சினிமா செய்திகள்
50 சதவிகித இட வசதிதான் என்றாலும் வசூலை அள்ளிய மாஸ்டர்… சென்னையில் ஒரு நாள் வசூல் எவ்வளவு?


மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று வெளியானது. தமிழகத்தில் நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவிகித இட வசதியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து 50 சதவிகித இட வசதி உடனான திரை அரங்குகளில் மக்கள் வழக்கம் போல் பொங்கல் மாஸ் திரைப்படத்தைக் காண சென்றனர். திரை அரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்தினாலும் பழைய வருமானம் படத்துக்கு வருமா என்ற கேள்வி இருந்தது. கொரோனாவுக்கு முன்பு எல்லாம் ஒரு திரைப்படத்தின் வசூல் முதல் வாரத்திலேயே கணிக்கப்பட்டு ஹிட் படமா இல்லையா என்பது அறிவிக்கப்பட்டுவிடும்.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியானால் ஒரே நாளில் 100 கோடி வசூல் என செய்தி வெளியாவது எல்லாம் கொரோனாவுக்கு முன்பு. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளுடன் இருந்தாலும் மாஸ்டர் படம் எதிர்பார்த்த வசூலையே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் மாஸ்டர் படத்தின் வசூல் 1.21 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி.. காவல்துறைக்கு பயந்து மன்னிப்பு கேட்ட பரிதாபம்!


நடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாக்கத்தி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தி கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுக்கு முன்பு பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி பீனுவை போலீசார் என்கவண்டர் லிஸ்டில் சேர்த்தனர். அதன்பிறகு அந்த ரவுடி போலீசில் சரணடைந்தார். சென்னையில் தொடங்கிய இந்த பட்டாக்கத்தி கலாச்சாரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. சேலம் ஜூசஸ், ஸ்ரீரங்கம் அன்பு என பலரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இன்று தனது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தனது செயலுக்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்தப் படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகியுள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’
இவ்வாறு கூறியுள்ளார்
சினிமா செய்திகள்
சிசிடிவியில் சிக்கிய நடிகர் விஜய்… ரசிகர்கள் அதிர்ச்சி!


சென்னை தேவி தியேட்டரில் நடிகர் விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளார். இதற்காக அவர் தியேட்டர் வந்த சிசிடிவி வீடியோ வைரலாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தற்போது தியேட்டர்கள் இயங்கி வந்தாலும், முதலில் தமிழக வெளியான தமிழக அரசின் உத்தரவால், முதல் சில காட்சிகள் மட்டும் 100% இருக்கைகளுடன் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு பொங்கலன்று தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் பொங்கியது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யும் சென்னை தேவி தியேட்டரில் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துள்ளார். இதற்காக அவர் திரையரங்கிற்கு வந்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஜனவரி 13 ஆம் தேதி காலை 7 மணி அளவில் விஜய் வந்துள்ளார். தொப்பியும், மாஸ்க்கையும் அணிந்தபடி யாரும் அடையாளம் காணாதவாறு தனக்கே உரிய ஸ்டைலில் விஜய் வந்தார். பின்பு தியேட்டர் நிர்வாகிகளுக்கு வணக்கம் சொல்லி திரையரங்கிற்குள் சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Thalapathy @actorvijay Watched #MasterFilm FDFS in Devi Cineplex Chennai! #Master @actorvijay pic.twitter.com/xKiCAjX0KJ
— Vijay Fans Trends (@VijayFansTrends) January 15, 2021
சினிமா செய்திகள்
மாஸ்டர் குழுவினருடன் தளபதியின் பொங்கல் கொண்டாட்டம்… வைரலாகும் கலகலப்பான வீடியோ


மாஸ்டர் படக்குழுவினருடன் தளபதி விஜய் கொண்டாடிய பொங்கல் விழா வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியானது. 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவின் படி படம் வெளியானது. கொரோனாவுக்குப் பின் வெளியாகும் மாஸ் ஹீரோ ஒருவரின் படம் என்பதால் மாஸ்டர் திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்த்த வசூலை பெற்றுள்ள போதும் திரை விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களேயே மாஸ்டர் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த சூழலில் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய அத்தனைப் பணியாளர்களுடனும் இணைந்து மாஸ்டர் பொங்கலாக தளபதி விஜய் கொண்டாடி உள்ளார். பட்டு வேட்டி சட்டையில் மாஸாக பொங்கல் விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என விஜய் கலக்கி உள்ளார்.
உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகி மாளவிகா, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் அத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அத்தனைப் பேரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
Here’s a glimpse of how we celebrated Master Pongal this time, last year! 🤩
Kondaattam kalai kattatum nanba! Happy Pongal ❤️#MasterPongal #Master pic.twitter.com/1T2Df42VfU
— XB Film Creators (@XBFilmCreators) January 15, 2021