Connect with us

சினிமா செய்திகள்

ஈஸ்வரன் – முதல் ஷோ பார்த்த ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனம்!

Published

on

சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்துடன் ஒரு முறை இந்த படத்தைப் பார்க்கலாம். வழக்கம் போல மசாலா, கிராமத்துப் படம்தான் என்று முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஈஸ்வரன் படத்தை முதல் ஷோ பார்த்த ரசிகர்களின் விமர்சனம் என்னவென்று இங்குப் பார்க்கலாம்.

1) முதல் 30 நிமிடம் – கொண்டாட்டம்
2) அடுத்த 30 நிமிடம் – ஈடுபாடு
3) அடுத்த 30 நிமிடம் – செண்டிமெண்ட் & டச்சிங்
4) கடைசி 30 நிமிடம் – ஆர்வம்

மொத்தமாகப் பார்த்தால் பக்கா பொழுதுபோக்கு
சிம்புக்கு ஒரு சரியான கம்பேக்

அமெரிக்கா

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஈஸ்வரன் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், “அமெரிக்காவில் சிம்புக்குப் பயங்கர கிரேஸ். சும்புக்கு ஏற்ற கம்பேக் திரைப்படம், குடும்பக் கதையை எப்படி படமாக்க வேண்டும் என்பது இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. சிம்பு, பாரதிராஜா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. கண்டிப்பாக பிளாக்பஸ்டர் படம்தான்” என்று கூறியுள்ளார்.


முதல் பாதி ரசிக்கும் படி உள்ளது, இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. ஆனால் படம் வேகமாக முடிந்துவிடுகிறது. ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா செய்திகள்

வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி.. காவல்துறைக்கு பயந்து மன்னிப்பு கேட்ட பரிதாபம்!

Published

on

By

நடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாக்கத்தி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தி கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுக்கு முன்பு பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி பீனுவை போலீசார் என்கவண்டர் லிஸ்டில் சேர்த்தனர். அதன்பிறகு அந்த ரவுடி போலீசில் சரணடைந்தார். சென்னையில் தொடங்கிய இந்த பட்டாக்கத்தி கலாச்சாரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. சேலம் ஜூசஸ், ஸ்ரீரங்கம் அன்பு என பலரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இன்று தனது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தனது செயலுக்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியிருப்பேன்.

தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்தப் படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகியுள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’

இவ்வாறு கூறியுள்ளார்

Continue Reading

சினிமா செய்திகள்

சிசிடிவியில் சிக்கிய நடிகர் விஜய்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

By

சென்னை தேவி தியேட்டரில் நடிகர் விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளார். இதற்காக அவர் தியேட்டர் வந்த சிசிடிவி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தற்போது தியேட்டர்கள் இயங்கி வந்தாலும், முதலில் தமிழக வெளியான தமிழக அரசின் உத்தரவால், முதல் சில காட்சிகள் மட்டும் 100% இருக்கைகளுடன் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு பொங்கலன்று தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் பொங்கியது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யும் சென்னை தேவி தியேட்டரில் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துள்ளார். இதற்காக அவர் திரையரங்கிற்கு வந்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஜனவரி 13 ஆம் தேதி காலை 7 மணி அளவில் விஜய் வந்துள்ளார். தொப்பியும், மாஸ்க்கையும் அணிந்தபடி யாரும் அடையாளம் காணாதவாறு தனக்கே உரிய ஸ்டைலில் விஜய் வந்தார். பின்பு தியேட்டர் நிர்வாகிகளுக்கு வணக்கம் சொல்லி திரையரங்கிற்குள் சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

மாஸ்டர் குழுவினருடன் தளபதியின் பொங்கல் கொண்டாட்டம்… வைரலாகும் கலகலப்பான வீடியோ

Published

on

By

மாஸ்டர் படக்குழுவினருடன் தளபதி விஜய் கொண்டாடிய பொங்கல் விழா வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியானது. 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவின் படி படம் வெளியானது. கொரோனாவுக்குப் பின் வெளியாகும் மாஸ் ஹீரோ ஒருவரின் படம் என்பதால் மாஸ்டர் திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்த்த வசூலை பெற்றுள்ள போதும் திரை விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களேயே மாஸ்டர் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த சூழலில் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனைப் பணியாளர்களுடனும் இணைந்து மாஸ்டர் பொங்கலாக தளபதி விஜய் கொண்டாடி உள்ளார். பட்டு வேட்டி சட்டையில் மாஸாக பொங்கல் விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என விஜய் கலக்கி உள்ளார்.

உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகி மாளவிகா, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் அத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அத்தனைப் பேரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Continue Reading
தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்19 mins ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)

தினபலன்3 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (17/01/2021)

பர்சனல் பைனான்ஸ்8 hours ago

அவசர பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற 6 வழிகள்!

வேலைவாய்ப்பு8 hours ago

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா9 hours ago

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய குழு பரிந்துரை!

வேலைவாய்ப்பு9 hours ago

சென்னையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 hours ago

MD படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

இந்தியா11 hours ago

ஓடிடியில் வரும் படங்கள், நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய வேண்டும்: தணிக்கை துறைத் தலைவர்

வேலைவாய்ப்பு12 hours ago

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்13 hours ago

வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி.. காவல்துறைக்கு பயந்து மன்னிப்பு கேட்ட பரிதாபம்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ2 days ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 days ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 days ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ6 days ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 week ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ1 week ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

வீடியோ1 month ago

விஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்!

Trending