சினிமா செய்திகள்
இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!


சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன்.
சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையில் தமிழன் பாட்டு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் மீதம் உள்ள 3 பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன.
ஈஸ்வரன் பாடல்களுக்கான முன்னோட்டத்தை இங்கே பாருங்கள்:
1) தமிழன் பாட்டு
பாடகர்கள்: அணந்து, தீபக் ப்ளூ மற்றும் தமன்
வரிகள்: யுகபாரதி
2) ஈஸ்வரன் டைட்டில் பாடல்
பாடகர்கள்: அரவிந்த் ஸ்ரீநிவாஸ், தீபக் ப்ளூ மற்றும் தமன்
வரிகள்: யுகபாரதி
3) மாங்கல்யம்
பாடகர்கள்: சிலம்பரசன், ரோஷினி, தமன்
வரிகள்: யுகபாரதி
4) வெள்ளி நிலவே
பாடகர்கள்: காயத்ரி
வரிகள்: யுகபாரதி
சினிமா செய்திகள்
’அடாவடி அப்பா’ மொமென்ட்… நெகிழ்ச்சி உடன் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி!- வீடியோ


நடிகர் விஜய் சேதுபதி தனது தந்தையின் தைரிய குணம் குறித்த ஒரு நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சமுத்திரகணி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஏலே’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘அடாவடி அப்பா’ என்ற தலைப்பில் சில நிமிடங்கள் தனது அப்பாவின் அடாவடி மொமென்ட் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “சின்ன வயசுல ஒரு முற நாங்க குடும்பத்தோட குற்றாளம் போயிட்டு ரயில்ல சென்னை வந்திட்டு இருந்தோம். அப்போ ரிசர்வ் பண்ணாத பெட்டியில வரும் போது ஒரு ஆளு ரொம்ப சத்தம் போட்டு எல்லாருக்கும் இடைஞ்சல் பண்ணிட்டு இருந்தாரு. சுத்தி இருந்தவுங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில அடக்க முயற்சி செய்தும் அந்த ஆளு அமைதியாவே உட்காரல.
அப்போ பெர்த்-ல படுத்திட்டு இருந்த எங்க அப்பா வேகமா எழுந்து கால் வச்சு அந்த சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவரை எட்டி உதச்சிட்டு பேசாம படுத்துட்டாரு. அவமானம் தாங்காம அந்த நபர் பயங்கரமா கத்தி, மிரட்டல் எல்லாம் கொடுத்திட்டு அமைதியா போயிட்டாரு. சென்னை வந்ததும் எதுவும் செய்யாம அமைதியாவே போயிட்டார்’ என்றார்.
மேலும் விஜய் சேதுபதி கூறுகையில், “சென்னை வந்ததும் அந்த நபர் மிரட்டிய மாதிரி அப்பாவ எதும் செஞ்சிடுவாரோன்னு பயந்து எங்க அப்பாட்டையே கேட்டேன். அதுக்கு அவரு ‘இல்லப்பா, அவரோட கவுரவம் அந்த எடத்துல அடி வாங்கிருச்சுன்னு அந்த ஆளு கத்திட்டு இருந்தான். ஆனா அவன் ஒரு கோளைன்னு அவனுக்கே தெரியும்’ன்னு சொன்னார்” என்றார்.
அப்பாவிடம் இருந்து தான் இன்றைய வாழ்க்கையில் தான் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
#Aelay #ஏலே is a delightful tale about an ‘adaavadi’ appa & his son! Watch @VijaySethuOffl tell us about his #AdaavadiAppa @thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar@RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/UqO1vmsPU4
— Y Not Studios (@StudiosYNot) January 25, 2021
சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்ணத்த திரைப்படம் வருகிற நவம்பர் 2021-க்கு நிச்சயம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி திரை அரங்கங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்காக இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#Annaatthe will be releasing on November 4th, 2021!
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE— Sun Pictures (@sunpictures) January 25, 2021
சினிமா செய்திகள்
தான் நடிக்கும் படத்தை மொத்தக் குடும்பத்துடன் இணைந்து தயாரிக்கும் கீர்த்தி சுரேஷ்..!


குடும்பத்துடன் இணைந்து தான் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாளத்தில் ‘வாஷி’ என்னும் திரைப் படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகன் ஆக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷே தயாரித்தும் வருகிறார். கீர்த்தி சுரேஷ் மட்டுமல்லாது அவரது அப்பா சுரேஷ் குமார், அம்மா மேனகா, அக்கா ரேவதி ஆகியோர் கீர்த்தி உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
வாஷி படத்தின் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் குடும்பத்தார் ரேவதி கலாமந்திர் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நீண்ட ஆண்டுகளாகவே நடத்தி வருகின்றனர். நடிகர் கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்திலும் இயக்குநர் செல்வராகவன் உடன் இணைந்து சாணிக்காயிதம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!