Connect with us

சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ மாஸான ரிலீஸ்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; முட்டுக்கொடுக்கும் ‘தளபதியன்ஸ்’!

Published

on

Vijay

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் இரண்டே நாட்களில் வெள்ளித்திரையில் படையல் படைக்க உள்ளது. பொதுவாக பொங்கல் சமயங்களில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸாவதும், அதை மக்கள் கொண்டாடித் தீர்ப்பதும் யாருக்கும் பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், தற்போது கொரோனா பரவல் காலகட்டம் என்பதனால், மாஸ்டர் ரிலீஸ் இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளிப் போயிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக மாஸ்டர் படத்துக்கு ஏதுவாக, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையை மட்டுமே நிரப்பிக் கொள்ளலாம் என்கிற கட்டுப்பாடுக்குத் தளர்வு அளித்து, 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் ஆணைப் பிறப்பித்தது தமிழக அரசு. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மத்திய அரசும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு. இந்தப் பிரச்சனை ஓய்ந்த நிலையில், நேற்று மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்தது.

ஆன்லைனில் மட்டுமல்லாமல், தியேட்டர் கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்தது. ரசிகர்களும் முண்டியடித்து டிக்கெட் வாங்குவதில் ஈடுபட்ட காரணத்தினால், கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன. இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள், ‘இப்போ மாஸ்டர் தேவையா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதற்கு விஜய் ரசிகர்கள், ‘அரசியல் கட்சிக் கூட்டம், மற்ற பொழுதுபோக்கு கூடங்கள்ல கூடதான் கூட்டம் அள்ளுது. அங்கெல்லாம் எங்க போச்சு கொரோனா கட்டுப்பாடு?’ என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மாஸ்டர்-க்கு எழுந்த எதிர்வினைகளும் அதற்கான பதிலடிகளும்,

 

 

Advertisement

சினிமா செய்திகள்

’தளபதி 65’ வில்லன் செல்வராகவனா? பரபரப்பாக பரவும் தகவல்!

Published

on

By

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டால் செல்வராகவன் இந்த படத்தின் வில்லன் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக நடிக்க பாலிவுட் பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் ஏற்கனவே தமிழில் ’சாணி காகிதம்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தளபதி 65 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading

சினிமா செய்திகள்

புகுந்து விளையாடிய கொரோனா: நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினர் அதிர்ச்சி

Published

on

By

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த ’குஷி’ பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் ராஜஸ்தான் அணியின் உரிமையாளரும் கூட என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டியின் அம்மா, அப்பா, கணவர், குழந்தைகள் மற்றும் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷில்பா ஷெட்டிக்கு மட்டும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது எனது குடும்பத்தினர் அனைவரும் தனித்தனியாக ஒவ்வொரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்/ மருத்துவர் அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறி உள்ளார்கள். கொரோனா தடுப்பு விதி முறைகளை கடைபிடித்து வரும் அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகின்றனர்.

எனவே அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது வந்தவுடன் சானிடைசர் உதவியால் கையை கழுவுங்கள் என்று அறிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை அடுத்து அவரது குடும்பத்தினர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

சிஎஸ்கே வீரருக்கும் உதவி செய்த நடிகர் சோனுசூட்! 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆக்சிஜன்!

Published

on

By

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரின் உறவினர் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் சோனுசூட் உதவி செய்து பத்து நிமிடத்தில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா என்பது தெரிந்ததே. அவருடைய 65 வயது அத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

Suresh Rainaஆனால் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை. இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் தனது 65 வயது அத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும் எனவே தயவு செய்து உதவி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை பார்த்த நடிகர் சோனு சூட் உடனடியாக அவருடைய அத்தைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்துவிட்டு பின்னர் டுவிட்டர் பக்கத்தில் இன்னும் 10 நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும் என்று பதில் அனுப்பி இருந்தார். இதனையடுத்து சுரேஷ் ரெய்னா நடிகர் சோனுசூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த தகவல் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Continue Reading
தமிழ்நாடு10 mins ago

பொறுத்தது போதும், அதிமுகவுக்கு தலைமை ஏற்று கொள்ளுங்கள்: சசிகலா ஆதரவு போஸ்டரால் பரபரப்பு!

இந்தியா23 mins ago

ஒரு பிளேட் அரிசிக்கஞ்சி ரூ.1380: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!

தமிழ்நாடு38 mins ago

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது? விஞ்ஞானிகள் கணிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்3 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (09/05/2021 முதல் 15/05/2021 வரை)

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்4 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (09/05/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்5 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்7 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (09/05/2021)

சினிமா செய்திகள்10 hours ago

’தளபதி 65’ வில்லன் செல்வராகவனா? பரபரப்பாக பரவும் தகவல்!

தமிழ்நாடு10 hours ago

முதல்வரின் ஆக்சிஜன் கோரிக்கை: இருமடங்காக ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாடு12 hours ago

அப்பாவு எம்.எல்.ஏவுக்கு முக ஸ்டாலின் கொடுக்க போகும் சூப்பர் பதவி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending