சினிமா செய்திகள்
இன்று முதல் ரிசர்வேஷன் தொடக்கம்: ‘கர்ணன்’ ரிலீஸ் உறுதியானது!


நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் தேர்தலுக்குப் பின் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு வரலாம் என்ற காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் சந்தேகம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது
ஆனால் இன்று காலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று 07.10 மணி முதல் ‘கர்ணன்’ படத்தின் ரிசர்வேசன் தொடங்குவதாகவும் ரசிகர்கள் ரிசர்வேஷன் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளார். தனுஷ் மற்றும் கலைபுலி எஸ் தாணு ஆகியோர்களின் டுவிட்டுகளை அடுத்து ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
#Karnan is all set for a grand theatrical release, reservation starts from tomo 7:10 PM #KarnanArrivesOnApril9 @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil pic.twitter.com/psBIkWCmbV
— Kalaippuli S Thanu (@theVcreations) April 5, 2021
ஆனால் அதே நேரத்தில் நாளை தேர்தல் முடிந்தவுடன் நாளை மறுநாள் திரையரங்குகளுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் அமைந்தால் இதில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்போதைய நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் என் 9ஆம் தேதி ரிலீஸாவது 100% உறுதி என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.
#Karnan #april9th pic.twitter.com/CTIyZ7IjXt
— Dhanush (@dhanushkraja) April 5, 2021
சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்


ஜிவி பிரகாஷ் நடிப்பில் மொத்தம் பதினோரு படங்கள் உருவாகி வரும் நிலையில் அவற்றில் பாதி படங்களுக்கும் மேல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது
சினிமா செய்திகள்
குக் வித் கோமாளி’ தீபா கணவருடன் கலந்து கொள்ளும் புதிய நிகழ்ச்சி: புரமோ வெளீயீடு


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தீபா என்பதும் அவருக்கு சரியாக சமைக்கத் தெரியவில்லை என்றாலும் வெள்ளந்தியாக, கள்ளம் கபடமின்றி அவர் செய்த காமெடிகள் ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபா தற்போது விஜய் டிவியின் மற்றுமொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக புரமோ வீடியோ ஒன்று சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதில் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் தங்களது ஜோடியுடன் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்து விட்டதே என்று வருத்தப்படும் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ready-யா இருங்க மக்களே! 😎
Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 – ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்.. #MrMrsChinnathirai #VijayTelevision pic.twitter.com/sZCm34clq7
— Vijay Television (@vijaytelevision) April 20, 2021
சினிமா செய்திகள்
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?


தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பெற்றோர் மறைவுக்கு பின்னர் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவரது வருமானத்தில்தான் அவரது ஏழு சகோதரிகள் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்போது அறிந்து கொண்ட சமந்தா, அப்போதே பெண் ஆட்டோ ஓட்டுநர் எனக்கு பாராட்டு தெரிவித்ததோடு கண்டிப்பாக தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்தார்.
சமந்தாவின் இந்த சர்ப்ரைஸ் பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சமந்தா ஏற்கனவே பல்வேறு நபர்களுக்கு சமூகசேவை செய்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் விலை மதிப்புள்ள கார் வாங்கி கொடுத்த நிகழும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!