சினிமா செய்திகள்
மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!


மாநாடு படத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா ஊரடங்கு பிறகு, சிம்பு வேகமாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தில் 30 நாட்களுக்குள் நடித்து முடித்துவிட்டு, இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் சிம்புவின் அப்பா, டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அது அவர்களது குடும்பத்துக்குக் கவுரக் குறைச்சலாக நினைக்கிறார் அவரது மனைவி உஷா ராஜேந்தர். அதை சரி செய்ய, தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது உள்ள நிதி சிக்கலைத் தீர்க்க சிம்பு இலவசமாக ஒரு படத்தை நடித்துக் கொடுப்பார். அந்த படத்தைச் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலில் நின்று தோற்ற ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உதவு முன்வந்துள்ளது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான கதை கொரோனா ஊரடங்கின் போது மாநாடு படத்திற்குப் பதிலாகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயார் செய்யப்பட்ட கதைதான் இது என்றும், படத்திற்குப் பெயர் கூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
இந்த படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அதை முழுவதுமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கும் போது மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
’வலிமை’-யை முடித்துவிட்டு ‘தளபதி 66’-ல் இணையும் இயக்குநர்..?


நடிகர் அஜித்-ன் வலிமை படத்தை முடித்த உடன் தளபதி 66 படத்தில் அதே இயக்குநர் ஒப்பந்தம் ஆக உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் அஜித்-ன் வலிமை படம் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விநோத் இயக்கி வருகிறார். தமிழில் சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமான இயக்குநர் விநோத் அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே நாயகன் அஜித் அதே தயாரிப்பாளர் போனி கபூர் என இயக்குநர் விநோத் வலிமை படத்தை தற்போது இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் இயக்குநராக விநோத் உள்ளார். தற்போது நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உடன் தளபதி 65 படத்தின் ஷீட்டிங்கில் பிஸியாகி உள்ளார் விஜய்.
தளபதி 65 விரைவாகவே முடிக்கப்பட உள்ளதால் தற்போது தளபதி 66-க்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இதில் விநோத் இயக்குனர் ஆவார் என சினிமா துறையில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
சினிமா செய்திகள்
’பாகுபலி’ பிரபாஸ், ’கேஜிஎஃப்’ யஷ்… இருவருடனும் மோதும் விஜய் சேதுபதி..!


’பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் கே.ஜி.எஃப் புகழ் நடிகரும் யஷ் ஆகிய இருவரும் இணைந்து தேசிய அளவிலான வெளியீட்டுக்குத் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் நாயகன்களாக நடிக்கின்றனர்.
பெரும் பட்ஜெட்டில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களின் இரு பிரம்மாண்ட ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் தேசிய அளவிலான படம் என்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் இந்த இரு பெரிய நட்சத்திரங்கள் உடன் மோதும் வகையில் தமிழ் சினிமாவில் இருந்து மற்றொரு பிரம்மாண்ட வில்லன் நடிகரைத் தேர்வு செய்ய முடிவு செய்ததாம் சலார் படக்குழு.
அதில் எடுத்ததும் அனைவரது விருப்பமுமாக இருந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதன் அடிப்படையில் இந்த மாபெரும் பட்ஜெட் படத்தின் மூலமாக மீண்டும் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் திரைப்படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்ற படத்தில் வில்லன் ஆக கமிட் ஆனார். தற்போது சலார் மூலம் தமிழ், தெலுங்கும், கன்னடம், ஹிந்தி என தேசிய அளவில் வெளியாகும் ஒரு படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.
சினிமா செய்திகள்
குடும்பத்துடன் கேரளாவுக்கு வந்து இறங்கியுள்ள சன்னி லியோன்… வைரல் வீடியோ!


குடும்பத்துடன் நடிகை சன்னி லியோ கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோ தற்போது பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடித்தும் கலந்து கொண்டும் வருகிறார். மலையாள டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை சன்னி லியோன் கேரள வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்தால் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஷூட்டிங் என ஒரு மாதம் காலம் ஆகிவிடுவதால் இதையே காரணமாகக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பி வந்துள்ளார் சன்னி லியோன். ஷூட்டிங்-ல் கலந்தும் கொள்ளலாம் என்றும் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடியது போலவும் இருக்கும் என்றும் வந்துள்ளாராம்.
-
வேலைவாய்ப்பு1 day ago
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு1 day ago
தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?
-
வேலைவாய்ப்பு2 days ago
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு23 hours ago
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!