சினிமா செய்திகள்
சூர்யா உடனான ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்?- வெற்றிமாறன் விளக்கம்


நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் வாடிவாசல். வாடிவாசல் என்னும் புத்தகத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் இயக்கப்பட இருந்தது. ஆனால், இந்தப் படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட வேகத்தில் நிறுத்தப்பட்டன.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “படப்பிடிப்புகள் நிறுத்தப்படவில்லை. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வாடிவாசல் படத்தை எடுக்க சுமார் 500, 1000, 2000 என மக்கள் கூட்டம் முழுவதுமாகத் தேவைப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுத் தணிந்துள்ளது.
ஆனாலும், 2000 பேரை வைத்துக் கொண்டு இந்த கொரோனா சூழலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது பெரிய ரிஸ்க். அதனால் தான் நான் சூரி உடனான படத்துக்கும் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் படத்திலும் பிஸியாகிவிட்டோம். கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதனது வீரியம் மற்றும் பயன்பாடு குறித்து முழு தெளிவு வந்த உடன் தான் வாடிவாசல் படப்பிடிப்புத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
விவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை!


பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் பல பிரபலங்கள் மரக்கன்றுகளை தங்கள் வீடுகளில் நட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகை ஆத்மிகா, நடிகர் அருண் விஜய் உள்பட பலர் மரங்கள் நடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
சினிமா செய்திகள்
எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல: பிக்பாஸ் கேபியை கேலி செய்தது யார் தெரியுமா?


பிக்பாஸ் கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் பேண்ட் கேலி செய்த நெட்டிசன் ஒருவர் கேப்ரில்லாவை கேலி செய்து கமெண்ட் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரில்லா கடைசி நேரத்தில் ஐந்து லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது என்றும் அந்த போட்டியில் அவர் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்டு ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டார் என்றும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த கமெண்ட்ஸ்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிழிந்த ஜீன்ஸ் அணிவது ஃபேஸன் என்றாலும் அளவுக்கு அதிகமான கிழிந்த ஜீன்ஸ் பிரபலங்கள் அணிந்து வருவது ஒரு கட்டத்தில் ஆபாசத்தை எட்டி உள்ளதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து கூறியுள்ளனர்.
சினிமா செய்திகள்
3வது குழந்தை பெற்று கொண்டால் சிறை அல்லது அபராதம்: நடிகையின் சர்ச்சை கருத்து!


மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ’தலைவி’ படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது டுவிட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில் மக்கள் தொகை காரணமாக இந்தியா பெரும் சிரமத்தை அடைந்து வருகிறது என்றும் 130 கோடி என்பது அதிகாரபூர்வ கணக்கு என்றும் இதோடு சட்டவிரோதமான குடியேறியவர்களை சேர்த்தால் 150 கோடிக்கும் மேல் இந்தியாவின் மக்கள்தொகை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/ ஆனால் அதே நேரத்தில் கங்கனா சரியான கருத்தை கூறியுள்ளார் என்றும் அவரது கருத்தை மத்திய அரசு சட்டமாக வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?