சினிமா செய்திகள்
சர்வம் தாளமயம் டிரைலர் ரிலீஸ்!
பீட்டருக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது ஏற்படும் காதலும், ஆனால், அவன் வேறு மதம் என்பதால், அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளும், அவற்றை மீறி பீட்டர் எப்படி மிகப்பெரிய இசை ஆளுமையாக மாறுகிறான் என்பதை கருவாக வைத்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இந்த படம் சிறந்த மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் அற்புதமாக வந்து இருக்கின்றன.
சொல்லப்போனால், ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கையை பார்த்து இன்ஸ்பயராகி தான் ராஜீவ் மேனன் இப்படியொரு கதையை உருவாக்கி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
இந்த படமும் வரும் பிப்ரவரி 1ம் தேதி ரிலீசாகிறது. டிசம்பருக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதியன்று பல பெரிய படங்கள் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு – #VIJAY65 கலக்கல் அப்டேட்!


தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது இயக்குனர் நெல்சன், ஜார்ஜியாவில் விஜய் உள்ளிட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து 100 பேர் கொண்ட குழு ஜார்ஜியாவுக்கு சென்றது. அவர்களுக்கு சென்னையிலும் ஜார்ஜியாவிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருந்தும் அந்த குழுவில் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பை முடிக்கும் படக்குழு சென்னை திரும்புகிறதாம். அதன் பின்னர் சென்னை, ஐதராபாத் மற்றும் முமபை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து சிறு இடைவெளிகளில் படம்பிடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!


தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tested: COVID-19 Negative. pic.twitter.com/wF61zXVJ6m
— sonu sood (@SonuSood) April 23, 2021
இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!


தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
இந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.
பிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!