சினிமா செய்திகள்
ரஜினி, தனுஷ்க்கு ஒரே நாளில் விருது: மத்திய அமைச்சர் அறிவிப்பு


தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கும் தேசிய விருது பெற்ற தனுசுக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் இதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கு அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டது என்பதும் சிறந்த இயக்குனராக வெற்றிமாறன் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.
இதனை அடுத்து மே 3ஆம் தேதி தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கும், தேசிய விருது தனுஷுக்கும் என ஒரே நாளில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மாமனார் மருமகன் ஆகிய ரஜினி, தனுஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் மிக உயர்ந்த விருதுகள் பெற இருப்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
குக் வித் கோமாளி’ தீபா கணவருடன் கலந்து கொள்ளும் புதிய நிகழ்ச்சி: புரமோ வெளீயீடு


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தீபா என்பதும் அவருக்கு சரியாக சமைக்கத் தெரியவில்லை என்றாலும் வெள்ளந்தியாக, கள்ளம் கபடமின்றி அவர் செய்த காமெடிகள் ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபா தற்போது விஜய் டிவியின் மற்றுமொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக புரமோ வீடியோ ஒன்று சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதில் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் தங்களது ஜோடியுடன் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்து விட்டதே என்று வருத்தப்படும் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ready-யா இருங்க மக்களே! 😎
Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 – ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்.. #MrMrsChinnathirai #VijayTelevision pic.twitter.com/sZCm34clq7
— Vijay Television (@vijaytelevision) April 20, 2021
சினிமா செய்திகள்
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?


தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பெற்றோர் மறைவுக்கு பின்னர் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவரது வருமானத்தில்தான் அவரது ஏழு சகோதரிகள் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்போது அறிந்து கொண்ட சமந்தா, அப்போதே பெண் ஆட்டோ ஓட்டுநர் எனக்கு பாராட்டு தெரிவித்ததோடு கண்டிப்பாக தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்தார்.
சமந்தாவின் இந்த சர்ப்ரைஸ் பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சமந்தா ஏற்கனவே பல்வேறு நபர்களுக்கு சமூகசேவை செய்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் விலை மதிப்புள்ள கார் வாங்கி கொடுத்த நிகழும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!


உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிக்கிள் 15 என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பாலிவுட்டில் தயாரித்த போனிகபூர் தமிழிலும் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடலாசிரியரான அருண் ராஜா காமராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் ’ஆர்ட்டிக்கிள் 15’ பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டோம். தயாரிப்பாளர் போனிகபூர் அவர்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சகோதரர் @Arunrajakamaraj அவர்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டோம். தயாரிப்பாளர் @BoneyKapoor சாருக்கும், நண்பர் @mynameisraahul-க்கும் நன்றி. @BayViewProjOffl #romeopictures @ZeeStudios_ @DoneChannel1
— Udhay (@Udhaystalin) April 19, 2021
-
சினிமா செய்திகள்2 days ago
எனக்கு அவரை தவிர யாருமே இல்லை: விவேக் மேனேஜரின் உருக்கமான பதிவு
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!