சினிமா செய்திகள்
‘சிரிக்கும் ரோஜாவுக்கான சைக்கோ ராஜா’- மிரட்டும் பிரபுதேவாவின் ‘பஹிரா’ டீசர்


நடனப் புயல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படம் ‘பஹிரா’. அதன் மிரட்டும் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், பஹிரா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.
பிரபுதேவா முதன்முறையாக பல வித்தியாச கெட்டப்புகளுடன் நடித்திருக்கும் பஹிராவின் ஒவ்வொரு காட்சியும் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்குப் பரபரப்பைக் கூட்டுகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
🩸🔨HARD HITTING and 😱‼️HIGHLY IMPACTFUL #BagheeraTeaser♣️🃏💃 launched by Busiest #Dhanush👨🎨..
An Out & Out Unique🧿️📽 film by #PrabhuDeva🎩🕺 with 6 Heroines #AmyraDastur, #RamyaNambeesan, #JananiIyer, #SanchitaShetty & #Gayathrie👭➕💘.
Watch it💋, https://t.co/u6evEMguXV pic.twitter.com/K3um2HhJ9q
— Kollywood Now (@kollywoodnow) February 19, 2021
அவர் அதைத் தொடர்ந்து எடுத்த ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படம் ஃப்ளாப் ஆன நிலையில், தற்போது அடுத்தப் படத்துடன் கம்-பேக் கொடுத்துள்ளார்.
பரதன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்தப் படத்துக்கு கணேசன் சேகர் இசையமைத்து உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அமிரா தஸ்தர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாசர் மற்றும் சாய் குமாருக்குப் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டு உள்ளன.
படத்தின் மிரட்சியளிக்கும் டீசர்:-
சினிமா செய்திகள்
’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!


நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது.
இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து உள்ளது என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் டைட்டில் தான் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Here we go… #Sulthan2ndSingle
“Yaaraiyum ivlo azhaga parkala”
from March 5th Friday 7pm.
A Vivek-Mervin Musical @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #சுல்தான் #Sulthan2ndSingleFromMarch5th pic.twitter.com/1ZlwrXfkVu
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 3, 2021
சினிமா செய்திகள்
ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி!


செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவியது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
#NenjamMarapadhillai 3 days to go paartha udane varathu thaan Kaadhal ; pakka paaka varadhu Gajjuu @selvaraghavan @iam_SJSuryah @ReginaCassandra @Nanditasweta @Arvindkrsna @editor_prasanna @Madan2791 @kbsriram16 @APVMaran @V4umedia_ @teamaimpr pic.twitter.com/UTwr0TxPG5
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 3, 2021
சினிமா செய்திகள்
மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா2 days ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!