சினிமா செய்திகள்
சூரிக்கு நாயகி ஆகிறாரா ஜி.வி.பிரகாஷ் தங்கை..?- வெற்றிமாறன் பட அப்டேட்


இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக நடிக்கும் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஶ்ரீ நடிகையாக விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக பவானி நடித்திருப்பார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் பவானி ஶ்ரீ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்கெனவே பிடித்துவிட்டார்.
தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் பவானி ஶ்ரீ-க்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் பவானி ஶ்ரீ கவர்ச்சி நாயகி ஆக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் யதார்த்தமான கதாபாத்திரங்களுள் ஒன்றாகவே பவானி ஶ்ரீ-யின் கதாபாத்திரம் அமைய உள்ளதாம்.
இந்தப் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ வீடியோ பாடல் வெளியீடு..!


சிவகார்த்திகேயன் நடிப்பில் மார்ச் மாதம் வெளியாக உள்ள டாக்டர் திரைப்படத்தின் ‘சோ பேபி’ பாடல் இன்று வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் டாக்டர். மார்ச் மாதம் இந்தப் படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா நாயகி ஆக நடித்துள்ளார். இவர்களுடன் குக்கு வித் கோமாளி தீபா, விஜே அர்ச்சனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ‘செல்லம்மா’ பாடல் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆகிவிட்டது. இந்த வரிசையில் தற்போது ‘சோ பேபி’ என்னும் பாடல் மீண்டும் சிவகார்த்திகேயனின் வரிகளிலேயே வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று டாக்டர் படக்குழுவினர் வெளியிட்ட ப்ரொமோ வீடியோ கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Here it is …🥳
Our Rockstar @anirudhofficial ‘s love for #Doctor 😎 #SoBaby ♥️ – https://t.co/NEGC6HsxPK@Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @ananthkrrishnan @SonyMusicSouth @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 25, 2021
சினிமா செய்திகள்
திடீர் உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் பவர்ஸ்டார்..!


கோலிவுட் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் லத்திகா என்னும் திரைப்படத்தைத் தயாரித்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா என்னும் படத்தில் நடித்து வைரல் ஆனால். அதன் பின்னரும் சில படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
நிஜ வாழ்க்கையில் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் ஒரு மருத்துவர். இடையில் பல கடன், மோசடி பஞ்சாயத்துகள் என சிக்கினாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க பவர்ஸ்டாருக்கு எப்பவும் ஒரு ஆசை இருக்கிறதாம். சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசனுக்கு இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், அவர் உடனடியாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இன்னும் முடிவுகள் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. உடல் நலன் சார்ந்தும் என்ன பிரச்னை இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கூட பவர்ஸ்டார் ஶ்ரீநிவாசன் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி- கத்ரினா கைஃப் நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு..!


கத்ரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் உடன் நடிக்கிறார். அதன் பின்னர் 6 தெலுங்கு படங்களிலும் 2 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்ப் படங்கள், கவுரவத் தோற்றங்களில் நடிக்கும் படங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை எண்ணிவிட முடியாதபடி தான் நிச்சயம் இருக்கும்.
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் அடுத்ததாக ஒரு படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தான் விஜய் சேதுபதி நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கத்ரினா கைஃப் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் முதல் பூனேவில் மெரி கிறிஸ்துமஸ் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்1 day ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்