Connect with us

சினிமா செய்திகள்

கேடிவி-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஜி.வி.பிரகாஷ்- ‘பிகில்’ அம்ரிதா படம்..!

Published

on

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் நேரடியாக கேடிவி-யில் வெளியாக உள்ளது.

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹீரோ ஆக நடிக்கும் வணக்கம்டா மாப்ள நேரடியாக கேடிவியில் வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இரண்டாவது முறையாக கடவுள் இருக்கான் குமாரு படத்தை இயக்கிய ராஜேஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். நாயகி ஆக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

இவர்களுடன் டேனி, ஆனந்த்ராஜ், பிக்பாஸ் ரேஷ்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படம் நேரடியாக கேடிவி-யில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ஐங்கரன், ஜெயில், பேச்சிலர், அடங்காதே ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

Advertisement

சினிமா செய்திகள்

மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published

on

By

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

Continue Reading

சினிமா செய்திகள்

ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்!

Published

on

By

மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இந்நிலையில் இந்தப் படம் எவ்வளவு வசூலை வாரிக் குவித்துள்ளது என்பது குறித்து தகவல் வந்துள்ளது.

மோகன் லால் நடிப்பில், ஜீத்து ஜோப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை நாள்தோறும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில் த்ரிஷ்யம் 2 படம் கோடிக் கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ரூ. 20 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 25 கோடிக்கு வாங்கி வெளியிட்டது எனத் தகவல்.

இந்த படத்தை வெளியிட ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 15 கோடி அளித்துள்ளது எனவும் உள்வட்டாரத் தகவல். இதேபோன்று தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கு ரூ. 10 கோடியை த்ரிஷ்யம் 2 தயாரிப்பு நிறுவனம் பெற்றிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை த்ரிஷ்யம் 2 தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 30 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

9) மோகன்லால்

Continue Reading

சினிமா செய்திகள்

’அருண்விஜய் 33’ திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

Published

on

By

அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படம் குறித்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இணையதளங்களில் வைரலானது. ஹரி இயக்கவிருக்கும் இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகவும் மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் அருண்விஜய், அவருடைய தந்தை விஜயகுமார், ஹரி, அவருடைய மனைவி பிரீதா, நாயகி பிரியா பவானி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இவ்வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்று நடந்த பூஜை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
தமிழ்நாடு35 mins ago

அதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு!

தமிழ்நாடு1 hour ago

4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்?

தமிழ்நாடு2 hours ago

தேமுதிக, விசிக நிலைமை என்ன? அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட்2 hours ago

IPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி!

தமிழ்நாடு2 hours ago

இன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழ்நாடு2 hours ago

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியா2 hours ago

திடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சினிமா செய்திகள்2 hours ago

மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

சினிமா செய்திகள்3 hours ago

ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்!

தமிழ்நாடு3 hours ago

திமுகவின் சட்டசபைத் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதியை அறிவித்தார் ஸ்டாலின்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு10 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி3 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending