Connect with us

சினிமா செய்திகள்

சின்ட்ரல்லா பேயாக மிரட்ட வரும் ராய் லட்சுமி!

Published

on

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் பேய் படத்திற்கு `சின்ட்ரல்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாயகர்களுக்கு சவால் விடும் விதமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் கோலிவுட்டிலும் தலையெடுக்க துவங்கி விட்டன.

நயன்தாரா, அனுஷ்கா,தமன்னா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகள் பலரும் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நடித்த படங்கள் வசூல் சாதனைகளும் நிகழ்த்தி உள்ளன.

இதனால் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகளை இயக்குநர்கள் உருவாக்கி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் திகில் படத்தில் ராய் லட்சுமிக்கு முன்னணி கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. திகில் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘‘சின்ட்ரெல்லா திகில் கதையம்சம் உள்ள படம். ராய் லட்சுமி பேயாகவும், இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமியிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்துவிட்டார்.

அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த வி‌ஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வமித்ரா இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

Advertisement

சினிமா செய்திகள்

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

Published

on

By

கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ’ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சங்கர், ரூபா நடிப்பில் டி ராஜேந்தர் இசையில் உருவான திரைப்படம் ’ஒரு தலை ராகம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது முதல் பட தயாரிப்பாளர் காலமானதை அடுத்து டி ராஜேந்தர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரு தலை ராகம் எனது முதல் படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் இப்ராகிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். என்னை திரை உலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் அவர்தான். என் திரையுலக படகை கரை சேர்த்தவர், இன்று மறைந்துவிட்டார். இந்த உலகை விட்டுப் பிரிந்து விட்டார். கண்ணீரால் என் கண்கள் நனைகிறது. இன்று என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

Published

on

By

வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா, அதன் பின்னர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பக்கபலமாக இருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொரோனா காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கொரோனாவில் இருந்து விலகியே இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியா இந்த கொரோனா சமயத்தில் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அறையில் பாடல் ஒன்றை பாடும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். ஆண்ட்ரியா ஒரு மிகச் சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.

Continue Reading

சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

Published

on

By

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கடந்த 1975 ஆம் ஆண்டு ’மாணவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் சிவாஜி கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பாண்டுவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய மனைவி குமுதா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
சினிமா செய்திகள்5 mins ago

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

தமிழ்நாடு17 mins ago

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

சினிமா செய்திகள்24 mins ago

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தமிழ்நாடு43 mins ago

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்தியா1 hour ago

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்2 hours ago

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

சினிமா செய்திகள்3 hours ago

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

தமிழ்நாடு4 hours ago

இன்று முதல் எந்தெந்த கடைகள் எத்தனை மணி நேரம் இயங்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு5 hours ago

டீ குடித்துவிட்டு மொய் வைக்கலாம்: வித்தியாசமாக கொரோனா நிதி திரட்டிய டீக்கடைக்காரர்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending