சினிமா செய்திகள்
பாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்!


வர்மா பட சர்ச்சையைத் தொடர்ந்து மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைப் பாலா இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சூர்யா, ஆர்யா, அதர்வா உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது புதிதாக ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் புக் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் பரதேசி படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ், நாச்சியார் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எனவே ஹீரோக்களில் மாற்றமா, இல்லை ஜி.வி.பிரகாஷ் இசை மட்டும் அமைக்க உள்ளாரா என்று தெரியவில்லை.
ஆனால் பாலா தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்க வேண்டும் என்று மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறாராம்.
சினிமா செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டாரை கேலி செய்கிறாரா ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன்..?- கொதிக்கும் ரசிகர்கள்


மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளிவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து கேலி ஆக பேசியுள்ளது ரசிகர்களைக் கோபம் அடையச் செய்துள்ளது.
மாளவிகா மோகனன் மாஸ்டர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போத்கு பங்கேற்று வருகிறார். அது போன்று ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர் பேசுகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து கேலியாக கிண்டல் செய்து பேசியதாகத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் மாளவிகா, “நான் பார்த்த தமிழ்ப் படம் ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடிய நடிகை ஒருவர் முகம் நிறைய மேக் அப் போட்டுக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பார்”.
மேற்கூறிய வசனத்தை மாளவிகா பேசியதில் இருந்து அவருக்கு எதிராக ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ராஜா ராணி படத்தில் தான் நடிகை நயன்தாரா மேக் அப் போட்டுள்ளது குறித்து மாளவிகா கேலி செய்கிறார் என அவருக்கு எதிராக லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர.
சினிமா செய்திகள்
‘எங்களுக்கான பொங்கல் பரிசு ரிஷிகேஷ்’- குழந்தையின் முதல் போட்டோவை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்


இயக்குநர் செல்வராகவன் தனது குழந்தையுடன் மகிழ்ச்சிகரமாக பொங்கல் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.
இயக்குநர் செல்வராகவனுக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி மூன்றாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு செல்வராகவனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு முன்னதாகவே பெயர் யோசித்து வைத்திருந்த செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியர் குழந்தை பிறந்த உடனே பெயரும் வைத்துள்ளனர். செல்வா தனது மகனுக்கு ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்துள்ளார்.
மகன் பிறந்த ஒரே வாரத்தில் பொங்கல் விடுமுறை தொடங்கி விட்டதால் மகன் ரிஷிகேஷ் உடன் உற்சாகமாக விடுமுறையைக் செல்வா கொண்டாடி வருவதாக அவரது மனைவி சமுக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். மேலும், இதன் மூலம் பிறந்து ஒரு வாரமே ஆன மகன் ரிஷிகேஷின் புகைப்படத்தை முதன்முறையாக ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
சினிமா செய்திகள்
‘அடிச்சு ஆடணும்… இல்ல அடிபட்டு சாகணும்…’- சசிகுமாரின் “ராஜவம்சம்” டிரெய்லர்!


இயக்குநரும் நடிகருமான சசிகுமார், கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு முழு வீச்சில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் வெளி வரவுள்ள திரைப்படம் தான் ‘ராஜவம்சம்’.
சசிகுமாரைத் தவிர்த்து நிக்கி கல்ரானி, யோகி பாபு, ராதா ரவி, சதீஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கெ.வி.கதிர்வேலு படத்தை இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார்.
கிராமப் பின்னணியில், குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்லும் விதத்திலும், இயற்கையைப் பாதுகாக்கும் விதத்திலும் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சசிகுமார் திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை, கதைக் கருவாக எடுத்து உருவாக்கப்படும்.
அந்த வகையில் இந்தப் படமும் அப்படியான ஒரு சமூக மெஸேஜை சொல்லும் விதத்தில் தான் இருக்கும் என்று டிரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து கணிக்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் ஓடவில்லை.
அதே நேரத்தில் அடுத்தடுத்து அவர் கிராமப் பன்னணியில் நடித்திருக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜவம்சம், விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?