Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… கழுவி ஊற்றும் பாடகி சுசித்ரா..!

Published

on

நடிகர் மற்றும் பிக்பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனை பாடகியும் பிக்பாஸ் 4 பிரபலமும் ஆன சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களாகத் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இதில் 4வது சீசனில் போட்டியாளராக மிகச் சொற்பமான நாட்களே உள்ளே இருந்துவிட்டு வெளியேறியவர் பாடகி சுசித்ரா. பைனல்ஸ் சமீபத்தில் தான் முடிந்துள்ள நிலையில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார் சுசித்ரா.

சுசித்ரா கூறுகையில், “நடிகர் கமல்ஹாசன் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கிறார். கமலும் அவருடைய பிராண்டும் போலியானவை. நிகழ்ச்சியில் கதர் துணிகளுக்கு ஆதரவு சின்தட்டிக் துணிகளை வியாபார நோக்கில் கேமிராவுக்காக எங்கள் கைகளில் கொடுத்தனர். தகுந்த வெற்றியாளருக்கு தோல்வியை கொடுத்தார்.

வெற்றியாளரை தானே முடிவு செய்து அவரே அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். விரைவில் அவர் ஒரு தோல்வியாளராகவே தன் பயணத்தைத் தொடங்குவார்” எனப் பல மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உடன் ஒரு ஆங்கிலக் கவிதை வாயிலாக விமர்சித்துள்ளார் சுசித்ரா. சுசித்ரா சொல்லியது அனைத்தும் பொய் என்றும் அவர் கதர் ஆடையைத் தான் நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் என்றும் சுசித்ராவை ரசிகர்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!

Published

on

By

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் அவர் யார் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த சிந்தனையில் இருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக அறிவித்து உள்ளார்.

இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!

Published

on

By

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள். 

குறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. 

இந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.

பிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். 

Continue Reading

சினிமா செய்திகள்

நான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி

Published

on

By

மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட அனிதா, தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வரும் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனிதா சம்பத் காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குவது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் மிடில் கிளாஸ் பெண் என்று தானே கூறினீர்கள், ஆனால் இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்கி இருக்கிறீர்களே, என்று கேட்டதற்கு பதிலளித்த அனிதா சம்பத், நான் ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு சொந்தக் காலில் வளர்ந்து உள்ளேன். இதெல்லாம் உங்கள் மனதுக்கு தோன்றாதா? மிடில் கிளாஸ் பெண்களை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். உலகம் உங்களைக் கேள்வி மட்டும் தான் கேட்கும் பாராட்டவே பாராட்டாது, அதையும் மீறி முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் இப்பவும் மிடில் கிளாஸ்தான் அதே நேரத்தில் பிச்சைக்காரி அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
சினிமா செய்திகள்15 mins ago

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!

வேலைவாய்ப்பு16 mins ago

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு24 mins ago

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு34 mins ago

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு1 hour ago

ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி

இந்தியா2 hours ago

கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை

வேலைவாய்ப்பு2 hours ago

தேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!

வேலைவாய்ப்பு2 hours ago

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending