சினிமா செய்திகள்
கலைமாமணி விருது மிகப் பெரிய விருது.. யோகி பாபு சந்தோஷம்!


தமிழக அரசு காமெடி நடிகர் யோகி பாபாவுக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
கலைமாமணி விருதை பெற்ற யோகி பாபு செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கலைமாமணி விருது மிகப் பெரிய விருது, தமிழக முதல்வர் கையால் எனக்கு வழங்கப்பட்டது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லா கலைஞர்களுடனும் நிறையப் படங்கள் செய்து வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி” என்று கூறினார்.
கலைமாமணி விருது 1954 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களைப் பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயர் மதிப்பான விருதாகும். 2021-ம் ஆண்டு ஜெயலலிதா விருது என்ற பெயரில் இந்த கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ:
நடிகை சரோஜாதேவி, நடிகை சௌகார் ஜானகி, நடிகை ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார், தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா, இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குநர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி.
சினிமா செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கங்கனாவின் ‘தலைவி’ பட அப்டேட்..!


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி இன்று தலைவி படத்தின் வெளீயீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயா அம்மாவுக்காக, அவரது பிறந்தநாளில். புகழ்பெற்ற தலைவியின் கதையிஅ ஏப்ரல் 23-ம் தேதி முதல் திரை அரங்கங்களில் காணுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
To Jaya Amma, on her birthanniversary
Witness the story of the legend, #Thalaivi, in cinemas on 23rd April, 2021. @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms @ThalaiviTheFilm pic.twitter.com/JOn812GajH— Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2021
தலைவி படத்தில் கங்கனா உடன் முக்கிய வேடங்களில் நடிகர்கள் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், மது, ஜீசு சென் குப்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் நடிகை நதியா… எந்த கதாபாத்திரம் எனத் தெரியுமா?


த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்கில் நடிகை நதியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால்- மீனா ஆகியோரின் நடிப்பில் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது த்ரிஷ்யம் 2. இந்தப் படம் முதல் பாகத்தைவிட அதிகப் பாராட்டுகளைப் பெற்று பெரும் வெற்றிப்படமாகி உள்ளது. இந்த சூழலில் த்ரிஷ்யம் 2 வெற்றியை அறிந்து உடனேயே ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
தற்போது தெலுங்கு த்ரிஷ்யம் 2 ரீமேக் படத்தில் நடிகர் வெங்கடேஷ்- மீனா நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லி ஆக நடிகை நதியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நதியா ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வரிசையாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் தெலுங்கு படம் ஒன்றிலும் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிலும் நதியா நடிக்கத் தயாராகி வருகிறார்.
சினிமா செய்திகள்
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!


தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தைப் பார்த்த பின்னர் மக்கள் கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவார்கள் என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
விஜய் 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். மாஸ்டர் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 2020 பொங்கலுக்குத் தான் வெளியானது. இந்த வகையில் தளபதி 65 படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
படத்தில் பூஜா ஹெக்டே- ராஷ்மிகா மந்தனா என இரண்டு ஜோடிகளும் நவாசுதின் சித்திக், வித்யுத் ஜாம்வால் என இரண்டு வில்லன்களும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் உடன் அருண் விஜய் மற்றும் பூவையார் ஆகிய இருவரும் நடிப்பது உறுதி என்று மட்டும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தளபதி 65 இயக்குநர் நெல்சன் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “தளபதி 65 படத்தில் சண்டைக் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அன்பறிவு என்னும் ஸ்டன்ட் இரட்டையர்கள் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பணியாற்ற உள்ளனர். இந்த சண்டைக் காட்சிகளைப் பார்த்த பின்னர் கே.ஜி.எஃப் ஸ்டன்ட் காட்சிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
சினிமா செய்திகள்2 days ago
’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?
-
கிரிக்கெட்2 days ago
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருக்கலாம்? ஏன்?
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலைவாய்ப்பு!
-
பல்சுவை2 days ago
வைரல் வீடியோ: Zoom அழைப்பில் பேசிக் கொண்டிருந்த கணவருக்கு முத்தமிட முயன்ற மனைவி; அடுத்து நடந்தது…