சினிமா செய்திகள்
ஜோதிகா ரேவதியின் அதிரடி ஜாக்பாட் டிரைலர்!
பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் உருவான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோதிகா, ரேவதியின் ஜாக்பாட் பட டிரைலர் ரிலீசாகி உள்ளது.
நூறு கபாலி, ஆயிரம் பாட்ஷா என பல பஞ்ச் டயலாக்குகளை ஜோதிகா இந்த படத்தின் டிரைலரில் அநாயசமாக பேசி நடித்துள்ளார். மேலும், அந்த சந்திரமுகி டயலாக் எல்லாம் செம்ம எண்டர்டெயின்மெண்ட்.
போலீஸ், நர்ஸ் என பல வேடங்கள் போட்டு, திருடும் கும்பலுக்கு தலைவியாக ஜோதிகாவும், அவருக்கு உதவும் நபராக ரேவதியும் அட்டகாசம் செய்கின்றனர்.
மேலும், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு, மொட்டை ராஜேந்தர் என காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் டிரைலர் செல்கிறது.
சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படமாவது ஜோதிகாவுக்கு நல்ல வெற்றியை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
சினிமா செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!


தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tested: COVID-19 Negative. pic.twitter.com/wF61zXVJ6m
— sonu sood (@SonuSood) April 23, 2021
இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!


தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். வடிவேல் தற்போது முன்பைப் போல திரைப்படங்களில் நடிப்பதில்லை. சந்தானமும் தொடர்ந்து கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் யோகி பாபு, சதீஷ் போன்றவர்கள் தான் பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் காமெடியன்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ‘தமிழ் படம் 2’-ல் வில்லனாக நடித்ததன் மூலம் சதீஷின் மார்க்கெட் சற்று உயர்ந்தே இருக்கிறது. தற்போது சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா, சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்தப் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
இந்நிலையில் சர்வதேச சென்சேஷன் சன்னி லியோனுடன் சதீஷ், அடுத்தப் படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் என்ற தகவல் உலவி வருகிறது. இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை பிரியா பவானிசங்கர், ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என கலாய்த்துள்ளார்.
பிரியாவின் இந்த போஸ்டுக்குக் கீழே பல நெட்டிசன்களும் தங்கள் நக்கல் கமென்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சினிமா செய்திகள்
நான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி


மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு காஸ்ட்லியான மேக்கப் பொருட்களை வாங்குகிறீர்களே என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனிதா சம்பத் நான் மிடில்கிளாஸ் தான், ஆனால் அதே நேரத்தில் பிச்சைக்காரி இல்லை என பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட அனிதா, தற்போது அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வரும் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நான் இப்பவும் மிடில் கிளாஸ்தான் அதே நேரத்தில் பிச்சைக்காரி அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!