Connect with us

சினிமா செய்திகள்

என்.டி.ஆர் படத்துக்கு அனுமதி.. மோடி படத்துக்கு தடை… பாரபட்ஷம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?

Published

on

விவேக் ஓபராய் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி படம், வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தேர்தல் நேரத்தில், மோடி படம் வரக் கூடாது, என்றும் இது தேர்தல் விதிமீறல் எனவும் பட ரிலீசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டது.

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுவது குறித்து விளக்கமளிக்க படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் உள்ள சர்ச்சை பக்கங்களை மையமாக வைத்து லக்‌ஷ்மியின் என்.டி.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறும் காட்சிகள் படத்தில் இல்லை என தேர்தல் ஆணையம் படத்தின் ரிலீசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சினிமா

தர்பார் சூட்டிங் முடிந்தது… இமயமலை புறப்பட்டார் ரஜினி காந்த்…

Published

on

தயானந்தா ஆசிரமத்தில் உள்ள ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினி

கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்த பின்பும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். உடல்நலக் குறைவு காரணங்களால் தொடர்ந்து இமயமலை செல்வதை தவிர்த்த ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து 2.0 மற்றும் காலா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து இமயமலை சென்றார். தற்போது “தர்பார்” படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார்.

Continue Reading

சினிமா

கைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… தீபாவளிக்கு வெளியாகிறது…

Published

on

கைதி படத்திற்கு தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதி திரைப்படம் வெளியாவதும் உறுதியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம்தான் இந்த கைதி.

இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாழுகின்றனர்.

இப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாகுவதற்கு முன்பே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Continue Reading

சினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அட்லீ இயக்கிய பிகில்… சக் தே இந்தியா படமா என்று நெட்டில் விமர்சனம்…

Published

on

அட்லி-விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சனிக்கிழமை வெளியான இதன் ட்ரெயிலர் வழக்கம்போல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இன்றுவரை யூட்டியூப் ரெண்டிங்கிலும் இருக்கிறது.

அட்லி எடுத்த எல்லாப்படத்தையும் ஏதாவது ஒரு படத்தின் தழுவல் என்று பரவலாக விமர்சனம் வருவதும் இயல்பு. ‘ராஜா ராணி’யை ‘மௌன ராகம்’ என்றும் ‘தெறி’யை  ‘சத்ரியன்’ படத்துடனும் ‘மெர்சல்’ஐ ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துடனும் ஒப்பிட்டுக்கூறி கேலி பேசினார்கள். என்றாலும் அந்த மூன்று படமும் பெரிய அளவில் வெற்றியை தேடித்தந்தது.

தற்போது புட் பாலை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிகில் திரைப்படத்தையும் ஜென்டில் மேன் மற்றும் சக் தே இந்தியா திரைப்படங்களின் தழுவல் என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஏற்றார் போல சாருக்கானும் சக் தே இந்தியா மாதிரியான ஒரு திரைப்படம். அதற்கு என்னுடைய வாழ்த்து என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா “சக்தே இந்தியா திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க வில்லை எனவும், வாங்கியதாக வெளியான செய்திகள் வதந்தி எனவும் பிகில் படத்தின்  கிரியேடிவ் பிரடியுசர் அர்ச்சனா கல்பாத்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் பிகில் திரைப்படத்தின் சென்சாருக்கு எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

திரைப்படம் வெளியான பிறகுதான் தெரியும் உண்மை நிலவரம் அதுவரை பொறுப்போம்…

Continue Reading
வேலை வாய்ப்பு10 hours ago

தில்லி காவல் துறையில் வேலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
Uncategorized18 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (17/10/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்18 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/10/2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய (16/10/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/10/2019)

வேலை வாய்ப்பு2 days ago

இந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!இன்றே கடைசிநாள்!

வேலை வாய்ப்பு2 days ago

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!உடனே விண்ணப்பியுங்கள்!

வேலை வாய்ப்பு2 days ago

நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை! இன்றே கடைசி நாள்!

வேலை வாய்ப்பு2 days ago

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வேலை!

வேலை வாய்ப்பு2 days ago

அரசு கல்வித்துறையில் ஆசிரியருக்கான வேலை! இன்றே கடைசி நாள்!

சினிமா3 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா3 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு2 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்2 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

சினிமா2 months ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

Uncategorized5 days ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 week ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ4 weeks ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ2 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ2 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ3 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ4 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ4 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ4 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending