Connect with us

சினிமா செய்திகள்

விஜய் வீட்டில் 30 மணி நேரம் கடந்து நடைபெற்று வரும் வருமான வரி சோதனை… கிடைத்தது என்ன?

Published

on

Sarkar Team Agreed To Delete Controversial Dialoges

நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் 30 மணி நேரத்தை கடந்தும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி சோதனையின் போது விசாரணைக்காக, திருநெல்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யும் அழைத்து வரப்பட்டார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அதில் அசையா சொத்து ஏதேனும் வாங்கினாரா எனறு விசாரணை நடைபெற்று வருகிறது.

பிகில் திரைப்படம் 300 கோடிகள் வசூல் செய்துள்ளது, விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று ஊடகங்களில் பரவி வரும் தகவலின் பேரில் இந்த வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக நேற்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

அதன் பின்பு விஜய் அழைத்து வரப்பட்டு விசாரணை வலையத்திற்குள் உள்ளார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் கிடைக்கவில்லை. 30 மணி நேரம் கடந்து நடைபெற்று வரும் சோதனையில் மாலை முதல் மேலும் 3 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சினிமா செய்திகள்

மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!

Published

on

மாநாடு படத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா ஊரடங்கு பிறகு, சிம்பு வேகமாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தில் 30 நாட்களுக்குள் நடித்து முடித்துவிட்டு, இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் சிம்புவின் அப்பா, டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அது அவர்களது குடும்பத்துக்குக் கவுரக் குறைச்சலாக நினைக்கிறார் அவரது மனைவி உஷா ராஜேந்தர். அதை சரி செய்ய, தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது உள்ள நிதி சிக்கலைத் தீர்க்க சிம்பு இலவசமாக ஒரு படத்தை நடித்துக் கொடுப்பார். அந்த படத்தைச் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் நின்று தோற்ற ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உதவு முன்வந்துள்ளது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான கதை கொரோனா ஊரடங்கின் போது மாநாடு படத்திற்குப் பதிலாகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயார் செய்யப்பட்ட கதைதான் இது என்றும், படத்திற்குப் பெயர் கூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.

இந்த படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அதை முழுவதுமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கும் போது மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்துக்கு வந்த புது சிக்கல்.. விஜய் சம்பளத்தைக் குறைப்பாரா?

Published

on

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்பட மாஸ்டர். ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வினியோகஸ்தர்கள் ஏற்கனவே மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்காக பெரும் தொகையை வழங்கிவிட்டனர்.

மறுபக்கம் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பெரும் தொகைக்கு நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. ஆனால் நாங்கள் திரை அரங்குகளில் தான் படத்தை வெளியிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வினியோகஸ்தர்களோ மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டால், தற்போது இருக்கும் சூழலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எனவே விஜய் அவர் சம்பளத்திலிருந்து ஒரு பாதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் சம்பளத்தை விட்டுக்கொடுத்தால், மாஸ்டர் படம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் இல்லை என்றால் இன்னும் தாமதம் ஆகலாம். அல்லது ஓடிடியில் கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான முடிவு எடுக்கும் பொறுப்பு இப்போது விஜய் கையில்தான் உள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தது. அது குறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நாம் தொடர்ந்து பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருகிறோம், எல்லோரும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறோம் என்று நம்புகிறோம்.

மாஸ்டர் படத்தை திரை அரங்குகளில் பார்வையாளர்கள் கொண்டாட உள்ள ஆர்வத்தை எங்களால் உணர முடிகிறது, புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை போலவே அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக மாஸ்டர் திரைப்படம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவி வருகின்றன. எங்களுக்கு பிரபல ஓடிடி சேவை வழங்குநரிடம் இருந்து பெரும் தொகைக்கு அழைப்பு வந்தது. ஆனால் திரை அரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். நெருக்கடியில் உள்ள திரைத்துறை உயிர்பிழைக்க இது தேவையான ஒன்று,

இந்த சமயத்தில் திரை அரங்கு உரிமையாளர்கள் எங்களுடன் நின்று, தமிழ் திரை துறைக்கு ஆதரவு வழங்க வேண்டும். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்க விரும்புகிறோம். பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
Uncategorized8 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)

சினிமா செய்திகள்9 hours ago

மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!

சினிமா செய்திகள்15 hours ago

மாஸ்டர் படத்துக்கு வந்த புது சிக்கல்.. விஜய் சம்பளத்தைக் குறைப்பாரா?

இந்தியா17 hours ago

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

இந்தியா19 hours ago

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!

இந்தியா21 hours ago

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்23 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (2020, நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்2 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: