Connect with us

சினிமா செய்திகள்

எனக்கு இது வரை ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு கூட வந்ததில்லை: ஷாருக் கான்

Published

on

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் கேட்ரினா கைப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறனர்.

அன்மையில் பேட்டி ஒன்றில் ஷாருக் கான் இவரது சக நடிகர்களான பிரியங்கா சோப்ரா, இர்ஃபான் கான், அனுபம் கெர், அமிதாப் பச்சன் மற்றும் ஓம் பூரி உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் இது வரை தனக்கு ஒரு முறை கூட அப்படி ஒரு வாய்ப்பு வந்ததில்லை என்றும் அதற்குத் தனக்குச் சரியாக ஆங்கிலம் தெரியாது காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

தான் இந்தி திரைப்படத்தில் நடிக்கவே விரும்புவதாகவும், சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தையினைச் சென்றடைய வேண்டும் என்று உழைத்து வருவதாகவும் ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள்

எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணம் சர்ச்சை.. பேஸ்புக்கில் வீடியோ போட்ட சரண்!

Published

on

எஸ்பிபி மருத்துவக் கட்டணம் குறித்து இணையத்தில் வெளியான சர்ச்சை தகவல் குறித்து, எஸ்பிபி மகன் சரண் பேஸ்புக்கில் காட்டமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், காந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எஸ்பிபி உடல் நலம் எப்படி உள்ளது என்று அவ்வப்போது சரண் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்துவந்தார்.

உடல் நலம் மோசம் அடைந்த போது திரைத்துறையினர், எஸ்பிபி ரசிகர்கள் என அனைவரும், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டனர். பின்னர் எஸ்பிபி உடல் நிலை சீரானதாகவும், அவரே கட்டை விரலைத் தூக்கிக் காட்டுவதும் போன்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், ஒன்றை மாதம் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, செப்டம்பர் 24-ம் தேதி எஸ்பிபி பிற்பகல் ஒரு மணியளவில் எஸ்பிபி காலமானார். இந்நிலையில் எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அதற்கான கட்டணத்தை, அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் போனது. எனவே தமிழக அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் மறுக்கக் குடியரசுத் தலைவர் எஸ்பிபி மருத்துவ கட்டணத்தைச் செலுத்த உதவியதாகவும், அதுவரை எஸ்பிபியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் அளிக்க மறுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் அந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த எஸ்.பி.பி.சரண், “எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும், என் அப்பா சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலாவுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே சில விசயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்பா ஆகஸ்ட் 5-ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்று வதந்தி ஒன்று உலாவி வருகிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காக உதவி கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் செய்தி உலாவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தைச் செலுத்தும் வரை எம்ஜிஎம் மருத்துவமனை எஸ்பிபி உடலை அளிக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

எனவே இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவை அனைத்தும் சுத்தப் பொய். ஏன் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்களை இது எப்படி பாதிக்கும் என்று புரியாமல் செய்துகொண்டு உள்ளார்கள். இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது. இப்படி வதந்திகளைப் பரப்பியவர்கள் எஸ்பிபி ரசிகர்களாக இருக்க முடியாது. அவரது ரசிகர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை எஸ்பிபி மன்னிப்பார். நானும் மன்னிக்கிறேன். ஆனால் இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்தவர் முதிர்ச்சியடைய வேண்டும். ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பக்கூடாது.

என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் திரியாது. நான் இப்போது அதுபற்றி சொல்லப்போவதில்லை. எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகமும் நானும் இணைந்து கட்டணம் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடுவோம். இது தேவையில்லாத ஒன்று. ஆனால் இதை நாங்கள் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு இருக்கும் மனவலிக்கு நடுவில் உடனடியாக, பத்திரிக்கையாளர்களை ஒன்று கூட்டிப் பேசுவதெல்லாம் எப்படி முடியும்.

மருத்துவமனையில் அப்பாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்களுடனான சந்திப்புகள் மனதில் நினைவலைகளாக உள்ளன. சிகிச்சையின் போது அப்பலோ மருத்துவமனையிலிருந்து கருவி தேவைப்படும் போது, அவர்கள் அதை அளித்து உதவினார்கள். அனைவரும் சிறந்தவர்கள். இந்த செய்தியைப் பரப்பியவரும் சிறந்தவராக மாற வேண்டும். விரைவில் மருத்துவ கட்டணம் குறித்த அறிக்கையை வெளியிடுவேன்.” என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

Continue Reading

சினிமா செய்திகள்

மண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்!

Published

on

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் உடல், 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணிக்கு உயிரிழந்தார்.

ஸ்.பி. பலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பலசுப்பிரமணியம் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Continue Reading

சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்!

Published

on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் அவருக்கு வயது 74.

பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர். அவர் ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காகத் தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்கு படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்துச் சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் ஒன்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்3 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: