Connect with us

சினிமா செய்திகள்

கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!

Published

on

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தைப் பார்த்த பின்னர் மக்கள் கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவார்கள் என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

விஜய் 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். மாஸ்டர் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 2020 பொங்கலுக்குத் தான் வெளியானது. இந்த வகையில் தளபதி 65 படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

படத்தில் பூஜா ஹெக்டே- ராஷ்மிகா மந்தனா என இரண்டு ஜோடிகளும் நவாசுதின் சித்திக், வித்யுத் ஜாம்வால் என இரண்டு வில்லன்களும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் உடன் அருண் விஜய் மற்றும் பூவையார் ஆகிய இருவரும் நடிப்பது உறுதி என்று மட்டும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தளபதி 65 இயக்குநர் நெல்சன் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “தளபதி 65 படத்தில் சண்டைக் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அன்பறிவு என்னும் ஸ்டன்ட் இரட்டையர்கள் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பணியாற்ற உள்ளனர். இந்த சண்டைக் காட்சிகளைப் பார்த்த பின்னர் கே.ஜி.எஃப் ஸ்டன்ட் காட்சிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சினிமா செய்திகள்

ஓடிடியில் தனுஷின் அடுத்த படம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published

on

By

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படம் ஓடிவிட்டால் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் ஜூன் இரண்டாம் வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது ஓடிடியில் வெளியாவதில் தனுசுக்கு சம்மதம் இல்லை என்றாலும் தயாரிப்பாளர் வேறு வழியின்றி இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள், ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் மூட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை காரணமாக வேறு வழியின்றி ’ஜகமே தந்திரம்’ படத்தின் தயாரிப்பாளரை ஓடிடிக்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

திரைப்பட கலைஞர்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்பாடு செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்: தமிழிசை பாராட்டு

Published

on

By

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்தியாவில் மூன்று லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவசமாக தடுப்பூசியைப் போட ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தனது சொந்த செலவில் 45 வயதுக்கு மேல் உள்ள சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை ஏற்பாடு செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் உதவியால் இந்த நடவடிக்கையை அவர் எடுத்து உள்ளதை அடுத்து பல சினிமா கலைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்

இதனை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிரஞ்சீவி அவர்களுக்கு தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் இதோ:

 

 

 

Continue Reading

சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமணம்: வைரல் புகைப்படங்கள்

Published

on

By

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் இன்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்தவகையில் நேற்று திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில ஆண்டுகளாக ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷால் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பின் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த திருமணத்தை அடுத்து கோலிவுட் பிரபலங்கள் பலர் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்54 mins ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/04/2021)

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

ஓடிடியில் தனுஷின் அடுத்த படம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 hours ago

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 hours ago

பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்5 hours ago

IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!

கிரிக்கெட்5 hours ago

டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் செய்ய தயாராகும் ராஜஸ்தான்!

தமிழ்நாடு6 hours ago

தமிழகத்தில் இன்று 13 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் அதிகம்!

உலகம்6 hours ago

கொரோனா பீதி: இந்தியாவிலிருந்து ‘கைலாசா’-வுக்கு வரத் தடை போட்ட நித்தி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending