சினிமா செய்திகள்
கார்த்தியின் சுல்தான்: ரிலீசுக்கு முன்பே ரூ.16 கோடி தயாரிப்பாளருக்கு லாபமா?


கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை விட வியாபாரம் ரூபாய் 16 கோடிக்கு அதிகம் செய்துள்ளதால் ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படம் ரூ 16 கோடி லாபம் அடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் நேரடியாக ரிலீஸ் செய்வதால் கமிஷன் அடிப்படையில் இந்த படம் கிடையாது என்பதால் 16 கோடி லாபம் என்பது தயாரிப்பாளருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
சினிமா செய்திகள்
அந்நியன் இந்தி ரீமேக்: ஷங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ்?


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான அந்நியன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் நடித்த கேரக்டரில் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்குனர் ஷங்கருக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்நியன் திரைப்படத்தின் கதை முழுவதும் தனக்கு சொந்தமானது என்றும் இந்த கதைக்கான முழு தொகை எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு தானே கொடுத்திருப்பதாகவும் எனவே அதன் ரீமேக் உரிமையும் தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் அதையும் மீறி நீங்கள் என்னுடைய அனுமதியை பெறாமல் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் உருவாக்க இருப்பதாக அறிவித்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நன்றியை மறந்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அன்னியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சட்டவிரோதம் என்றும் உடனடியாக இந்த படத்தின் ரீமேக் குறித்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
’இந்தியன் 2’ வழக்கு: லைகா நிறுவனத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அனுமதி!


’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து லைக்கா நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பின்னர்தான் அவர் ’இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவார் என்று கூறப்பட்டதால் ’இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஒரே படத்தில் நடிக்க்கும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ்: இயக்குனர் இவர்தான்!


‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்று செய்திகள் அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, தர்ஷா, பவித்ரா உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின் திரைப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட முக்கிய விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ‘குக் வித் கோமாளி’ மூலம் பல இளம் பெண்களின் மனதை கவர்ந்த அஸ்வின் ஹீரோவாகி இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
’நாளை சிம்புவின் புதிய பட அறிவிப்பா? ரசிகர்கள் குஷி!