சினிமா செய்திகள்
‘மாப்பிள்ளைகள் வரலாம்’- மேட்ரிமோனி புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்


நடிகை பிரியா பவானி சங்கர் ’மாப்பிள்ளைகள் வரவேற்கப்படுகின்றன’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தற்போது கோலிவுட் நடிகைகளிலேயே தமிழ் பேசத் தெரிந்த வெகு சிலரில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். அரை டஜனுக்கு அதிகமான படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருந்தாலும் இன்னமும் பெயர் அறிவிக்கப்படாத அரை டஜனுக்கும் அதிகமான படங்களைத் தன் கை வசம் வைத்துள்ளார் பிரியா.
நடிகர் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2, பொம்மை, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, வான், அசோக் செல்வன் உடன் பெயர் அறிவிக்கப்படாத படம் என வரிசையாக வெளியீட்டுக்குப் படங்கள் உள்ளன. இதுபோக புது பட அறிவிப்புகள் ஒரு 6 2021-ம் ஆண்டு வரிசையாக வெளியாகுமாம். இந்த சூழலில் நடிகை பிரியா மேட்ரிமோனிக்கான ஒரு புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை உருவாக்கிவிட்டுள்ளார்.
‘Prospective grooms are welcome’ pose 😛
That default matrimony picture by @kiransaphoto 🤗 pic.twitter.com/ZkKJwo25Rz— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 22, 2020
சினிமா செய்திகள்
சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!


தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
இந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.
பிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சினிமா செய்திகள்
நான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி


மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட அனிதா, தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வரும் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நான் இப்பவும் மிடில் கிளாஸ்தான் அதே நேரத்தில் பிச்சைக்காரி அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
அப்துல்கலாம் நியமனம் செய்த காமெடி நடிகருக்கு மத்திய அரசின் விருது!


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட காமெடி நடிகர் ஒருவருக்கு மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக நியமனம் செய்யப்பட்டவர் நடிகர் தாமு. இவர் பாலசந்தர் இயக்கிய ’வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த தாமு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!