல்லு சபா’ நிகழ்ச்சியை வெகு நாட்கள் இயக்கி வந்த ராம்பாலா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை ஸ்கிரீ்ன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் 25 ஆம் தேதி இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிக்கி கல்ரானி இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படம் எடுக்கப்படுவதால் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
சினிமா செய்திகள்
அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஹாஸ்டல்’ First Look!


அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹாஸ்டல்’ என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தோன்றி புகழடைந்துள்ள யோகியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
Looking forward to this fun one we made with this lovely people ❤️#HostelFirstLook@Ashokselvan @memyselfsrk @actorsathish @pravethedop #BoboShashi @krrishskumar @muralikris1001 @YogiKpy @tridentartsoffl @teamaimpr @Muzik247in pic.twitter.com/XYvG1nnsOP
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 23, 2021
அசோக் செல்வன், கடைசியாக ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் மிகப் பெரிய ஹிட் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹாஸ்டல் முதலில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா பவானிசங்கர், தமிழ்த் திரையுலகின் மிகவும் பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!